For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குறட்டையை விரட்டும் சூப்பரான உணவுகள்!!!

By Boopathi Lakshmanan
|

குறட்டை விடுவது ஒரு சிரிப்பிற்குறிய விஷயம் கிடையாது. இதனால் உலகில் உள்ள பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை குறட்டை விடுபவர்கள் தங்களை மட்டுமல்லாமல், தங்களுடைய துணைவர்களையும் பாதிக்கின்றனர். ஆண் பெண் யாராக இருந்தாலும் குறட்டை விடுவது இருவருக்கும் வரும் பிரச்சனையாக அமைகின்றது. இதை செய்தோம் என்று யாரேனும் கூறும் போது மிகுந்த இக்கட்டான நேரத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

குறட்டை வருவதற்கு பல காரணங்கள் உண்டு என்பது தான் இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயமாகும். உடல் பருமன், தொண்டை அடைப்பு மற்றும் தொண்டை தசையிலுள்ள தளர்வு மற்றும் வீக்கம் என பலவற்றை குறட்டைக்கு காரணமாக சொல்லலாம். மூச்சு விடும் போது தொண்டையில் உள்ள மெல்லிய தசை ஆடுவதால் குறட்டை சத்தம் வருகின்றது.

இதுப்போன்று சுவாரஸ்யமாவை: குறட்டை சத்தம் அதிகமா இருக்கா? அத நிறுத்த இதோ சில டிப்ஸ்...

குறட்டை விடுவது நமக்கு மிகுந்த வருத்தம் தரும் காரியமாகும். சில தம்பதியர் குறட்டையினால் பிரிந்து விடுகின்றனர் என்பது கவலைப்படும் விஷயமாகும். ஆனால் இது ஒரு சிறிய பிரச்சனை தான். நமது உணவு பழக்கத்தில் ஒரு சில மாற்றங்கள் செய்தால் போதும் நிச்சயம் குறட்டையை விரட்ட முடியும். குறட்டையை கட்டுப்படுத்தும் உணவுகளை பற்றி இங்கு கொடுத்துள்ளோம். இந்த குறிப்புகளைப் பயன்படுத்தி குறட்டையை நிறுத்தும் பணியில் எளிதில் செய்யலாம். குறட்டையை விரட்ட பயன்படுத்த வேண்டிய இந்த குறிப்புகளில், உணவுப் பழக்கத்தை மேலாண்மை செய்வது முக்கியமான இடத்தைப் பெறுகிறது.

குறட்டை வருவதற்கு காரணமாக நமது உணவு பழக்கமே உள்ளது என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. கீழ் காணும் பகுதியில் உணவிற்கும் குறட்டைக்கும் உள்ள தொடர்பு குறித்து நாம் பார்க்கப் போகின்றோம். இதை தெரிந்து கொண்டு உங்களுடைய உணவு பழக்கத்தை சீர்படுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிகம் சாப்பிட வேண்டாம்

அதிகம் சாப்பிட வேண்டாம்

நல்ல உணவை உண்ட பின் உடனடியாக தூங்குவது நல்லதல்ல. சாப்பிட்ட பின்னர், சில மணி நேரம் கழித்து உறங்குவது நல்லது. இந்த இடைப்பட்ட நேரத்தில் சொஞ்சம் நடந்தால் சீக்கிரம் உண்ட உணவு எளிதில் செறிக்கும். ஆனால் இரவு நேரத்தில் அதிகம் சாப்பிடுவதை நாம் தவிர்க்க வேண்டும்.

தேன்

தேன்

குறட்டையை நிறுத்துவதற்கு தேன் ஒரு சிறந்த உணவாக உள்ளது. எரிச்சல்களையும் மற்றும் நுண்ணுயிரிகளையும் வர விடாமல் தேன் தடுக்கின்றது. இதனால் மூச்சு குழாயில் உள்ள அடைப்புகள் சரியாகி தொண்டையில் உள்ள அடைப்புகள் சரி செய்யப்படுகின்றன.

