வீக்கமடைந்து இரத்த கசிவை ஏற்படுத்தும் ஈறுகளுக்கான சில வீட்டு சிகிச்சைகள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

வீக்கமடைந்த ஈறுகள் பிரச்சனையை ஜிஞ்சிவல் ஸ்வெல்லிங்க் (ஈறு வீக்கம்) என அழைக்கின்றனர். வீக்கமடைந்த ஈறுகள் கடுமையான வலியையும் அசௌகரியத்தையும் உண்டாக்கும். ஈறு தொற்று, காயம், அலர்ஜி போன்ற பலவிதமான காரணங்கள் தான் ஈறு வீக்கம் உண்டாவதற்கான பொதுவான காரணங்கள் ஆகும்.

பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்க அற்புதமான வழிகள்!!!

ஈறுகளில் வலி, இரத்தக் கசிவு, பற்களுக்கு இடையே இடைவெளி போன்றவைகள் தான் ஈறு வீக்கத்திற்கான பொதுவான அறிகுறிகளாகும். பல விதமான வீட்டு சிகிச்சைகளை கொண்டு ஈறு வீக்க பிரச்சனைகளை தீர்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிராம்பு

கிராம்பு

ஈறு வலி மற்றும் அழற்சிக்கு சிகிச்சை அளிக்க, கிராம்பு எண்ணெய்யை கருப்பு மிளகுடன் கலந்து அதனை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவுங்கள். வீக்கத்தை குறைக்க கிராம்பு எண்ணெய்யை நேரடியாகவும் தடவலாம். ஈறு வீக்க பிரச்சனையை போக்க கொஞ்சம் கிராம்பை மெல்லவும் செய்யலாம்.

இஞ்சி

இஞ்சி

இஞ்சியையும் உப்பையும் கொண்டு ஒரு பேஸ்ட்டை தயார் செய்யுங்கள். இதனை பாதிக்கப்பட்ட இடங்களில் நேரடியாக தடவவும். இதனால் ஈறு வீக்கமடைந்த பகுதிகளில் வலியும் வீக்கமும் குறையும்.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சை ஜூஸை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்கவும். இதனை வாயில் போட்டு தினமும் இரண்டு முறை கொப்பளிக்கவும். இது ஈறு வீக்கத்திற்கு சிகிச்சையாக அமையும். எலுமிச்சை ஜூஸில் பன்னீரை கலந்து அதனை ஒரு நாளைக்கு 2-3 முறை வாயில் போட்டு கொப்பளிக்கவும்.

உப்புத் தண்ணீர்

உப்புத் தண்ணீர்

1 டீஸ்பூன் உப்பு சேர்க்கப்பட்ட வெதுவெதுப்பான நீரை கொண்டு வாயை கொப்பளித்தால், ஈறு வீக்கத்திற்கு அது சிகிச்சையாக விளங்கும். ஆனால் ஈறு வீக்க பிரச்சனைக்கு இது தற்காலிக நிவாரணத்தை தான் அளிக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

ஈறு வீக்கத்திற்கு பேக்கிங் சோடாவையும் வீட்டு சிகிச்சையாக பயன்படுத்தலாம். பேக்கிங் சோடாவுடன் மஞ்சளை கலந்து, அதனை கொண்டு பாதிக்கப்பட்ட இடத்தில் மசாஜ் செய்யவும். ஈறு வீக்க பிரச்சனையை குணப்படுத்த இது உதவும். பல் துலக்குவதற்கும் கூட பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம்.

எண்ணெய்கள்

எண்ணெய்கள்

புதினா, டீ ட்ரீ மற்றும் சீமைச்சாமந்தி எண்ணெய் போன்ற எண்ணெய்களை கலந்து மவுத் வாஷ் ஒன்றையும் தயார் செய்யலாம். இந்த கலவையை கொண்டு வாயை கொப்பளித்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் உங்கள் டூத் பேஸ்ட்டில் சில துளி டீ ட்ரீ எண்ணெயையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த கலவையை கொண்டு தினமும் பல் துலக்கினால், ஈறு வீக்கத்திற்கு நல்ல சிகிச்சையாக அமையும்.

ஆமணக்கு விதைகள்

ஆமணக்கு விதைகள்

ஆமணக்கு விதை எண்ணெய்யுடன் சூடத்தை கலந்து பேஸ்ட் ஒன்றை தயார் செய்து அதனை வீக்கமடைந்த ஈறுகளில் காலையும் மாலையும் தடவினால் ஈறு வீக்க பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்

பாதிக்கப்பட்ட இடத்தில் கற்றாழை ஜெல்லையும் தடவலாம். இதனால் ஈறு வீக்கமும் அதனால் உண்டான வலியும் குறையும். கற்றாழை ஜெல்லை கொண்டு வாயை கொப்பளித்தாலும், ஈறு வீக்கத்திற்கு நல்ல சிகிச்சையாக அமையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home Remedies For Swollen Gums

Common symptoms of swollen gums include pain in the gums, bleeding from gums, increased interspaces between the teeth and so on. The problem of swollen gums can be cured with different home remedies.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter