சளி தொல்லையில் இருந்து உடனடி நிவாரணம் பெற பூண்டு சாப்பிடுங்க...

Posted By:
Subscribe to Boldsky

ஆயுர்வேதத்தில் பூண்டு மிகவும் சக்தி வாய்ந்த ஓர் மருத்துவ பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பூண்டு உணவின் சுவையை அதிகரிக்கப்படுத்தப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த பூண்டு மழைக்காலத்தில் நாம் அதிகம் அவஸ்தைப்பட்டு வரும் சளி தொல்லையில் இருந்து நிவாரணம் தரும் என்பது தெரியுமா? இருமலில் இருந்து உடனடி தீர்வு பெற 10 எளிய டிப்ஸ்...

ஆம், பூண்டு சளி தொல்லையில் இருந்து மட்டுமின்றி, காய்ச்சல், இருமல், உயர் இரத்த சர்க்கரை, கொலஸ்ட்ரால், வயிற்ற வலி, பாம்பு கடி போன்றவற்றை குணமாக்கவும் உதவும். மேலும் ஆய்வு ஒன்றிலும் பூண்டில் உள்ள மருத்துவ குணத்தால் குடல், புரோஸ்டேட், நுரையீரல், சிறுநீர்ப்பை புற்றுநோய் போன்றவற்றை சரிசெய்ய உதவும் என்பது தெரிய வந்துள்ளது. சளி மற்றும் காய்ச்சலில் இருந்து விரைவில் குணமடைய எளிய பாட்டி வைத்திய முறைகள்!!!

இதற்கு அதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆன்டி-வைரல் தன்மைகள் தான் காரணம். சரி, இப்போது சளி தொல்லையில் இருந்து நிவாரணம் பெற்று, உடல் ஆரோக்கியம் மேம்பட பூண்டை எப்படியெல்லாம் சாப்பிடலாம் என்று பார்ப்போம். சளியில் இருந்து உடனடி நிவாரணம் தரும் சீரகம்..!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூண்டு

பூண்டு

சளி பிடித்திருக்கும் போது, பூண்டை பச்சையாக உட்கொண்டு வந்தால், சளி தொல்லையில் இருந்து விடுதலைப் பெறலாம். மேலும் அக்காலத்தில் சளி பிரச்சனைக்கு இந்த பூண்டு தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதற்கு தினமும் பலமுறை பூண்டு பற்களை ஒவ்வொன்றாக சாப்பிட வேண்டும்.

பூண்டு மற்றும் தேன்

பூண்டு மற்றும் தேன்

பூண்டை தேனுடன் சேர்த்து கலந்து சாப்பிட்டால் சளி தொல்லையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அதிலும் 2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை தேனுடன் சேர்த்து தினமும் இரண்டு முறை உட்கொண்டு வர வேண்டும்.

பூண்டு மற்றும் தண்ணீர்

பூண்டு மற்றும் தண்ணீர்

2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை ஒரு டம்ளர் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, பின் அந்த நீரைக் குடித்து வர, சளி தொல்லை அகலும்.

பூண்டு மற்றும் ஆரஞ்சு ஜூஸ்

பூண்டு மற்றும் ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு ஜூஸில் பூண்டை சேர்த்து எடுத்து வர, சளி பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைக்கும். அதற்கு 2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸில் போட்டு, இரவில் படுக்கும் முன் குடித்து வர, உடலின் வெப்பநிலை அதிகரித்து, சளியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

பூண்டு டீ

பூண்டு டீ

சளி பிடித்திருக்கும் போது பூண்டு டீ செய்து குடித்து வர, விரைவில் சளி குணமாகும். பூண்டு டீ செய்யும் போது, அத்துடன் எலுமிச்சை சாறு, தேன், இஞ்சி சேர்த்தும் குடிக்கலாம். இதனால் டீயின் சுவை அதிகரிப்பதோடு, உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, சளியில் இருந்து விடுதலை கிடைக்கும்.

பூண்டு மற்றும் தக்காளி

பூண்டு மற்றும் தக்காளி

2-3 பூண்டு பற்களுடன், 2 தக்காளியை நறுக்கி, மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து, அதில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து குடித்து வர, சளியில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும். இச்செயலை சளி நீங்கும் வரை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள்.

பூண்டு சூப்

பூண்டு சூப்

மழைக்காலத்தில் பூண்டு சூப்பைக் குடித்து வந்தால், சளி, இருமல் போன்றவை தாக்காமல் பார்த்துக் கொள்ளலாம். அதிலும் உங்களுக்கு சளி பிடிப்பது போன்று இருந்தால், ஒரு நாளைக்கு 2 -3 முறை பூண்டு சூப் குடித்து வந்தால், சளியை அப்படியே விரட்டிவிடலாம். மேலும் பூண்டு சூப் உடலுக்கு ஆற்றலை வழங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How To Use Garlic To Ease Cold

In this article, we at Boldsky will be sharing with you some of the ways you can follow to use garlic.