For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சளித் தொல்லையில் இருந்து உடனடி நிவாரணம் தரும் 10 யோகாசனங்கள்!

By Viswa
|

யோகா பழந்தமிழர்கள் கண்டுணர்ந்த ஒரு மிகச்சிறந்த ஞானம். இதன் மூலம் உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் என சகல பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம். ஏன், மேல்நாட்டில் ஒருமுறை மூளையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனுக்கு யோகா பயிற்சியின் மூலம் புற்றுநோய் கட்டியையே நீக்கியுள்ளனர் என ஒரு செய்தி வெளிவந்துள்ளது.

பழந்தமிழர்கள் நமக்கு பரிசளித்த பலவற்றை நாம் இழந்துவிட்டோம் என கூறுவதை விட மறந்துவிட்டோம் என்பதே சரியாக இருக்கும். சரி, யோகா மூலம் சளியை குணப்படுத்த முடியுமா? முடியும், 1௦ யோகாசனங்களை நீங்கள் முறையாக செய்து வந்தால் சளித் தொல்லையில் இருந்து தீர்வு காணலாம். மேலும் தெரிந்து கொள்ள தொடர்ந்துப் படியுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிர்சாசனம் (Shirsasana)

சிர்சாசனம் (Shirsasana)

இந்த யோகாசனம் சற்று கடினம் எனினும் இதன் மூலமாக நாம் நமது உடல் ஆரோக்கியத்திற்கு நிறையப் பயன் பெற இயலும். இந்த ஆசனம் செய்வதின் மூலமாக உடலில் இரத்த ஓட்டம் சீரடைகிறது மற்றும் மூளைக்கு அதிக இரத்தம் செல்ல வழிவகுக்கிறது. இதன் மூலம் நம் உடலில் இருக்கும் வேண்டாத தீங்கு விளைவிக்கும் செல்களை வெளியேற்ற உதவுகிறது. இது சளித்தொல்லை நீங்க பெரியளவில் பயனளிக்கிறது.

தனுராசனம் (Dhanurasana)

தனுராசனம் (Dhanurasana)

இந்த யோகா செய்வதன் மூலமாக மார்புப் பகுதி நன்கு விரிவடைய உதவுகிறது. இது அப்பகுதிக்கு ஆக்ஸிஜன் நன்கு செல்ல வழிவகுக்கிறது. மற்றும் இந்த ஆசனம் செய்வதன் மூலம் நமது மார்பு, முதுகு, வயிர் பகுதிகள் நன்கு விரிவடைவதால் நன்றாக மூச்சு விட இந்த ஆசனம் உதவுகிறது. ஆதலால், இது நமக்கு சளித்தொல்லை வராமல் தடுக்கிறது.

ஹலாசனம் (Halasana)

ஹலாசனம் (Halasana)

இந்த ஆசனம் நன்கு புரையழற்சி (sinusitis) ஏற்படுவதை தடுக்க உதவுகிறது. ஓர் முக்கியமான குறிப்பு என்னவெனில் இந்த ஆசனம் செய்வதற்கு நம் உடலில் நல்ல வளைந்துக் கொடுக்கும் தன்மையுடன் இருக்க வேண்டும். ஹலாசனா செய்வதன் மூலம் சளித்தொல்லை குறையும்.

உஸ்தராசனம் (Ustrasana)

உஸ்தராசனம் (Ustrasana)

இந்த ஆசனம் செய்யும் போது மார்புப் பகுதி விரிவடைவதால் மூச்சுக்காற்று நன்கு உள்வாங்க பயனளிக்கிறது. இது சளித்தொல்லை மட்டுமல்லாது முதுகு வலியையும் குறைக்க உதவுகிறது.

சேது பண்டாசனம் (Setu bhandasana)

சேது பண்டாசனம் (Setu bhandasana)

இந்த ஆசனம் உங்களது மார்புப் பகுதியை நன்கு திறக்க செய்து இதயத்தில் இருந்து புதிய இரத்தத்தை எக்கி எடுத்து மூளைக்கு எடுத்து செல்ல உதவுகிறது. மற்றும் இது நுரையீரலை சுத்திகரிக்கவும் நல்ல பயனளிப்பதால் சளித்தொல்லை முற்றிலுமாக நீங்கும்.

அதோ முக சுவானசனம் (Adho Mukha Svanasana)

அதோ முக சுவானசனம் (Adho Mukha Svanasana)

இந்த ஆசனம் வெள்ளை இரத்த அணுக்களின் ஓட்டத்தை நன்கு தூண்டுவதால் உடலில் நோய் எதிர்ப்பு அதிகரிக்கிறது. இதனால் உடலில் உள்ள நச்சு கிருமிகள் அழிகின்றன.

அர்த மட்ஸ்யென்தறசனா (Ardha Matsyendrāsana)

அர்த மட்ஸ்யென்தறசனா (Ardha Matsyendrāsana)

இந்த ஆசனம் சளித்தொல்லையை நீக்குவது மட்டுமின்றி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதன் மூலமாக நம் உடலில் இருக்கும் நச்சுக் கிருமிகள் அழிந்து, ஆரோக்கியம் மேம்படுகிறது.

திர்கா சுவாசனம் (Dirgha Shwasan)

திர்கா சுவாசனம் (Dirgha Shwasan)

இந்த ஆசனம் மூக்கில் இருக்கும் அடைப்பை நீக்கி நன்கு சுவாசிக்க உதவுகிறது. இதன் மூலம் மூச்சு மற்றும் உடல் திறன் அதிகரிக்கிறது.

அனுலோமா-விலோமா (Anuloma-Viloma)

அனுலோமா-விலோமா (Anuloma-Viloma)

இந்த ஆசனம் மூக்கடைப்பை நீக்கி நெஞ்சில் இருக்கும் சளி நீங்க உதவுகிறது. நாசிப் பகுதி நல்ல ஆரோக்கியம் பெற இந்த ஆசனம் பயனளிக்கிறது.

கபல்பதி (Kapalbhati)

கபல்பதி (Kapalbhati)

இந்த வகை மூச்சுப்பயிற்சி உடலில் இருக்கும் நச்சுக் கிருமிகளை எல்லாம் நீக்கிட நல்ல முறையில் உதவுகிறது. இந்த வகை மூச்சுப்பயிற்சி நம் உடலில் உள்ள சளி கிருமிகளை முற்றிலுமாக அழிக்க உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Yoga Poses That Help You To Treat Cold

Here we going to know about yoga's, which actually helps us to relief from cold.
Story first published: Friday, February 6, 2015, 19:03 [IST]
Desktop Bottom Promotion