For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யூரிக் அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!!!

By Ashok CR
|

யூரிக் அமிலம் என்பது ப்யூரைன் உடைவதால் உண்டாக்கப்பட்டு இரத்தத்தின் மூலம் சிறுநீரகத்தை அடைகிறது. சிறுநீர் கழிக்கும் போது உங்கள் உடலில் இருந்து சிறுநீரக அமிலம் வெளியேறுகிறது. சில சமயங்களில் சிறுநீரக அமிலம் சிறுநீரகத்தின் வழியாக வெளியேறாமல் இரத்தத்தில் தங்கிவிடுகிறது. இது அதிகரித்தால் உடல் நலத்திற்கு ஆபத்து ஏற்படுகிறது. சில சமயங்களில் இது கீல் வாதத்தை ஏற்படுத்துகிறது.

சிறுநீரக அமிலத்தை கட்டுபடுத்துவது மிகவும் முக்கியமானது. ஆனால் இதற்கு முன்னால் இது எதனால் ஏற்படுகிறது என்பதை அறிவது நல்லது. நமக்கு சரியான காரணங்கள் தெரியாவிட்டால் அதை எவ்வாறு எதிர்த்து போராடுவது? யூரிக் அமிலம் அதிகரிப்பதற்கான காரணங்களை சிலவற்றை உங்களுக்காக நாங்கள் பட்டியலிட்டுள்ளோம். நாம் ஏற்கனவே சொன்னதை போல் யூரிக் அமிலம் அதிகரிக்கும் போது கீல்வாதம் போன்ற பல பிரச்சனைகளால் அவதிப்பட வேண்டியிருக்கும். அதிக அளவு குடிப்பழக்கம் யூரிக் அமிலத்தை அதிகரித்து விடுகிறது. சில நேரங்களில் மரபு ரீதியாக யூரிக் அமிலம் அதிகரிக்கக் கூடும். அதனை ஒன்றுமே செய்ய முடியாது.

DID YOU KNOW ABOUT: Bad Habits To Quit For A Healthy Life

உடல் பருமன், ப்யூரைன் அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ளுதல் மற்றும் கழிவுகளை நீக்கும் திறனை கிட்னி இழத்தல் போன்ற காரணங்களாலும் கூட உடலில் உள்ள யூரிக் அமிலம் அதிகரிக்கக் கூடும். சிறுநீரக பெருக்குக்கு கொடுக்கப்பட்ட மருந்துகள் கூட இதை அதிகரித்து விடுகிறது. சரி இதற்கான காரணங்களை பார்த்தோம் அல்லவா? இனி இதைக் கட்டுபடுத்தும் வழிகளை பார்போம். நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து அடங்கியுள்ள ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதிக யூரிக் அமிலம் கொண்ட உணவு என்றால் சுத்தமாக ப்யூரைன் இல்லாத உணவாகும். அதிகமாக உள்ள யூரிக் அமிலங்களை கட்டுப்படுத்தும் சில டிப்ஸ்களை இப்போது பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிடுதல்

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிடுதல்

ஆராய்ச்சிகளின் அடிப்படையில் நார்ச்சத்துக்கள் யூரிக் அமிலத்தை கட்டுபடுத்துகிறது. எனவே நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பாட்டில் எடுத்துக் கொள்வது நல்லது. கீரை, ஓட்ஸ், ப்ராக்கோலி போன்றவைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே அதனை உண்ண ஆரம்பித்து அதிகமாக உள்ள யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துங்கள்.

ஆலிவ் எண்ணெயில் சமையல் செய்தல்

ஆலிவ் எண்ணெயில் சமையல் செய்தல்

ஆலிவ் எண்ணெய் என்றதும் நாம் பயன்படுத்தும் சாதாரண ஆலிவ் எண்ணெய் என்று எண்ணிவிடாதீர்கள். வெண்ணெய் அல்லது சாதாரண சமையல் எண்ணெய்க்கு பதில் விதையிலிருந்து பிழிந்து எடுக்கப்பட்ட ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்துங்கள். சாதாரண எண்ணெய் நமது உடலில் புளித்த அமிலத்தை சுரக்க வைக்கிறது. இதனால் நாம் சாப்பிட்ட உணவில் உள்ள வைட்டமின் ஈ கொள்ளப்படுகிறது. இது ஆலிவ் எண்ணெயால் தடுக்கப்படுகிறது.

