For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தலை பாரமா இருக்கா? இந்த இயற்கை வைத்தியங்களை செஞ்சு பாருங்க...

By Maha
|

சளி, தலைவலி, தும்மல் எல்லாம் சேர்ந்து இருப்பதை தான் தலை பாரம் என்று சொல்வோம். இத்தகைய தலை பாரம் வந்தால், கடுமையான தலைவலியுடன், மூக்கில் இருந்து நீர் வடிதல், தும்மல் என்று அனைத்தும் ஒன்று சேர்த்து ஒருவரை பாடாய் படுத்திவிடும். வைரஸ் தொற்றால் உண்டாகும் இந்த தலை பாரமானது குறைந்தது ஒரு வாரத்திற்கு இருக்கும். இது சரியாகிவிடும் என்று அப்படியே விட்டு விட்டால், அது இன்னும் நிலைமையை மோசமாக்கிவிடும்.

ஆகவே தலை பாரம் இருந்தால், அப்போது ஒருசில இயற்கை வைத்தியங்களை மேற்கொண்டால், நிச்சயம் அந்த தலை பாரத்தின் அவஸ்தையில் இருந்து விடுபடலாம். மேலும் இந்த இயற்கை வைத்தியங்கள் அனைத்தும் பாட்டியிடம் இருந்து சுட்டவைகள் தான். இருப்பினும் இவைகள் தான் தலை பாரத்தை சரிசெய்யும் மிகச் சிறந்த மருந்துவ முறைகள். அதுமட்டுமின்றி, இதனை எந்த ஒரு பக்கவிளையும் இல்லாத மருத்து முறை என்றும் சொல்லலாம்.

சரி, இப்போது அந்த தலை பாரத்தை சரிசெய்யும் இயற்கை வைத்தியங்களைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆவிப் பிடிப்பது

ஆவிப் பிடிப்பது

தலை பாரமாக இருக்கும் போது, ஆவிப் பிடித்தால், இறுகியிருக்கும் சளியானது இளகி எளிதில் வெளியேறி, தலை பாரத்தில் இருந்து விடுதலைப் பெறலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

உப்பு சிகிச்சை

உப்பு சிகிச்சை

தலை பாரத்தை சரிசெய்வதில் உப்பு ஒரு சிறந்த பொருள். அதற்கு உப்பு கலந்த நீரைக் கொண்டு வாயை கொப்பளிக்க வேண்டும். அதிலும் அந்த நீரை தொண்டையில் வைத்து கொப்பளிக்க வேண்டும். இதனால் சளி உடனே வெளியேறி, தலைவலியில் இருந்து நிவாரணம் தரும்.

வெதுவெதுப்பான சூழ்நிலை

வெதுவெதுப்பான சூழ்நிலை

சளி பிடித்திருக்கும் போது வெதுவெதுப்பான சூழ்நிலையில் இருக்க வேண்டும். இதனால் அதிகப்படியான சளியினால் ஏற்படும் காய்ச்சல் மற்றும் தலை பாரத்தில் இருந்து விடுபடலாம்.

வெதுவெதுப்பான பானங்கள்

வெதுவெதுப்பான பானங்கள்

தலை பாரமாக இருக்கும் போது வெதுவெதுப்பான பானங்களான காபி, டீ அல்லது சூப் போன்றவற்றை குடிக்க வேண்டும். இதனால் தலை பாரம் நீங்கும்.

சூடான ஷவர் குளியல்

சூடான ஷவர் குளியல்

தலை பாரமாக இருக்கும் போது ஒரு நாளைக்கு இரண்டு முறை, சூடான ஷவர் குளியல் அல்லது சுடுநீர் குளியலை மேற்கொள்ள வேண்டும்.

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸ்

வைட்டமின் சி அதிகம் நிறைந்த எலுமிச்சையைக் கொண்டு ஜூஸ் போட்டு குடித்தாலும், தலை பாரம் நீங்கும். அதிலும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு, தேன் சேர்த்து கலந்து, அதனை குடித்தால், உடலில் உள்ள வைரஸ்கள் அழியும்.

காரமான உணவுகள்

காரமான உணவுகள்

தலை பாரத்தினால் அவஸ்தைப்படும் போது, மசாலா பொருட்கள் சேர்க்கப்பட்ட நல்ல காரமான உணவுகளை உட்கொண்டாலும், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

மஞ்சள் பால்

மஞ்சள் பால்

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பாலில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடித்து வந்தால், மஞ்சளானது உடலில் உள்ள தொற்றுகளை அழித்து, நல்ல நிவாரணம் வழங்கும்.

ஹாட் பேக்

ஹாட் பேக்

ஹாட் வாட்டர் பேக்கில் சூடான தண்ணீரை ஊற்றி, அதனைக் கொண்டு தலையில் மசாஜ் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், சுத்தமான காட்டன் துணியை சுடுநீரில் நனைத்து பிழிந்து, அந்த துணியைக் கொண்டு தலைக்கு மசாஜ் செய்தால், தலை பாரம் அல்லது நீர் கோர்த்தல் நீங்கிவிடும்.

இஞ்சி டீ

இஞ்சி டீ

இஞ்சி டீயைக் குடித்தால், இஞ்சியில் உள்ள நோயெதிர்ப்பு பொருள், உடலில் உள்ள கிருமிகளை அழித்து தலை பார பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies To Treat Head Cold

To get rid of your head cold, here are some of the best home remedies we have listed that will help you to treat yourself well. Take a look.
Story first published: Tuesday, November 12, 2013, 15:52 [IST]
Desktop Bottom Promotion