மாமிசங்களுக்கு பதிலாக மீன் சாப்பிடுங்கள்

மாமிசங்களுக்கு பதிலாக மீன் சாப்பிடுங்கள்

குறட்டையை விளைவிக்கும் பொருளாக மாமிச இறைச்சி வகைகள் உள்ளன. இத்தகைய சிவப்பு இறைச்சிகளை தவிர்த்து மீனை உணவில் சேர்த்துக் கொண்டால் குறட்டையை கட்டுப்படுத்த முடியும். இத்தகைய இறைச்சியில் உள்ள கொழுப்பு வகைகள் நமது இரத்த குழாய்களை அடைந்து தசை சுருக்கங்களை உருவாக்குகிறது. இதனால் தொண்டை வீக்கமடைகின்றது.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய்

சாச்சுரேட்டட் எண்ணெயை சாப்பிடுவதன் மூலம் அமிலம் பின்னோக்கி பாய்கின்றன. உணவுக் குழாயில் உள்ள வீக்கத்தினால் உருவாகும் அமிலம் குறட்டையை உண்டாக்குகிறது. ஆலிவ் எண்ணெய் தொண்டை பகுதியில் உள்ள இத்தகைய அடைப்புகளையும் வீக்கங்களையும் குறைத்து குறட்டையை வர விடாமல் தடுக்கின்றது.

டீ

டீ

தொண்டையில் உள்ள அடைப்புகளையும், நெருடல்களையும் நீக்கும் சிறந்த பானமாக டீ உள்ளது. அதனால் குறட்டையும் வராமல் தவிர்க்கப்படுகிறது. கெமோமில் தேயிலை, மின்ட் தேயிலை, பச்சை தேயிலை, மற்றும் டீ டிக்காசன் ஆகியவை இந்த விஷயத்தில் சிறந்த பலனை தருகின்றன. இதனுடன் எலுமிச்சை மற்றும் தேன் சேர்த்து அருந்தினால் குறட்டையை அறவே நிறுத்த முடியும்.

சோயா பால்

சோயா பால்

லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாத நபர்கள் மாட்டுப் பால் அருந்தினால் அவர்களுக்கு குறட்டை வரும் என்பது வெளிப்படையான உண்மையாகும். இது மூச்சுக் குழாய்களில் அடைப்புகளை ஏற்படுத்தி குறட்டையை அதிகப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் அதிக அளவு சளியையும் சுரக்கிறது. மாட்டுப் பாலிற்கு பதிலாக சோயா பாலை பயன்படுத்தினால் குறட்டை இல்லாத உறக்கத்தைப் பெற முடியும்

மதுவை தவிர்த்தல்

மதுவை தவிர்த்தல்

உங்களுக்கு குடிக்கும் பழக்கம் இருந்தால் நிச்சயம் எந்த ஒரு மருந்தும் குறட்டையை குறைக்க உதவாது. மது உங்களது நரம்பு மண்டலத்தை பாதிக்கும். இதனால் தொண்டையின் தசைகள் தளர்வடைகின்றன. நாம் குறட்டையை குறைக்கும் முயற்சியில் தேவையான உணவை உண்ணும் போது நல்ல பழக்க வழக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது.

பால் சேர்க்கப்பட்ட பொருட்கள் வேண்டாமே

பால் சேர்க்கப்பட்ட பொருட்கள் வேண்டாமே

பாலும், பால் சேர்க்கப்பட்ட எந்த உணவுகளும் குறட்டையை வரவழைக்கும் குணத்தைக் கொண்டிருக்கின்றன. நீங்கள் குறட்டையை நிறுத்த விரும்பினால் நிச்சயம் இத்தகைய உணவுகளை தவிர்ப்பது சிறந்த முடிவாக இருக்கும். ஒரு வேளை நீங்கள் இதை அவற்றை சாப்பிட நேர்ந்தால், அவ்வாறு செய்த மூன்று அல்லது நான்கு மணி நேரம் கழித்து உறங்கினால் சிறந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods To Prevent Snoring

Eating certain foods prevent snoring. Know what food to eat to prevent snoring. Try these tips and home remedies to stop snoring naturally.
Story first published: Thursday, January 9, 2014, 18:39 [IST]
Desktop Bottom Promotion