For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மனிதர்களுக்கு கிறுக்கு பிடிப்பது ஏன் என்று தெரியுமா?

|

பழைய திரைப்படங்களில், பல முறை நாம் பார்த்த காட்சி தான் இது, "ஒவ்வொரு பௌர்ணமி அன்னிக்கும் இவளுக்கு அடிக்கடி இப்படி தான் கிறுக்கு புடிச்சுக்கும், திடீர்'ன்னு ஒரு மாதிரி ஆயிடுவா.." என்று கூறி காட்சிகளை நகர்த்துவார்கள். திரையில் ஓர் பெண் பேய் பிடித்தது போல திரியும்.

நாடி ஜோதிடத்தின் வரலாற்று இரகசியங்கள் மற்றும் உண்மை தகவல்கள்!!!

ஆம், பௌர்ணமி கெட்ட சகுனம் என்பார்கள், சிலர் மேற்கூறியவாறு நிலையற்று இருப்பார்கள். இது ஏன்? இது உண்மையா, கட்டுக்கதையா என்று யாருக்கும் தெரியாது. ஒருவேளை அதிகமாக கெடுதல் விளைவித்ததால் தான், அன்றைய நாட்களில் அதிக பூஜை செய்யப்படுகிறதோ என்றும் சிலர் வினாவுவது உண்டு.

சரி, அதற்கும் மனிதர்களின் நிலையற்ற, கிறுக்கு பிடித்தார் போல ஆவதற்கும் என்ன சம்மந்தம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜோதிட நிபுணர்களின் பார்வை

ஜோதிட நிபுணர்களின் பார்வை

இதை பற்றி ஜோதிடர்கள், "மனித மனநலத்திற்கும் பௌர்ணமி நாளான முழு நிலா தினத்திற்கும் ஓர் இணைப்பு இருக்கிறது. பல நூற்றாண்டுகளாக இதற்கும் குற்றம், தற்கொலை, மனநல பாதிப்பு மற்றும் மனித ஓநாய் போன்றவைக்கு இணைப்பு உள்ளதாகவும் கூறுகிறார்கள்.

காரணம் என்ன

காரணம் என்ன

முழு நிலா நாளான பௌர்ணமி அன்று மனிதர்களின் மனநலம் பாதிப்படைவதனால் தான் இவ்வாறான குற்றங்கள் மற்றும் தவறுகள் நடக்கிறது.

கருத்தரிப்போடு சார்ந்திருப்பது

கருத்தரிப்போடு சார்ந்திருப்பது

அதே போல, நிலவுக்கும், பெண்களின் கரு சுழற்சி நாட்களுக்கும் ஓர் இணைப்பு இருக்கிறதாம். கரு சுழற்சி நாட்களும், நிலவின் சுழற்ச்சி நாட்களும் ஏறத்தாழ 27 நாட்கள் தான்.

பிரசவத்தை தவிர்த்தது

பிரசவத்தை தவிர்த்தது

இதனால் தான், பௌர்ணமி நாள் அன்று பிரசவம் பாராமல் இருந்திருக்கின்றனர். ஏனெனில், பௌர்ணமி நாள் அன்று பிரசவம் பார்த்தாலோ அல்லது பிள்ளை பிறந்தாலோ நல்லது இல்லை என்றும், தாய் அல்லது பிள்ளை இருவரில் யாராவது இறந்துவிடுவார்கள் என்றும் கூறுகிறார்கள்.

ஆன்மீகவாதிகளின் பார்வை

ஆன்மீகவாதிகளின் பார்வை

ஆன்மீகவாதிகள் பௌர்ணமி மற்றும் அமாவாசையில் மனித மனநிலையில் சில வித்தியாசங்கள் இருப்பதாக கூறுகின்றனர். பௌர்ணமி நாளை விட, அமாவாசை நாளில் தான் மனிதர்களின் மனநிலை பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

தீர்வுகள்

தீர்வுகள்

பரிகார பூஜைகள், வேண்டுதல்கள் மற்றும் ஆன்மீக செயல்பாடுகள் என ஆன்மீக வழியில் இதற்கான தீர்வுகள் நிறைய இருப்பதாக கூறுகிறார்கள்.

பொருள் வாங்குவது தவிர்த்திடுங்கள்

பொருள் வாங்குவது தவிர்த்திடுங்கள்

இந்த நாட்களில் புதிய செயல்களில் ஈடுபடுவது, பொருள்கள் வாங்குவது, விற்பதை தவிர்த்திட வேண்டும் என்று கூறுகிறார்கள். பௌர்ணமி, அமாவாசை நாட்களில் இருந்து, இரண்டு நாட்கள் முன்னர் அல்லது பின்னர் முக்கிய வேலைகளில் ஈடுபடலாம்.

நாட்களுக்கு மத்தியில்

நாட்களுக்கு மத்தியில்

பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களின் மத்தியில் ஆன்மீக பூஜை அல்லது பக்தி செயல்களில் ஈடுபடுதல் நல்லது என்று கூறுகிறார்கள். அதனால் தான் பெரும்பாலும் இந்த நாட்களில் கோவில்களில் பூஜைகள் செய்கின்றனராம்.

வளர்பிறை நாட்களில்

வளர்பிறை நாட்களில்

வளர்பிறை நாட்களில் தொழில்முறை வேலைகளில் உங்கள் செயல்பாடுகளை அதிகரித்துக் கொள்வது நல்லது, நல்ல பயன்கள் கிடைக்கும்.

அமாவாசை நாள்

அமாவாசை நாள்

அமாவாசை நாள், பேய், பிசாசு போன்ற தீய சக்திகளுக்கு உகந்த நாள், ஆகையால் இந்த நாட்களில் எதிர்வினை சக்திகளின் ஆதிக்கம் அதிகரித்து இருக்கும். எனவே, இந்நாட்களில் எந்த காரியங்களிலும் ஈடுபட வேண்டாம், சீரிய பயன் கிடைகாது என்று கூறுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Does full moon really make people crazy?

Do you know why full moon really make people crazy? read here ,
Story first published: Friday, July 17, 2015, 15:13 [IST]
Desktop Bottom Promotion