ஆண்களே! உங்க இனப்பெருக்க சுரப்பியான புரோஸ்டேட்டை ஆரோக்கியமா வெச்சுக்க சில டிப்ஸ்...

Posted By:
Subscribe to Boldsky

ஆண்களின் இனப்பெருக்க அமைப்பில் உள்ள ஒரு முக்கிய சுரப்பி தான் புரோஸ்டேட். இந்த சுரப்பி சிறுநீர்ப்பைக்கு அடியில் கொட்டை வடிவில் இருக்கும். இந்த சுரப்பியின் முக்கிய செயல்பாடு விந்துக்களுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்கி பாதுகாக்கும் திரவத்தை உற்பத்தி செய்து, விந்தணுவைப் பாதுகாப்பது தான். இது சிறுநீர்ப்பையில் இருந்து ஆண்குறிக்கு புரோஸ்டேட் வழியாக சிறுநீர் குழாயின் மூலம் சிறுநீரைக் கொண்டு செல்லும். ஆகவே சிறுநீர் குழாயில்/பாதையில் ஏதேனும் தொற்று ஏற்பட்டால், அது சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகத்தை மட்டுமின்றி, புரோஸ்டேட் சுரப்பியையும் பாதிக்கும்.

ஆண்களே! புரோஸ்டேட் வீக்கம் வராம இருக்கணும்ன்னா... இதெல்லாம் மனசுல வெச்சு நடந்துக்கோங்க...

புரோஸ்டேட் சுரப்பியில் பல பிரச்சனைகள் வரக்கூடும். அதிலும் 50 வயதிற்கு பின்னர் தான் ஆண்கள் இந்த பிரச்சனைக்கு அதிக அளவில் பாதிக்கக்கூடும். அதில் புரோஸ்டேட் வீக்கம், புரோஸ்டேட் அழற்சி மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் போன்றவை குறிப்பிடத்தக்கவை. புரோஸ்டேட் சுரப்பில் ஏதேனும் தொற்றுகள் ஏற்பட்டிருந்தால், அடிக்கடி சிறுநீர் வெளியேறும், அதிலும் குறைவாகவே வெளியேறும், மேலம் வலியுடன் வெளியேறும், சிறுநீரில் இரத்தம் கலந்து வரும் அல்லது சிறுநீருடன் விந்தணு கலந்து வரும்.

இயற்கை முறையில் விந்தணுக்கள் சீக்கிரம் வெளியேறுவதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!!!

சரி, இப்போது புரோஸ்டேட்டில் தொற்றுகள் ஏற்பட்டிருந்தால், அதனை சரிசெய்ய என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தக்காளி

தக்காளி

தக்காளியில் லைகோபைன் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது புரோஸ்டேட் வீக்கம் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை குறைக்கும். மேலும் இது புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை அழிக்கக்கூடியவையும் கூட. தக்காளியை உணவில் ஆண்கள் சேர்த்து வந்தால், அடிக்கடி சிறுநீர் வெளியேற்றுவதில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

வெதுவெதுப்பான நீர் குளியல்

வெதுவெதுப்பான நீர் குளியல்

ஆண்கள் தினமும் வெதுவெதுப்பான நீரை குளியல் டப்பில் இடுப்பளவில் ஊற்றி, அதனுள் சிறிது நேரம் உட்கார்ந்து வந்தால், புரோஸ்டேட் வீக்கம் குறைவதோடு, அதனால் ஏற்படும் வலி குறைந்து, வீக்கத்தை உருவாக்கிய பாக்டீரியாக்களும் அழியும்.

பூசணிக்காய் விதை

பூசணிக்காய் விதை

பூசணிக்காய் விதையில் உள்ள பைட்டோஸ்டெரால்ஸ் என்னும் பொருள் புரோஸ்டேட்டில் உள்ள வீக்கத்தை சுருங்கச் செய்யும். மேலும் இது வீக்கத்தை உருவாக்கிய டைஹைட்ரோ டெஸ்டோஸ்டிரோனைக் குறைக்கும். ஆகவே ஆண்கள் தினமும் பூசணியைக்காய் விதையை வறுத்தோ அல்லது சாலட்டுகளில் சேர்தோ உட்கொண்டு வருவது நல்லது.

க்ரீன் டீ

க்ரீன் டீ

க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கிறது மற்றும் இது புரோஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கும். க்ரீன் டீ குடித்து வந்தால், அடிக்கடி சிறுநீர் வருவது, எரிச்சல் போன்றவை கட்டுப்படுத்தப்படுவதோடு, வீங்கிய புரோஸ்டேட் அளவும் குறையும்.

துளசி

துளசி

ஆண்கள் தினமும் சிறிது துளசி சாப்பிட்டு வந்தால், அது புரோஸ்டேட் புற்றுநோய் வருவதைத் தடுக்கும். மேலும் இது புரோஸ்டேட்டில் ஏற்பட்டுள்ள வீக்கம் மற்றும் அழற்சியையும் தடுக்கும்.

தர்பூசணி விதைகள்

தர்பூசணி விதைகள்

தர்பூசணியின் விதைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் வளமாக நிறைந்துள்ளது. இது உடல் மற்றும் சிறுநீர்ப்பையில் உள்ள டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றி, புரோஸ்டேட் தொற்றில் இருந்து விடுதலைத் தரும். அதற்கு தர்பூசணி விதையை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்த நீரை குடித்து வர வேண்டும். வேண்மெனில் அதன் விதையை பழம் சாப்பிடும் போது அப்படியே சாப்பிடலாம்.

எள்

எள்

ஆண்கள் எள் சாப்பிட்டு வந்தால், புரோஸ்டேட் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம். அதிலும் எள்ளை நீரில் ஊற வைத்து, பின் சாப்பிட வேண்டும்.

கேரட் ஜூஸ்

கேரட் ஜூஸ்

கேரட் கண்களுக்கு மட்டுமின்றி, ஆண்களின் புரோஸ்டேட் ஆரோக்கியத்திற்கும் நல்லது., எனவே ஆண்கள் கேரட் ஜூஸை தினமும் குடித்து வந்தால், புரோஸ்டேட் சுரப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளைப் போக்கலாம். குறிப்பாக நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சளில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் உள்ளது. இது புரோஸ்டேட் நோய்த்தொற்றில் இருந்து பாதுகாப்புத் தரும். மேலம் இது புரோஸ்டேட் புற்றுநோயை எதிர்த்துப் போராடி, அதன் தாக்கத்தைக் குறைக்கும். அதற்கு ஆண்கள் மஞ்சள் தூள் மற்றும் தேனை நீரில் கலந்து, குடித்து வந்தால், புரோஸ்டேட் சுரப்பியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

தண்ணீர்

தண்ணீர்

உடல் வறட்சியால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் ஆண்கள் தான். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தாலும், புரோஸ்டேட்டில் டாக்ஸின்கள் தங்கி, அது நாளடைவில் புரோஸ்டேட் சுரப்பில் எளிதில் நோய்த்தொற்று ஏற்பட வழிவகுக்கும். ஆகவே தினமும் அதிக அளவில் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஆண்கள் கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home Remedies For Prostate Problems In Men

Tamil Boldsky will share with you some home remedies for prostate problems. Have a look at some natural remedies for prostate relief and prostate problems. 
Story first published: Saturday, March 14, 2015, 12:24 [IST]