உடற்பயிற்சி செய்யும் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை!!!

By Boopathi Lakshmanan

உடற்பயிற்சிக் கூடங்களில் நாம் என்ன செய்ய வேண்டும் மற்றும் என்ன செய்யக் கூடாது என்ற கருத்து ஒவ்வொருவருக்கும் இருக்கும். நாம் எவ்வாறு கோதுமையை அதன் தோலில் இருந்து பிரிக்கிறோமோ அதே வகையில் நல்லதையும் கெட்டதையும் பிரித்து அறிய வேண்டியிருக்கிறது.

ஆரோக்கியத்தை பற்றி நாம் நிறைய தெரிந்து வைத்திருக்கிறோம் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கலாம். நமது நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள் அல்லலது தொலைக்காட்சியில் கண்டு தெரிந்து கொண்டவை என நம்பத்தகாத இடங்களிலில் இருந்து நாம் சேகரிக்கும் தவறான தகவல்களைக் கேட்டு அதை செயல்படுத்துவதன் மூலம் தான் காயங்கள் அதிகளவில் ஏற்படுகின்றன என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே நீங்கள் கேட்பதை எல்லாம் இனி நம்பாமல் இருப்பது நலமே.

உடற்பயிற்சி செய்வது தொடர்பான பல கட்டுக்கதைகள் உள்ளதால் தான் அவற்றை பின்பற்றி காயங்கள் ஏற்படுவதும் மற்றும் அதைத் தொடர்ந்து நீங்கள் உடற்பயிற்சி செய்வதை நிறுத்தவும் வேண்டியுள்ள ஏன்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். கீழ் வரும் பகுதியில் உடற்பயிற்சி பற்றிய சில தவறான கட்டுக்கதைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாலைகளில் ஓடுவதை விட திரெட் மில்லில் பயிற்சி செய்வதன் மூலம் முழங்காலில் அழுத்தம் கிடைக்கிறது

சாலைகளில் ஓடுவதை விட திரெட் மில்லில் பயிற்சி செய்வதன் மூலம் முழங்காலில் அழுத்தம் கிடைக்கிறது

நீங்கள் சாலையில் ஓடினாலும் வீட்டில் உள்ள திரெட் மில்லில் ஓடினாலும் கால் மூட்டு தாங்கும் உடல் பாரம் ஒன்றே. ஓடுவது நிச்சயம் மூட்டுகளை தாக்கும். ஏனெனில் உடல் எடை முழுவதும் நமது கால் மூட்டுகளையே நம்பியுள்ளது. இதனால் தான் அதில் அழுத்தம் ஏற்படுகிறது. ஓடிக் கொண்டிருப்பதை விட வேறு வேறு பயிற்சிகளை மாற்றி மாற்றி செய்யும் பொது இத்தகைய அழுத்தங்களை குறைக்க முடியும்.

ஆப்ஸ் (கீழ் வயிறு) எந்திரங்கள் வயிற்றின் கொழுப்பை கறைக்க உதவுகின்றன

ஆப்ஸ் (கீழ் வயிறு) எந்திரங்கள் வயிற்றின் கொழுப்பை கறைக்க உதவுகின்றன

வயிற்றில் சேர்ந்திருக்கும் கொழுப்பை கறைப்பதற்கான விளம்பரங்கள் ஏராளமாக வந்து கொண்டு தான் உள்ளன. எத்தகைய கடினமான கொழுப்பாக இருந்தாலும் இந்த எந்திரத்தை பயண்படுத்தினால் குறையும் என்று கூறும் விளம்பரதாரர்களை நம்பாதீர்கள். இத்தகைய எந்திரம் வயிற்று தசைகளை உறுதிபடுத்தி உங்கள் அமரும் தன்மையை சரி செய்கிறது. ஆனால் உடல் எடையை குறைப்பதற்கு நாம் உடற்பயிற்சி மேற்கொண்டு சரியான உணவு முறையை பின்பற்றினால் தான் நிச்சயம் கொழுப்பு கரையும். இதயம் மற்றும் உடலை உறுதிப்படுத்தும் உடற்பயிற்சிகளை செய்து வருவதன் மூலம் நம் உடலில் உள்ள அனைத்து கொழுப்புகளின் அளவையும் குறைக்க முடியும் என்று நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

ஏரோபிக்ஸ் பயிற்சி செய்து முடித்த பின்னும் கூட அது உடலுக்கு வலு சேர்க்கும்

ஏரோபிக்ஸ் பயிற்சி செய்து முடித்த பின்னும் கூட அது உடலுக்கு வலு சேர்க்கும்

இந்த கருத்து ஒரளவு உன்மை தான். ஆனால் நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளும் அளவிற்கு இது பெரிய உண்மை அல்ல. அதாவது ஏராபிக்ஸ் உடற்பயிற்சி செய்து முடித்த பின் உடலில் உள்ள கலோரிகள் சற்றே அதிகமாக எரிக்கப்படுகின்றன ஆனால் அது நீங்கள் கணக்கிடும் அளவிற்கு மிக அதிகமான அளவு கிடையாது. அதாவது வழக்கமாக குறையும் கலோரிகளுடன் 20-30 கலோரிகள் மட்டுமே அதிகமாக எரிக்கப்படும்.

