For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெற்றிலையினால் கிடைக்கும் உடல்நல நன்மைகள்!!!

By Super
|

வெற்றிலை செடி என்பது ஆண்டு முழுவதும் படர்ந்து குட்டையான பல தண்டுவேர்களை கொண்ட ஒல்லியான செடியாகும். இதன் பயன்பாடு 2000 ஆண்டு காலமாக இருந்து வருகிறது. அதற்கு ஆதாரமாக இலங்கையை சேர்ந்த பழமையான வரலாற்று புத்தகமான மகாவஸ்மாவில் (உலகத்தின் பழமையான மொழிகளில் ஒன்றான பாலி மொழியில் எழுதப்பட்டதாகும்) அதனை பற்றிய குறிப்புகள் உள்ளது.

நம் இந்தியாவில் வெற்றிலைகளை சின்ன கட்டுகளாக சுருட்டி, விருந்தாளிகளுக்கு தருவது வாடிக்கையான ஒன்றாகும். அதனை பாண்-சுபாரி என்று அழைப்பார்கள்.

நிச்சயம் படிக்க வேண்டியவை: மிளகை உணவில் அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

வெற்றிலை என்பது இதய வடிவில், வளுவளுப்பாக, பளபளப்புடன் நீண்ட காம்புகளை கொண்டுள்ளதாகும். இந்தியாவில் தமிழ் நாடு, மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், ஒரிசா போன்ற மாநிலங்களில் வெற்றிலைகள் பயிரிடப்படுகிறது. வெற்றிலையை எதற்கு பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டால் பலரிடம் இருந்து வரும் பதில் இதுவாக தான் இருக்கும் - "சாப்பிட்ட பின் தெகட்டல் நீங்கி செரிமானம் ஆவதற்கு".

ஆனால் அதையும் தாண்டி அதில் பல பலன்கள் அடங்கியுள்ளது. பழங்காலத்தில் இருந்தே இதனை வாசனை ஊக்கியாகவும், வாயுவை தடுக்கும் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. சுரத்தல் மற்றும் இரத்த கசிவு போன்றவற்றை தடுத்து நிறுத்தி, பாலுணர்ச்சி ஊக்கியாகும் விளங்குகிறது. வீட்டு சிகிச்சை பலவற்றிற்கும் இது பயன்படுகிறது.

இப்போது அந்த வெற்றிலைகளின் உடல் நல பயன்களைப் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை

சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை

வெற்றிலையில் இருந்து வரும் சாற்றில் சிறுநீர்ப் பெருக்கி குணங்கள் அடங்கியுள்ளது. அதனால் இந்த சாற்றை பாலில் கலந்து குடித்தால், சிறுநீர் கழிவதில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்

ஆன்டி-ஆக்ஸிடன்ட்

வெற்றிலைகளில் இயக்கு உறுப்புகளை வெளியேற்றும் குணங்கள் உள்ளது என்பது ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது. இது ப்யூடிலேட்டட் ஹைட்ராக்சில் டோல்லுவென்னை (butylated hydroxyl toluene) விட அதிக அளவில் உள்ளது.

அழற்சி

அழற்சி

கீல்வாதம் மற்றும் விரையழற்சி போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க வெற்றிலைகள் பயன்படுத்தப்படுகிறது. அதிலும் வெற்றிலையின் மேல் விளக்கெண்ணெயை தடவி, அதனை கொப்பளங்கள் ஏற்பட்ட இடங்களில் தடவினால், அவைகள் உடைபட்டு சீழ் வடிந்து ஆறிவிடும். சில மணிநேரங்களுக்கு ஒரு முறை இலைகளை மாற்றியாக வேண்டும்.

கீழ் முதுகு வலி

கீழ் முதுகு வலி

வெற்றிலை அல்லது அந்த இலைகளின் சாற்றை தேங்காய் எண்ணெய் போன்ற எண்ணெய்யோடு கலந்து, இடுப்பில் ஒத்தடம் கொடுத்தால், கீழ் முதுகு வலிக்கு நல்ல பலனை அளிக்கும்.

மார்பக பால் சுரப்பதில் உதவும்

மார்பக பால் சுரப்பதில் உதவும்

வெற்றிலைகளை எண்ணெயில் நனைத்து, அதனை மார்பகங்களில் தடவினால், பால் சுரக்க உதவும். அதனால் பால் சுரப்பது அதிகரிக்க இதனை பயன்படுத்தலாம்.

சுவாச கோளாறுகள்

சுவாச கோளாறுகள்

இருமல் மற்றும் மூச்சு விடுவதில் பிரச்சனை இருந்தால், வெற்றிலையை கொண்டு அவைகளை சரிசெய்யலாம். அதற்கு வெற்றிலையை கடுகு எண்ணெயில் நனைத்து, அதனை நெஞ்சில் தடவுங்கள். இல்லையெனில் நசுக்கிய வெற்றிலை பழங்கள் அல்லது பெர்ரி பழங்களை தேனுடன் கலந்து குடித்தால், இருமலுக்கு நிவாரணியாக விளங்கும்.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்க்கு எதிராக போராடும் குணங்கள் வெற்றிலையில் உள்ளது என்று ஆய்வுகள் கூறுகிறது. அதனால் சர்க்கரை நோய் சிகிச்சைக்கு அதனை பயன்படுத்தலாம்.

நரம்பு தளர்ச்சி

நரம்பு தளர்ச்சி

வெற்றிலையில் இருந்து எடுக்கப்படும் சாற்றை தேனுடன் கலந்து குடித்தால், நரம்பு பிரச்சனைகள், தளர்ச்சி, ஆற்றலிழப்பு போன்றவைகளுக்கு அவை மருந்தாக விளங்கும்.

தலைவலி

தலைவலி

வெற்றிலையில் வலி நீக்கும் குணமும், குளிர்ச்சியை உண்டாக்கும் குணமும் உள்ளதால், அவைகளை தலையில் வைத்துக் கொண்டால், எவ்வளவு தலை வலி வந்தாலும், அவை பறந்தோடிவிடும்.

மலச்சிக்கல்

மலச்சிக்கல்

வெற்றிலை இலைகளின் காம்புகளை எடுத்து விளக்கெண்ணெயில் நனைத்து, பின்புறம் வழியாக உள்ளே விட்டால், மலச்சிக்கல் உடனே நீங்கும்.

புண்கள்

புண்கள்

வெற்றிலைகளை சாறெடுத்து, அதனை புண்ணின் மீது தடவி, பின் வெற்றிலையை கொண்டு கட்டிவிடுங்கள். 2-3 நாட்களில் உங்கள் புண் ஆறிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Betel Leaf

From ancient times, the betel leaf has been used as an aromatic stimulant and anti-flatulent. It arrests secretion or bleeding and also serves as an aphrodisiac. It is used in several common household remedies.
Desktop Bottom Promotion