For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆளி விதை சாப்பிடுங்க... நீரிழிவு மற்றும் இதய நோயை கட்டுப்படுத்துங்க...

By Boopathi Lakshmanan
|

ஆரோக்கியமாக சாப்பிடுதல் மற்றும் வாழுதல் ஆகிய விஷயங்களில் கவனம் செலுத் வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்று வரும் இந்த காலத்தில், ஆளி விதைகளை (Flax Seeds) தங்களுடைய உணவுகளில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும் என்பதை விளக்குவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும். இந்த சிறிய, பழுப்பு நிற விதையில் ஊட்டச்சத்துக்கள் மிகுந்திருக்கின்றன. நமது வாழ்வியல் முறையால் வரக் கூடிய பல்வேறு நோய்களில் இருந்து தீர்வு தரும் விஷயமாக ஆளி விதை உள்ளது.

உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் 20 வண்ணமயமான உணவுகள்!!!

'நல்ல கொழுப்பு' என்று அழைக்கப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உள்ளதாலும், ஆக்சிஜன் எதிர்ப்பு பொருட்கள் உள்ள லிக்னன்களும், ஈஸ்ட்ரோஜன் மற்றும் நார்ச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளதாலும் ஆளி விதை மிகச் சிறந்த நிவாரணப் பொருள் என்பதில் ஐயமில்லை. இந்த கட்டுரையில் ஆளி விதையால் தீர்வு காணக் கூடிய சில நோய்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீரிழிவு

நீரிழிவு

2 ஆம் வகை நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மேம்படுத்தும் திறன், ஆளி விதையில் உள்ள லிக்னன்களுக்கு உள்ளது. தினந்தோறும் சிறிதளவு ஆளி விதைகளை சாப்பிட்டு வந்தால், இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை நெடுங்காலத்திற்கு முறையாக பராமரிக்க முடியும். நீரிழிவு நோயை தடுக்கும் முறைகளை அறிய மேலும் படியுங்கள்.

இதய நோய்

இதய நோய்

ஆளி விதையிலுள்ள ஆக்சிஜன் எதிர்பொருட்கள் எரிச்சலுக்கு எதிரான குணம் கொண்டிருப்பதால், இதயத்தை இலகுவாக வைத்திருக்க உதவுகின்றன. இரத்த அழுத்தத்தின் விளைவுகளை குறைக்கவும் மற்றும் இதயத் துடிப்பை சமனப்படச் செய்யவும் ஆளி விதைகள் உதவுகின்றன. தமனிகளில் கறைகள் ஏற்படுவதையும் மற்றும் தமனிகள் கடினப்படுவதை குறைக்கவும் ஆளி விதைகள் உதவுகின்றன. 'LDL' அளவு அல்லது 'மோசமான கொழுப்புகளை' முறையாக பராமரிக்கவும் ஆளி விதைகள் உதவுவதால் நீரிழிவு, உடற்பருமன் மற்றும் இதய நோய் போன்றவற்றிற்கு உற்ற தீர்வாக ஆளி விதை உள்ளது.

புற்றுநோய்

புற்றுநோய்

ஆளி விதையில் நிறைந்திருக்கும் ஆக்சிஜன் எதிர் பொருட்களும், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் காலன் புற்றுநோய் ஆகியவற்றிலிருந்து நம்மைக் காக்கும் அரண்களாக உள்ளன. ஹார்மோன்களை தூண்டக் கூடிய தன்மையுள்ள கட்டிகளிலிருந்தும் (Tumours) ஆளி விதையில் உள்ள லிக்னன் பொருள் பாதுகாக்கிறது. எடுத்துக்காட்டாக, மார்பகங்களில் உள்ள கட்டிகள். இதோ புற்றுநோய் பற்றி பொதுவாக கேட்கப்படும் அனைத்துக் கேள்விகளுக்கும் மருத்துவ வல்லுநரின் பதில்கள்.

எரிச்சல்

எரிச்சல்

ஆளி விதையின், ஆல்பா லினோலெனிக் அமிலம் என்ற பொருளுடன் சேர்ந்து ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் மற்றும் லிக்னன்களும் கூட்டாக சேர்ந்து எரிச்சலுக்கு எதிரான செயல்பாடுகளை திறமையுடன் செய்கின்றன. இவை எரிச்சலை ஏற்படுத்தும் காரணிகளை தடுக்கும் பணியை செய்து வருகின்றன. இது குறிப்பாக, ஆர்த்ரிடிஸ் மற்றும் பர்கின்சன் நோயால் தாக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு நல்ல நிவாரணமாக இருக்கும்.

ஹாட் ப்ளாஷ்கள்

ஹாட் ப்ளாஷ்கள்

மாதவிடாய் பருவத்தில் இருக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனையாக ஹாட் ப்ளாஷ் உள்ளது. ஒரு தேக்கரண்டி ஆளி விதையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இந்த பிரச்சனை வருவதை குறைத்திட முடியும். இந்த வழிமுறையை பயன்படுத்திய பெண்களில் 57மூ பேருக்கு ஹாட் ப்ளாஷ் பிரச்சனை ஏற்படுவதும் மற்றும் அதன் தீவிரமும் குறைந்துள்ளது என்று ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. ஆளி விதையில் உள்ள ஆக்சிஜன் எதிர்பொருட்களின் குணம் ஹார்மோன் சமநிலையற்ற தன்மையை வரைமுறைப்படுத்துவதால், ஹாட் ப்ளாஷ் பிரச்சனை குறைகிறது என்று நம்பப்படுகிறது. இதோ மாதவிடாயை எதிர்கொள்வதற்கான சில டிப்ஸ்கள்.

உணவில் ஆளி விதைகளை சேர்த்துக் கொள்ள டிப்ஸ்

உணவில் ஆளி விதைகளை சேர்த்துக் கொள்ள டிப்ஸ்

தினமும் காலையில், வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவிற்கு ஆளி விதை பொடியை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் பலன் அளப்பரியதாக இருக்கும். மாறாக, இந்த விதையை அரைத்து சக்தி மற்றும் புத்துணர்வூட்டும் சாறாகவும் குடிக்கலாம். இதனை சமைக்கும் போது சேர்த்துக் கொள்ள விரும்பினால், நீங்கள் தயாரிக்கும் உணவின் மேல் ஒரு தேக்கரண்டி ஆளி விதை பொடியை தூவி விட்டால் போதும். இந்த பொடியை நேரடியாக சூடான எண்ணெயில் போட வேண்டாம். ஏனெனில், இந்த கலவை பயன்படுத்த ஏற்றதாக இருக்காது. அதிகபட்சமாக இருக்கும் வெப்பம், ஆளி விதையின் ஆரோக்கிய பலன்களை வெகுவாக குறைத்து விடும். எனினும், அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்ற பழமொழியை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். என்னதான் ஆரோக்கிய பலன்களை கொடுத்தாலும், ஒரு நாளைக்கு 2 தேக்கரண்டிக்கு மேல் ஆளி விதைகளை சாப்பிட வேண்டாம் என்பது வல்லுநர்களின் கருத்தாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Flaxseeds Can Help Control Diabetes, Heart Disease

With the increasing emphasis on eating and living healthy, there has been a lot of talk about including flaxseed into one’s diet. This tiny, brownish, flat seed is packed with nutrients and could help eradicate a number of lifestyle diseases that are on the rise these days.
Story first published: Thursday, March 27, 2014, 19:54 [IST]
Desktop Bottom Promotion