உங்கள் எடையை நீச்சலடிப்பதன் மூலம் வேகமாக குறைக்கலாம்

உங்கள் எடையை நீச்சலடிப்பதன் மூலம் வேகமாக குறைக்கலாம்

நுரையீரலின் திறனை அதிகரிக்கவும், தசைகளை உறுதிப்படுத்தவும் மற்றும் உங்களை மன அழுத்தத்திலிருந்து விடுவிக்கவும் கூட சிறந்த பயிற்சியாக நீச்சல் பயிற்சி மிகவும் உதவியாக இருக்கிறது. ஆனால் உடல் எடையை நீச்சல் பயிற்சி வேகமாக குறைக்கும் என்ற செய்தி பொய்யானது. நீங்கள் தண்ணீரில் இருப்பதால் அதன் ஆதரவுடன் உங்கள் உடல் மிதக்கிறது. எனவே வழக்கத்திற்கு குறைவான வேலையையே உடல் செய்கிறது. மேலும், நீச்சலடித்த பின்னர் அதிகமாக பசி எடுக்கும். இந்த பயிற்சி மேற்கொண்டால் நாம் நிச்சயம் அதிக அளவு உணவு உண்ணும் நிலை ஏற்படும் - எடையும் வேகமாக குறையாது.

எல்லா வகை இடுப்பு வலிக்கும் யோகா செய்வதன் மூலம் நிவாரணம் உண்டு

எல்லா வகை இடுப்பு வலிக்கும் யோகா செய்வதன் மூலம் நிவாரணம் உண்டு

உடலை நீட்டுதல் மற்றும் யோக நிலைகளில் அமருதல் போன்று யோகா செய்வதன் மூலம் முதுகு வலியை நிவாரணிக்க உதவுகிறது. எனினும், உங்களுடைய முதுகு வலி தேய்ந்த எலும்புகளாலோ அல்லது அது போன்ற வேறு பிரச்சனைகளாலோ பாதிக்கப்பட்டிருந்தால் யோகா அதற்கு பதில் நிவாரணி கிடையாது. நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் மருத்துவரிடம் சென்று யோகா செய்தால் அது உங்களுக்கு உதவியாக இருக்குமா என் விபரமாக தெரிந்து கொள்ள வேண்டியது தான்.

உடற்பயிற்சி செய்யும் போது வியர்வை அவசியம் வர வேண்டும்

உடற்பயிற்சி செய்யும் போது வியர்வை அவசியம் வர வேண்டும்

உடற்பயிற்சி அல்லது வொர்க் அவுட் செய்யும் போது வியர்வை வர வேண்டும் என்று அவசியம் கிடையாது. வியர்வை இல்லாமலே கூட நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது பல கலோரிகளை எரித்திட முடியும். அது சிறிது தூரம் நடக்கும் நடை பயிற்சியாக இருந்தாலும் சரி அலல்து எடைகளை தூக்கி பயிற்சி செய்தாலும் சரி கலோரிகள் எரிக்கப்படும் - வியர்வை இல்லாமலே.

இடைவெளி விட்டு உங்கள் பயிற்சியைத் தொடருதல்

இடைவெளி விட்டு உங்கள் பயிற்சியைத் தொடருதல்

விட்டதை வெகு சீக்கிரம் பிடிக்கும் விஷப் பரிட்சையை உடற்பயிற்சியில் செயல்படுத்தாதீர்கள். உங்களுக்கு அதனை செய்யும் போது சரியாக உணர்ந்தாலும் கூட, சீக்கிரம் இலக்கை அடைய வேண்டும் என்ற நோக்கில் உங்கள் உடலை காயப்படுத்துகிறீர்கள் என்று தான் அர்த்தம். சில நாட்கள் அல்லது வாரங்கள் விடுமுறைக்குப் பின் மீண்டும் உடற்பயிற்சியை துவங்கினால் உங்களுக்கு தினமும் செய்யும் பழைய உடற்பயிற்சியை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். இவ்வாறு உடனடியாக கடினமான உடற்பயிற்சிகளை செய்யத் துவங்கும் போது அந்நேரத்தில் மிக ஆனந்தமாக இருக்கலாம் ஆனால் அதன் விளைவு காலப்போக்கில் மட்டுமே தெரியும்.

இயந்திரங்கள் தவறு இழைக்காது

இயந்திரங்கள் தவறு இழைக்காது

உடற்பயிற்சி இயந்திரம் நமது உடலை சரியான முறையில் தானாகவே வைத்து விடும் என்ற எண்ணம் நமக்கு தோன்றலாம். ஆனால் நமது உடல் எடைக்கேற்பவும் உயரத்திற்கு ஏற்பவும் அந்த இயந்திரத்தை தயார் செய்தால் மட்டுமே அந்த இயந்திரம் நமது உடலை சரியாக வைக்கும். ஆகவே உடற்பயிற்சி நிபுணரைக் கொண்டு எந்த வகை உடற்பயற்சி உங்களுக்கு சரியானது என்பதை அறிந்து செயல்பட்டால், உங்களுக்கு எந்த வித காயங்களும் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

வலி ஏற்படுவது நன்றே

வலி ஏற்படுவது நன்றே

வலியில்லாமல் ஆதாயம் இல்லை என்ற கூற்றை நம்பாதீர்கள். பல நாட்கள் பயிற்சிக்கு பின் தீவிர வலி வரும் போது அதை சாதாரண வலி தான் என்று எண்ணி மேலும் பயிற்சி செய்வது நல்லது கிடையாது. ஒரு பயிற்சியை மேற்கொள்ளும் போது உங்களுக்கு வலி வரக்கூடாது என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே, நீங்கள் உடற்பயிற்சியை தவறாக செய்திருக்கலாம் அல்லது காயத்தில் அழுத்தம் கொடுத்திருக்கலாம். அதன் காரணமாகவே வலி ஏற்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion