For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொஞ்சம் லவங்கம்.. கொஞ்சம் சிவப்பு முள்ளங்கி அவ்வப்போது... காளான்களை மறக்க வேண்டாம்!

By Super
|

ஆரோக்கியம் மற்றும் உடல் நலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதீத கவனம் எடுத்துக் கொள்ளும் நல்ல பழக்கம் தற்போது ஆச்சரியப்படத்தக்க விதத்தில் பரவி வருகிறது. அதே சமயம் உணவுக்கட்டுப்பாடு என்ற பெயரில் நமக்கு பிடித்தமான மற்றும் தேவையான உணவுகளைக் கூட விலக்கும் அளவுக்கு சென்றால், அது ஆர்வக்கோளாறு மட்டுமல்ல உடல்நலத்திற்கும் கேடு விளைவிக்கும். பின்பு ‘கிணறு வெட்ட பூதம்' கதை தான். உண்மையில் ‘நல்ல உணவு முறை' என்பது பலவற்றை ஒட்டுமொத்தமாக விலக்குவது அல்ல. எந்த அளவுக்கு விரிவான உணவு வகைகளை எடுத்துக் கொள்கிறோம் என்பதும் கூட. அதாவது நம் உடலுக்கு தேவையான பல்வேறு நுண்சத்துக்கள், வெவ்வேறு வகையான உணவுப்பொருட்களில் ஒளிந்து கிடக்கின்றன.

ஆகவே நாம் முயற்சி எடுத்து அவற்றை நமது சாப்பாட்டு மேஜையில் இடம் பெற வைக்க வேண்டும். அதில் தான் நமது சாமர்த்தியத்தை காட்ட வேண்டுமே தவிர, உணவை குறைத்து உடலை வாட்டுவதில் அல்ல. இப்படி சொல்வது ‘லாரென் ஷ்மிட்' எனும் ஒரு பிரபலமான டயட்டிஷியன். இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ‘ஹெல்தி ஈட்டிங் அன்ட் டிரெய்னிங்' எனும் ஆரோக்கிய உணவு முறை பயிற்சி நிலையத்தை நடத்தி வருகிறார்.

ஏதோ விஷயம் இருக்கிறது என்று தோன்றுகிறதா உங்களுக்கு? அதில் சந்தேகமே வேண்டாம். இந்த ‘லாரென் ஷ்மிட்' என்ன தான் பரிந்துரைக்கிறார் என்பதை முயற்சித்துப் பாருங்களேன். உணவுக்காக நாம் என்னென்ன பொருட்களை வாங்குகிறோம், அதில் என்னென்ன மாற்றங்கள் தேவை என்பதிலிருந்து இந்த ஆலோசனைகள் துவங்குகின்றன. மேலும், மிக எளிமையான தயாரிப்பு முறைகள் மற்றும் பரிமாறும் முறைகளை பரிந்துரைக்கிறார். அதுவும் மிக எளிமையான இந்த ஆலோசனைகளை சமைக்கத் தெரியாதவர்கள் கூட பின்பற்ற முடியும் என்பது தான் விசேஷமே. அவை யாவும் உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை பின்பற்றத் தொடங்கினால் நீங்கள் மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் உறுதிப்படுத்தப்படுவது மட்டுமல்ல, நாக்கை கட்டிப் போட்டு, உடலை பட்டினி போட்டு வாட்டும் ‘டயட்டிங்' தண்டனையிலிருந்தும் விடுதலை கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

12 Baby Steps to Better Nutrition

Most of us think that making a commitment to healthier eating means cutting out our favorite foods and depriving ourselves of the stuff we love most. Actually, the opposite is true.
Desktop Bottom Promotion