For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாதாரணம் என்று நினைக்கும் மஞ்சள் காமாலையின் அறிகுறிகள்!!!

By Maha
|

மஞ்சள் காமாலை என்பது ஒரு நோய் அல்ல. இரத்தத்தில் பிலிரூபின் அளவு அதிகரிப்பதால், தான் மஞ்சள் காமாலையானது ஏற்படுகிறது. மஞ்சள் காமாலையானது மூன்று வகையாக உள்ளன. அவை கல்லீரலுக்கு முன், கல்லீரல் மற்றும் கல்லீரலுக்குப் பின் என்பன. இதில் கல்லீரலுக்கு முன் காமாலையானது, இரத்த சிவப்பணுக்கள் அதிகமாக உடைவதால் ஏற்படும். கல்லீரல் மஞ்சள் காமாலையில் பிலிரூபினின் வெளியேற்றம் அதிகமாக இருப்பதால், நுரையீரல் செயல்பாட்டை குறைத்து, கல்லீரலில் உள்ள செல்களை அழிக்கும். கல்லீரலுக்குப் பின் காமாலையில், பித்த நாளத்தில் பித்த நீர் செல்வதில் ஏற்படும் தடையினால் உண்டாவது ஆகும்.

பொதுவாக மஞ்சள் காமாலையை கண்கள் மற்றும் சிறுநீர் வெளியேற்றத்தின் போது மஞ்சள் நிறத்தில் இருப்பதை வைத்து தான் கண்டறிவோம். ஆனால் இது மட்டும் மஞ்சள் காமாலையின் அறிகுறிகள் இல்லை. நமக்கு தெரியாத பல அறிகுறிகள் உள்ளன. அத்தகையவற்றை தெரிந்து கொண்டால், முன்கூட்டியே மஞ்சள் காமாலையை தடுத்துவிடலாம். இப்போது அத்தகைய அறிகுறிகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உஷார் ஆகிக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மஞ்சள் நிற சிறுநீர்

மஞ்சள் நிற சிறுநீர்

இது ஒரு பொதுவான மற்றும் அனைவருக்கும் நன்கு தெரிந்த அறிகுறியே. சில சமயங்களில் இதனை கூட பலர் சாதாரணமாக நினைக்கின்றனர். ஏனெனில் மஞ்சள் நிற சிறுநீர் உடல் வறட்சியினால் கூட ஏற்படும். ஆனால் மஞ்சள் காமாலை என்றால் நன்கு அடர்ந்த நிறத்தில் சிறுநீர் வெளியேறும்.

மஞ்சள் நிற சருமம் மற்றும் கண்கள்

மஞ்சள் நிற சருமம் மற்றும் கண்கள்

மஞ்சுள் நிறத்தில் சருமம் மற்றும் கண்கள் காணப்பட்டால், அதுவும் மஞ்சள் காமாலைக்கான அறிகுறியாகும். ஆனால் இதனை பலர் சரியாக கவனிக்கமாட்டார்க்ள. ஏனென்றால் அனீமியா காரணமாகவும், சருமம் வெளிர் நிறத்தில் காணப்படும். ஆகவே கவனமாக இருக்கவும்.

வயிற்று வலி

வயிற்று வலி

வயிற்றின் வலது பக்கத்திற்கு சற்று கீழேயும் சில சமயங்களில் சற்று மேலேயும் கடுமையான வலி அடிக்கடி ஏற்படும். இத்தகைய வலி மஞ்சள் காமாலைக்கு மட்டும் ஏற்படாது, பித்தக்கற்கள் இருந்தாலும் ஏற்படும் என்பதால், அதிக கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.

மூட்டு வலி

மூட்டு வலி

மூட்டு வலி பல காரணங்களால் ஏற்படும். ஆகவே பலர் மஞ்சள் காமாலையின் போது ஏற்படும் மூட்டு வலியை சாதாரணம் என்று நினைத்து விட்டுவிடுவார்கள். ஒருவேளை மூட்டு வலியுடன், வேறு ஏதாவது மஞ்சள் காமாலைக்கான அறிகுறிகள் தெரிந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

பசியின்மை

பசியின்மை

மஞ்சள் காமாலையின் அறிகுறிகளுள் பசியின்மையும் ஒன்று. இது பலருக்கு இருக்கும் சாதாரண பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பதால், பலர் கண்டு கொள்ளமாட்டார்கள். ஆனால் இந்த அறிகுறியுடன், மஞ்சள் நிற சிறுநீர் மற்றும் வாந்தி போன்றவை ஏற்படுமாயின் அது மஞ்சள் காமாலை தான்.

வாந்தி

வாந்தி

வாந்தியும் பல காரணங்களால் ஏற்படும். ஆனால் தேவையில்லாமல் குமட்டல் அல்லது வாந்தி ஏற்பட்டால், அது இரத்தத்தில் பிலிரூபின் அளவு அதிகமாக உள்ளது என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.

உடல் அரிப்பு

உடல் அரிப்பு

இந்த உடல் அரிப்பு பித்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு, இரத்தத்தில் பிலிரூபினின் அளவை அதிகரித்து விடுவதால் ஏற்படும். ஆகவே திடீரென்று உடலில் அரிப்புக்கள் அதிகமாக இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

வெப்பம்

வெப்பம்

உடலில் வெப்பம் அதிகமாக இருந்தாலும், அது காமாலைக்கான அறிகுறியாகும். ஆனால் பலர் இது சாதாரண உடல் வெப்பம் தான் என்றும், வெயிலில் சுற்றியதால், உடல் வெப்பமாக உள்ளது என்றும் சாதாரணமாகவிடுகின்றனர். ஆனால் உடல் வெப்பத்துடன் குளிர்ச்சியும் இருந்தால், அது காமாலைக்கான அறிகுறி.

ப்ரௌன் நிற மலம்

ப்ரௌன் நிற மலம்

மஞ்சள் காமாலை இருந்தால், மலமானது ப்ரௌன் நிறத்தில் வெளியேறும். ஏனெனில் பிலிரூபினின் இடையூறினால், அவை மலத்தை ப்ரௌன் நிறத்தில் வெளியேற்றுகிறது.

உடல் சோர்வு

உடல் சோர்வு

உடல் சோர்வுடன் மற்ற மஞ்சள் காமாலைக்கான அறிகுறிகள் 2 வாரத்திற்கு மேல் தொடர்ந்தால், அதுவும் மஞ்சள் காமாலைக்கான அறிகுறியாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Symptoms Of Jaundice That We Ignore | இதுவும் மஞ்சள் காமாலையின் அறிகுறிகளா...?

Jaundice has more symptoms which we tends to avoid. Knowing about these symptoms will help you to detect jaundice in its early stage itself. Where increased bilirubin gives the ‘yellow colour symptoms', other symptoms depends mainly on the underlying cause of jaundice. Here are some common warning-signs of jaundice in adults that we generally fail to identify as the symptoms of jaundice.
Story first published: Thursday, April 18, 2013, 12:22 [IST]
Desktop Bottom Promotion