Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
மிளகாயை உணவில் அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!
காரம் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது மிளகாய். அதே போல் மிளகாய் என்றால் நமக்கு ஞாபத்திற்கு உடனே வருவது உரப்பு தான். அப்படிப்பட்ட மிளகாயை பலர் விரும்புவதில்லை, முக்கியமாக குழந்தைகள். ஆனால் காரசாரமாக உண்ணும் இன்னும் சிலரோ மிளகாயை விரும்பி உணவில் சேர்த்துக் கொள்வார்கள். பலருக்கு அதையும் மீறி அதனை பற்றி எதுவும் தெரிவதில்லை.
மிளகாய் முதன் முதலில் உற்பத்தி செய்யப்பட்டது அமெரிக்காவில். அன்றிலிருந்தே, அது மனிதர்களின் அன்றாட உணவுகளில் ஒரு முக்கிய அங்கமாக திகழ்கிறது. கிறிஸ்டோபர் கொலம்பஸ் அதனை 15 ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டிற்கு எடுத்துச் சென்றது முதல், ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்ரிக்காவில் பரவலாக இது பயிரிடப்பட்டது.
மிளகாயில் மட்டும் 200 வகைகள் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? அதே போல் மஞ்சள், பச்சை, சிவப்பு மற்றும் கருப்பு என பல வண்ணங்களிலும் காணலாம். லேசான காரம் முதல் குடலே வெந்து போகும் அளவிற்கு கடுமையான காரத்தை கொண்டவைகள் இவைகள். ஆன்டி-பயாடிக் குணத்தை தவிர, இதில் பல உடல்நல பயன்களும் மருத்துவ குண நலன்களும் அடங்கியுள்ளது. அவைகளை பற்றி பார்க்கலாம் வாங்க!

இதயக்குருதி குழாய் நோய்களின் இடர்பாடு குறையும்
கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைக்ளிசரைடு அளவுகளை குறைப்பதோடு மட்டுமல்லாமல், ஆபத்தான இரத்த உறைதலை உண்டாக்கும் இரத்தக் கட்டிகளை குறைக்கும். இதயக்குருதி குழாய் நோய்கள் வருபவர்களும் சரி, ஏற்கனவே வந்தவர்களுக்கும் சரி, மேற்கூறிய உடல்நல பயன்கள் மிகவும் முக்கியமானவையாக கருதப்படுகிறது.

அழற்சி குறையும்
மிளகாய் உண்ணுவதால் ஏற்படும் மற்றொரு மிக முக்கியமான உடல்நல பயன், அழற்சி குறையும். முக்கியமாக கீல்வாதம் உள்ளவர்களுக்கு இது பெரிய நிவாரணியாக விளங்கும். மேலும் மிளகாய் என்பது உடலில் ஏற்பட்டுள்ள வலியை குறைக்கவும் உதவுகிறது. மிளகாயில் அதிக அளவு காப்சைசின் உள்ள காரணத்தினால் தான் மேற்கூறிய உடல்நல பயனை பெற முடிகிறது. மேலும் இன்று அதிக அளவில் காப்சைசின் நிறைந்துள்ள க்ரீம்கள் சந்தையில் கிடைக்கிறது. கீல்வாதம், முதுகு வலி மற்றும் இதர வலிகளுக்கும் அவை பயன்படுகிறது.

மேம்பட்ட செரிமானம்
வயிற்றில் அல்சர் அல்லது அமில எதிர்பாயலால் அவதிப்படுபவர்கள் மிளகாயை தவிர்க்க வேண்டும் என்று காலாகாலமாக செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் உடல்நல வல்லுனர்களும் அறிவுறுத்துகின்றனர். ஆனால் மிளகாயில் அதிக அளவில் உள்ள கயேன் என்ற பொருள், வயிற்றில் ஏற்படும் அல்சரை குறைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரப்பதற்கு பெரிய உதவியாக விளங்குகிறது கயேன். அதனால் செரிமானத்திற்கு மட்டுமல்லாமல், அல்சரால் ஏற்படும் வயிற்று வலியையும் குறைக்கும். மேலும் வாய்வு மற்றும் வயிற்று பொருமலை குறைக்கவும் கயேன் பெரிதும் உதவி புரிகிறது.

