Latest Updates
-
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
உடல் எடையை குறைக்க உதவும் மாதுளைப்பழம்!
மாதுளையில் பல வகையான உடல்நல பயன்கள் ஒழிந்து கொண்டிருக்கிறது. மற்ற பழங்களில் அடங்கியிருக்கும் பயன்களைப் பற்றி தெரிந்த அளவுக்கு மாதுளைப்பழத்தில் அடங்கியிருக்கும் பயன்கள் பலருக்கும் தெரிவதில்லை. உடல் எடை குறைப்பு என்பது மாதுளைப்பழத்தில் உள்ள பயன்களில் முக்கியமான ஒன்றாகும்.
மாதுளைப்பழத்தில் உள்ள சத்துக்களை உள்ளடக்கிய மாத்திரைகள் கடைகளில் விற்கப்படுகிறது. அதனை உண்ணுவது முற்றிலும் பாதுகாப்பானது. இந்த மாத்திரைகளை உட்கொண்டால், சிறப்பான மற்றும் பாதுகாப்பான முறையில் உடல் எடையை குறைக்கலாம்.
இதுப்போன்று வேறு: வெந்நீருடன் தேன் சாப்பிட்டு எடையை குறைக்கலாம் வாருங்கள்!
உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு 3 முக்கிய வழிகளில் பயனை அளிக்கிறது மாதுளைப்பழம்.

ஆற்றல் திறன் செயலூக்கி
ஒருவரின் உடலில் உள்ள ஆற்றல் திறனின் அளவை அதிகரிக்க மாதுளைப்பழம் உதவுகிறது. இந்த ஆற்றல் திறன் அதிகரிப்பால், நீங்கள் எப்போதும் இருப்பதை விட கூடுதல் சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். அதிகரித்த ஆற்றல் திறனால், உங்கள் உடல் அதிக அளவிலான உடற்பயிற்சியிலும் ஈடுபட முடியும். அதனால் உடல் எடை குறைவுக்கு இது உதவுகிறது தானே?

பசியை கட்டுப்படுத்தும்
மாதுளைப்பழத்தில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. மாதுளைப்பழத்தில் உள்ள நீர்ச்சத்தால், உங்கள் உடலும் அதிகளவிலான நீர்ச்சத்துடன் விளங்கும். அதனால் உங்கள் பசியை அது கட்டுப்படுத்தும். உடல் எடையை குறைப்பதற்கு குறைவாக உண்ண வேண்டும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். பசி குறைவாக இருக்கும் போது உட்கொள்ளும் அளவும் குறையும் தானே.

கொழுப்பை எரிக்கும்
மாதுளைப்பழத்தில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் வளமையாக இருப்பதால், உங்கள் உடலில் உள்ள கொழுப்புகளை இயற்கையாகவும் பாதுகாப்பாகவும் எரிக்க உதவும்.

குறிப்பு
உடல் எடையை குறைக்க முயலும் போது, நம் உடல்நலம் எந்த விதத்திலும் பாதிக்காத வகையில், நாம் அனைவரும் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். அதனை மனதில் வைத்து பார்க்கும் போது மாதுளைப்பழ மாத்திரைகள் சிறப்பாக செயல்படும். எந்த வித பக்கவிளைவுகளும் இன்றி உங்கள் உடல் எடையை குறைக்க இது உதவும்.



Click it and Unblock the Notifications