பேக்கரி உணவுகளை தவிர்த்தல்

பேக்கரி உணவுகளை தவிர்த்தல்

இனிப்பு கலந்த பேக்கரி உணவுகள் தானே உங்களுக்கு பிடித்த உணவு? ஆனால் அவைகளை தவிர்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஏன் என்று தெரியுமா? இந்த வகையான உணவுப் பொருட்களில் யூரிக் அமிலம் அதிகமாக சுரக்கிறது. எனவே கேக் போன்ற பேக்கரி பொருட்களை தவிர்ப்பது நல்லது.

தண்ணீர் குடித்தல்

தண்ணீர் குடித்தல்

தண்ணீர் என்பது உங்கள் உடலில் பல செயல்பாட்டு பிரச்சனைகளுக்கு தீர்வை கொடுக்கும். சீரான இடைவெளியில் தண்ணீர் அருந்துவது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஒரு நாளைக்கு 2-3 லிட்டர் தண்ணீர் அருந்துவதால் யூரிக் அமிலம் அதிகரிப்பது கட்டுப்படுத்தப்படுகிறது. சரி ஏன் தண்ணீர் பரிந்துரைக்கப்படுகிறது? அதிகமாக தண்ணீரை குடிக்கும் போது அது உங்கள் கிட்னியில் தேங்கிருக்கும் யூரிக் அமிலத்தை சிறுநீரகம் வழியாக வெளியேற்றிவிடும். ஆனால் குறைந்த அளவு தண்ணீரை சீரான இடைவேளையில் குடிக்க வேண்டும்.

செர்ரி பழங்கள் சாப்பிடுதல்

செர்ரி பழங்கள் சாப்பிடுதல்

செர்ரி பழங்களில் அழற்சி நீக்கும் குணங்கள் அடங்கியுள்ளதால் அதனை கீல்வாதம் போன்ற பிரச்சனைகளுக்கு பயன்படுத்துகின்றனர். அதனால் அதனை அதிகமாக உள்ள யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தவும் பயன்படுத்தலாம். ஒரு நாளைக்கு 10-40 செர்ரி பழங்களை சரியான இடைவெளியில் உட்கொள்ள வேண்டும். ஆனால் அதிக அளவு செர்ரி பழங்களை ஒரே நேரத்தில் எடுத்துக் கொண்டால் அது வேறு சில ஆபத்துகளை ஏற்படுத்துகிறது.

வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுப் பொருட்களைச் சேர்த்தல்

வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுப் பொருட்களைச் சேர்த்தல்

நீங்கள் உண்ணும் உணவுகளில் 500 மில்லிக்ராம் அளவிற்கான வைட்டமின் சி சேர்க்கப்பட்டிருந்தால் அது அதிகமாக உள்ள யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும். நம் உடம்பில் சுரக்கும் யூரிக் அமிலம் சிறுநீர் வழியாக செல்வதற்கு வைட்டமின் சி பெரிதும் துணை நிற்கும். யூரிக் அமிலம் நம் உடலை விட்டு வெளியேறுதல் என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருப்பதால் வைட்டமின் சி-யை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது முக்கியமாகும்.

மேற்கூறிய அனைத்து டிப்ஸ்களையும் பின்பற்றி உடலில் அதிகமாக உள்ள யூரிக் அமிலத்தை உடனே வெளியேற்றுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ways To Control High Uric Acid

Diet rich in fibre and protein can help you control uric acid. Remember high uric acid diet means diet that does not contain purine at all. Here are a few tips to control high uric acid.
Desktop Bottom Promotion