எலும்பு வளர்ச்சிக்கு துணை புரியும்
மிளகாயில் அதிக அளவு கால்சியம் உள்ளதென்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளார்கள். கால்சியம் என்பது திடமான பற்களுக்கும் எலும்புகளுக்கும் தேவைப்படும். சிலருக்கு பால் பொருட்கள் என்றால் அலர்ஜியாக இருக்கலாம். அதனால் அதை பருகாதவர்கள், அதிக கால்சியம் உள்ள மிளகாயை உண்ணலாம். பால் பொருட்கள் அளிப்பதை போலவே, மிளகாயும் சம அளவிலான கால்சியத்தை கொடுப்பதால், திடமான பற்களையும் எலும்புகளையும் பெறலாம்.

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும்
உடல் பருமன் பிரச்சனை உள்ளவர்களுக்கும், சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களுக்கும், மிளகாய் உட்கொள்ளுதல் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்று டாஸ்மானியா பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி குழு ஒன்று தெரிவித்துள்ளது. அவர்களின் ஆராய்ச்சி கட்டுரை ஜூலை 2006 ஆம் ஆண்டு அமெரிக்கன் ஜெர்னல் ஆப் க்ளினிக்கல் நியூட்ரிஷன் என்ற பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது.

வாதத்திலிருந்து பாதுகாப்பு
உடம்பில் உள்ள இரத்த ஓட்டத்திற்கு பெரிதும் உதவியாக இருந்து, வாதம் ஏற்படாமல் காப்பதில் மிளகாய் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் தான் என்னவோ, இது மிகப்பெரிய இரத்த ஓட்ட செயலூக்கியாக பார்க்கப்படுகிறது. அதற்கு தினமும் உங்கள் உணவோடு சேர்த்து மிளகாயை உட்கொண்டாலே போதுமானது; உங்களுக்கு பலதரப்பட்ட நன்மைகளும் உடல்நல பயன்களும் கிடைத்துவிடும்.

வலி நிவாரணி மற்றும் அழற்சி குறைதல்
காப்சைசினில் நியூரோபெப்டைட் என்ற அழற்சியை குறைக்கும் பொருள் உள்ளது. அதனால் கீல்வாதம் மற்றும் முடக்கு வாதம் போன்ற அழற்சிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிளகாய் பெரிய நிவாரணியாக விளங்குகிறது. அதிலும் அது உடலில் உள்ள பிளாஸ்மா புரதத்தில், அதன் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

புரோஸ்டேட் புற்றுநோய் பரவுவதை தடுக்கும்
மிளகாயில் உள்ள காப்சைசின் புரோஸ்டேட் புற்றுநோய் உடலில் பரவுவதை தடுக்கும் என்று புற்றுநோய் ஆராய்ச்சி மையம், மார்ச் 2006 இல் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. மிளகாயில் உள்ள காப்சைசின் புரோஸ்டேட் புற்று அணுக்களை தற்கொலை செய்யத் தூண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

கொழுப்பை குறைக்கவும் உதவும்
மிளகாயில் இருந்து வெளிப்படும் வெப்பம், கலோரிகள் உட்கொள்ளும் அளவை அதிகரித்து, கொழுப்புகளை கரைக்க உதவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

வயிற்று அல்சரை தடுக்கும்
வயிற்று அல்சரை பொறுத்த வரை, மிளகாயை எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற தவறான கருத்து நிலவி வருகிறது. ஆனால் உண்மையில் மிளகாயானது, வயிற்றில் பாதுகாப்பான ஜூஸ்களை சுரக்க உதவி புரிந்து, அதன் மூலம் வயிற்றில் தேங்கியிருக்கும் பாக்டீரியாக்களை கொன்று, அல்சர் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.



Click it and Unblock the Notifications
