Latest Updates
-
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்..
உடனே நிறுத்த வேண்டிய ஆரோக்கியத்தைக் கெடுக்கும் பழக்கங்கள்!!!
நாம் அனைவரும் ஒருசில பழக்கத்திற்கு அடிமையாகியிருப்போம். அப்படி நம்மை அடிமைப்படுத்தும் செயல்கள் அனைத்துமே ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியது என்பது தெரியுமா? அதில் பெரும்பாலானோர் அடிமையாகியிருக்கும் செயல்கள் என்று சொன்னால், அது புகைப்பழக்கம் மற்றும் மது அருந்துதல் போன்றவை தான். இத்தகைய பழக்கங்கள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. ஆகவே இவற்றை முற்றிலும் தவிர்ப்பது மிகவும் நல்லது. இவை மட்டுமின்றி இன்னும் நிறைய பழக்கங்கள், ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கின்றன.
அந்த பழக்கங்களால் உயிருக்கு ஆபத்து நேராவிட்டாலும், ஆரோக்கியத்திற்கு அடிக்கடி பிரச்சனையை ஏற்படுத்தும். இங்கு அப்படி உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் சில பழக்கவழக்கங்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அவை என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, அவற்றை தவிர்த்து வாழ ஆரம்பியுங்கள்.

வயிறு நிறைந்திருந்தாலும் ஃபுல்லாக சாப்பிடுவது
சிலர் வயிறு நிறைந்திருந்தாலும், ஸ்நாக்ஸ்களை பார்த்ததும் அதையும் அதிகம் சாப்பிடுவார்கள். இப்படி அளவில்லாமல் அதிகம் சாப்பிட்டால், உடலில் கலோரிகளின் எண்ணிக்கை அதிகரித்து, உடல் பருமனால் அவஸ்தைப்பட நேரிடும்.

வேகமாக சாப்பிடுவது
சாப்பிடும் போது வேகமாக சாப்பிடுவதும் ஒரு கெட்ட பழக்கம் தான். ஏனெனில் இப்படி வேகமாக சாப்பிடும் போது, அசிடிட்டி, உப்புசம் மற்றும் உடல் பருமன் போன்றவை ஏற்படக்கூடும். ஆகவே எப்போது சாப்பிடுவதாக இருந்தாலும், பொறுமையாக ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும்.

தாமதமாக தூங்குவது
தினமும் இரவில் தாமதமாக தூங்கி, மறுநாள் காலையில் வேகமாக எழுந்து வந்தால், சோர்வுடன், கண்களில் வீக்கம் மற்றும் உடல் வலி போன்றவை எந்நேரமும் இருக்கும். இப்படி உடலில் எப்போதும் ஒரு பிரச்சனையுடன் இருந்தால், சில நேரங்களில் மன அழுத்தத்திற்கு உள்ளாகக்கூடும். இதனால் சந்தோஷமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை இழக்கக்கூடும்.

மூக்கு நோண்டுவது
அடிக்கடி மூக்கை நோண்டிக் கொண்டிருந்தால், மற்றவர்கள் நம்மை கேவலமாக பார்ப்பதோடு, கையில் உள்ள கிருமிகள் மூக்கினுள் நுழைந்து, சளி, ஜலதோஷம், காய்ச்சல் போன்றவற்றை உண்டாக்கிவிடும்.

ஹை ஹீல்ஸ்
காலணிகளை அணியும் போது மிகவும் உயரமான ஹீல்ஸ் கொண்ட காலணிகளை அணிந்தால், அது நல்ல லுக்கை கொடுக்கலாம். ஆனால் அவற்றை நீண்ட நேரம் தொடர்ந்து அணியும் போது, கால், முதுகு போன்றவற்றில் கடுமையான வலியை ஏற்படுத்துவதோடு, சில சமயங்களில் அது ஆபத்தையும் ஏற்படுத்தும்.

மேக் அப்புடன் தூங்குவது
தினமும் இரவில் மேக் அப்பை சரியாக நீக்காமல் தூங்கினால், சருமத் துளைகளில் அடைப்ப ஏற்படுவதோடு, கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்ற பிரச்சனைகள் சருமத்தில் ஏற்படும். ஆகவே இரவில் படுக்கும் முன், முகத்தை நன்கு கழுவி விட்டு தூங்க வேண்டும்.

நகம் கடிப்பது
ஒருசிலர் பதற்றம் அடைந்தாலோ அல்லது எதையேனும் யோசித்தாலோ, நகத்தை கடிக்க ஆரம்பித்துவிடுவார்க்ள. ஆனால், அப்படி நகங்களை கடித்தால், அது உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் இருக்கும் கெட்ட பழக்கங்களிலேயே இது மிகவும் அசிங்கமானதும் கூட.

உணவுகளை தவிர்ப்பது
தினமும் போதிய இடைவெளியில் உண்ணும் உணவுகளை தவிர்க்கக்கூடாது. குறிப்பாக காலை உணவை நிச்சயம் மறக்கக்கூடாது. அப்படி மறந்தால், செரிமான மண்டலமானது கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகும்.



Click it and Unblock the Notifications
