For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மனதை மகிழ்ச்சியாய் வைத்திருக்கும் நேர்மறை எண்ணங்கள்!

By Mayura Akilan
|

Matthieu Ricard
நம் ஒவ்வொருவருக்குள்ளும் நேர்மறை எண்ணங்களை நிரப்பினால் ஒவ்வொரு நொடிப்பொழுதும் மகிழ்ச்சியாக வாழலாம் என்று உலகின் மகிழ்ச்சியான மனிதர் என்று கண்டறியப்பட்டுள்ள புத்த மதத் துறவி 'மத்தேயு ரிக்கார்ட்'தெரிவித்துள்ளார்.

இந்த உலகில் எல்லோராலும் எல்லா நேரமும் மகிழ்ச்சியாக இருக்கமுடியாது. சில நேரங்களில் மகிழ்ச்சியாக இருந்தால் பெரும்பாலான நேரங்களில் கவலையுடன்தான் காலம் தள்ளுகின்றனர். ஆனால் உலகிலேயே அதிகம் மகிழ்ச்சியுடன் வாழும் மனிதர் ஒருவர் இருக்கிறார் என்று நரம்பியல் நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

இன்றைய உலகின் மிகவும் மகிழ்ச்சியான மனிதன் யார் என 'விஸ்கொன்ஸின்' பல்கலைக் கழகத்தில் தீவிரமாகத் தியானம் பழகும் உயர்ந்த பயிற்சியாளர்கள் 100 பேரின் மூளை ஆய்வு செய்யப் பட்டது. இதன் பொருட்டு ஒவ்வொரு துறவியினதும் மண்டை ஓட்டுக்கு மேலே 256 சென்சார்களுடன் கூடிய வயர் இணைக்கப்பட்டு மின் சமிக்ஞை பெறப்பட்டது. இந்த ஆராய்ச்சியை நரம்பியல் விஞ்ஞானியான ரிச்சர்ட் டேவிட்சன் மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் முடிவில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புத்தத் துறவியான 'மத்தேயு ரிக்கார்ட்'என்பவரே உலகில் மிகவும் மகிழ்ச்சியான மனிதர் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். 66 வயதாகும் இந்த துறவியின் மூளையே இதுவரை பரிசோதிக்கப் பட்டவற்றில் மிக அதிக மகிழ்ச்சி உணர்வுகளின் கொள்ளளவுடைய மூளை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மூளைப் பரிசோதனை மூலம் முக்கியமாகத் தெரியப்பட்ட விசயம் என்னவென்றால் கருணை எனப்படும் இரக்க உணர்வைத் தியானம் செய்தால் நமது மூளை நடுத்தரமான காமா கதிர்களை வெளியிடும் எனவும் இவை நமது உணர்வு, கவனம், கற்றல், ஞாபகம் ஆகிய உறுப்புக்களை வீரியப் படுத்தி மகிழ்ச்சிகரமான உணர்வை அதிகரிக்கின்றது.

தனது மகிழ்ச்சிகரமான நிலைக்குக் காரணம் பல வருடங்களுக்கும் மேலாக தான் செய்து வரும் உறுதியான தியானமே என 'மத்தேயு ரிக்கார்ட்' தெரிவித்துள்ளார். இந்த நிலையை யார் வேண்டுமானாலும் அடையலாம் எனவும் அதற்கு அவர்கள் செய்ய வேண்டியது தியானத்தின் மூலம் தங்களது எண்ணங்களை நேர்மறையாக நினைத்தல் அல்லது திருப்புதல் வேண்டும் என்கிறார் இந்த துறவி.

இத்துறவி 40 வருடங்களுக்கு முன்னர் புத்த மதம் பற்றிக் கற்பதற்காக இந்தியா வந்துள்ளார். இவர் தற்போது திபெத்தியர்களின் ஆன்மிகத் தலைவரான புத்த மதத் துறவி தலாய் லாமாவின் நம்பிக்கைக்குரிய முக்கியமான துறவி என்பதுடன் புத்த சமயம் சம்பந்தப்பட்ட மேற்குலக நாட்டின் பட்டதாரியும் ஆவார்.

இன்றைய உலகின் மிகவும் சந்தோசமான மனிதனான 'மத்தேயு ரிக்கார்ட்' தியானம் குறித்து ‘ தி ஆர்ட் ஆப் மெடிடேசன்('The Art of Meditation' ) எனும் பிரபல புத்தகம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

English summary

Tibetan monk is world's happiest man, say neuroscientists | மனதை மகிழ்ச்சியாய் வைத்திருக்கும் நேர்மறை எண்ணங்கள்!

Happiness has long been considered immeasurable and believed to be a subjective interpretation of a person's sense of peace and well-being. A group of neuroscientists at the University of Wisconsin claim that happiness can be measured, and have proclaimed Matthieu Ricard, a 66-year old Tibetan monk the happiest man in the world.
Story first published: Friday, December 7, 2012, 18:21 [IST]
Desktop Bottom Promotion