அடிக்கடி வாயு வெளியேறுவது நல்ல ஆரோக்கியத்தின் அறிகுறி!

Posted By:
Subscribe to Boldsky

வாயுத்தொல்லை என்பது பலருக்கு பெரும் தொல்லை என்பதைவிட, மானப்பிரச்சனைப் போன்றது என்பது தான் உண்மை. நான்கு பேருக்கு முன்னர் ஆபாச வார்த்தைகள் பேசினால் கூட முகம் சுழித்துக் கொண்டு சென்றுவிடுவார்கள். ஆனால், அதே நான்கு பேருக்கு முன்னர் "டமால்.." ஒரு பாம் போட்டால் சிலர் வாய்விட்டு சிரிப்பார்கள், சிலர் நமது காதுகளில் கேட்கும்படி நமட்டுச் சிரிப்பு சிரிப்பார்கள்.

சத்தமில்லாம டர்ர்ர்... விட்டு ரொம்ப நாறுதா? அதைத் தடுக்க சில டிப்ஸ்...

இந்த நமட்டு சிரிப்பு தான் பலரும் பொது இடங்களில் வாயு வெளியேறும் தருணங்களில் அடக்கிக் கொண்டு முகத்தை இறுக்கமாக வைக்கும் படி செய்கிறது. ஆனால், சமீபத்தில் ஓர் ஆய்வின் மூலம் அடிக்கடி வாயு வெளியேறுவது என்பது உங்களுக்கு சங்கோஜமாக இருப்பினும் கூட அது நல்ல உடல்நலத்திற்கான அறிகுறி என்று கண்டறியப்பட்டுள்ளது...

‪‎டர்ர்ர், புர்ர்ர் மறையும், கொழுப்பு குறையும் - ‎கொண்டைக் கடலை‬யின் அற்புத நன்மைகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல்நல நிபுணர்கள் கருத்து

உடல்நல நிபுணர்கள் கருத்து

அடிக்கடி டர்ர்ர் புர்ர்ர்ர்ர்.... என வாயு வெளி வந்துக் கொண்டே இருந்தால் அந்த நபரின் மனநிலை அந்தோ பரிதாபம். ஆனால், கவலை தேவையில்லை, இது நல்ல உடல்நலத்தின் அறிகுறி தான் என கோபன்ஹேகன் பல்கலைக்கழகம் மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

முழு தானிய உணவுகள்

முழு தானிய உணவுகள்

முழு தானிய உணவுகள் அதிகம் உட்கொள்வோருக்கு இவ்வாறு நாள் முழுக்க வாயு வெளிவரும். இதனால் அவர்களுக்கு வயிறு சார்ந்த அல்லது குமட்டல் பிரச்சனை ஏற்படுவதில்லை எனவும் ஆய்வாளர்கள் கூறியிருக்கின்றனர்.

முழு தானிய உணவு சாப்பிடாதவர்கள்

முழு தானிய உணவு சாப்பிடாதவர்கள்

அதே போல உணவு முறையில் அதிகமாக முழு தானிய உணவுகளை சேர்த்துக் கொள்ளாதவர்களுக்கு தான் குமட்டல் போன்ற உடல் பிரச்சனைகள் ஏற்படுகிறது எனவும் ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

நார்ச்சத்து அதிகம்

நார்ச்சத்து அதிகம்

முழு தானிய உணவுகளில் நார்ச்சத்து அதிகம். இது, செரிமானத்தை சரிசெய்தி, ஜீரண கோளாறு ஏற்படாமல் காக்கிறது. மற்றும் இது உடல் வலிமையையும் ஊக்குவிக்கிறது.

கோபன்ஹேகன் பல்கலைக்கழகம்

கோபன்ஹேகன் பல்கலைக்கழகம்

கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த வுல்ஹோம் எனும் ஆய்வாளர் நடத்திய ஆய்வில் தான் இந்த தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த ஆய்வில் 75 பேர் பங்கெடுத்துக் கொண்டனர். இதில் முழு தானிய உணவை சாப்பிடுபவர்களுக்கு அடிக்கடி வாயு வெளியேறினாலும் அவர்களது உடல்நலன் மேலோங்குகிறது என கண்டறிந்தனர்.

வுல்ஹோம் கூறுகையில்

வுல்ஹோம் கூறுகையில்

இந்த ஆய்வு குறித்து, "பொது இடங்களில் வாயு வெளிவரும் போது சங்கோஜமாக இருப்பினும் கூட, இது நல்ல உடல்நலத்தின் அறிகுறி என்பதை நாம் மறந்துவிட கூடாது. மேலும், வாயுவை வெளிப்படுத்தாமல் அடக்குதல் தான் பெரும் தவறு " என்றும் வுல்ஹோம் கூறியுள்ளார்.

நன்மைகள்

நன்மைகள்

இதன் முந்தைய ஆய்வுகளில், முழு தானிய உணவுகள் உட்கொல்வதால், நீரிழிவு, இதய பாதிப்புகள் மற்றும் உடல் பருமன் அதிகரிப்பு போன்றவற்றை தவிர்க்க முடியும் என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே, முடிந்த வரை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களாவது முழு தானிய உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Farting frequently is a sign of good health

Do you know Farting frequently is a sign of good health? Read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter