நாற்பது வயதில் ஃபிட்டாக இருக்க கடைப்பிடிக்க வேண்டிய எளிய டிப்ஸ்!

Posted By:
Subscribe to Boldsky

நாற்பது வயதென்பது மெல்ல, மெல்ல உங்கள் ஆரோக்கியமும், உடலும் சரிவை மேற்கொள்ளும் வயதாகும். இந்த நேரத்தில் தான் நீங்கள் வலிமையாக இருக்க வேண்டும். இது நீங்கள் வாழ்கையின் பாதி கிணறை தாண்டிய நிலையாகும். மீதி கிணறையும் தாண்ட நீங்கள் தான் உங்கள் உடல் வலிமையை பாதுகாக்க வேண்டும்.

இந்த நாற்பதை நீங்கள் சரியாக கடந்துவிட்டால், பின் அறுபதை வரை எந்த கவலையும் இன்றி வாழலாம். இதற்காக நீங்கள் ஒன்றும் கார்கில் போர் அளவுக்கு மெனக்கெட தேவையில்லை, உங்கள் அன்றாக வாழ்க்கையில் சின்ன சின்ன மாற்றங்கள், பழக்கங்களை ஏற்படுத்திக் கொண்டாலே போதும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அரை மணிநேர நடைபயிற்சி

அரை மணிநேர நடைபயிற்சி

தினமும் தவறாது அரை மணி நேரமாவது நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். முடிந்தால் உங்கள் நண்பரையும் உடன் சேர்த்துக் கொள்ளுங்கள், இது உங்களுக்கு இது ஒரு வேலையாக அல்லாமல், ஜாலியாக இருக்க உதவும். முடிந்தால் காலை வேளையில் காய்கறி வாங்கிக் கொண்டு கூட வரலாம். வீட்டு வேலையும் செய்தது மாதிரி இருக்கும், உடல்நலனும் அதிகரிக்கும்.

நடைபயிற்சியின் செல்லும் போது தண்ணீர்

நடைபயிற்சியின் செல்லும் போது தண்ணீர்

நடைபயிற்சி மேற்கொள்ளும் போது மறவாமல் தண்ணீர் பாட்டில் எடுத்து செல்லுங்கள். வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்ய வேண்டாம், கொழுப்பு குறைவான பிஸ்கட் அல்லது ஒரு ஆப்பிள் சாப்பிட்டுவிட்டு செய்யுங்கள்.

காலை / இரவு உணவு

காலை / இரவு உணவு

காலை மற்றும் இரவு உணவு சாப்பிட்ட உடனேயே நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டாம். சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் அமர்ந்திருந்துவிட்டு பிறகு நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதால் உங்கள் செரிமானம் சீராக நடக்க உதவும்.

படிகளை தேர்வு செய்யுங்கள்

படிகளை தேர்வு செய்யுங்கள்

லிப்ட்டை தவிர்த்துவிட்டு படிகளை தேர்வு செய்யுங்கள். இது உங்கள் உடல்நலனை ஊக்குவிக்கும் சிறந்த உடற்பயிற்சி ஆகும்.இந்த ஒன்றை நீங்கள் தினசரி கடைப்பிடித்தாலே, உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு கரைந்துவிடும், இதயம் சீராக இயங்க தொடங்கிவிடும்.

யோகா பயிற்சி

யோகா பயிற்சி

தினமும் காலையில் குறைந்தது அரைமணி நேரமாவது ஸ்ட்ரெச்சிங் அல்லது யோகா பயிற்சி மேற்கொள்ளுங்கள் இது உங்கள் தசைகளை இலகுவாக உணர உதவுவது மட்டுமின்றி, உங்கள் உடல் சுறுசுறுப்பாக இயங்கவும் பயனளிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Easy Tips To Stay Fit At 40

Everyone should know about this easy tips to stay fit at 40, Take a look.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter