For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பகலில் தூங்காதீங்க மன அழுத்தம் வரும் - ஆய்வில் தகவல்

By Mayura Akilan
|

Sleep Disoder
உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவது இயல்பு அதேசமயம் பகலில் தூங்குபவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறிந்துள்ளனர். உடல் பருமனாக இருப்பவர்கள் எளிதில் சோர்வடைவதோடு பகலில் அதிக நேரம் தூங்குவதை விரும்புகின்றனர் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் வசிக்கும் 20 சதவிகித இளைஞர்கள் பகல் நேர தூக்கத்தை விரும்புகின்றனராம். இதுதொடர்பாக பகலில் தூங்கும் 1,173 இளைஞர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி அந்த இளைஞர்களுக்கு உயர்ரத்த அழுத்தம், மனஅழுத்தம் போன்றவை இருந்தது கண்டறியப்பட்டது. இரவில் சரியாக உறக்கம் வராமல் தவிப்பவர்கள் பலரும் பகல்நேரத்தில் தூங்கி பொழுதை கழிக்கின்றனர் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் வீட்டில் மனோநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளை கொண்டிருப்போருக்கு மன அழுத்தம் ஏற்படுவது இயற்கையான ஒன்று என்று மற்றொரு ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. பெரியவர்களுக்கு மன அழுத்தம் எவ்வாறு ஏற்படுகிறது என்பதை கண்டறிவதற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த அதிகாரிகள் 83 ஆண்/பெண்களிடம் பரிசோதிக்கப்பட்டது. அவர்களுக்கு மூளை பாதிப்புக்குள்ளான குழந்தைகள் இருப்பதால், பெரியவர்களின் மனோநிலையிலும் மாற்றம் ஏற்படுவது தெரிய வந்தது.

குழந்தைகளின் பாதிப்புகளால் வீட்டில் இருப்பவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவது தெரிய வந்துள்ளது. அதேசமயம் மனோநிலை பாதிப்பு ஏதுமில்லாமல் உள்ள குழந்தைகளுடன் வசிப்போருக்கு எவ்வித மன அழுத்தமும் இருப்பதில்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சகோதரரோ அல்லது சகோதரியோ மனோநிலை பாதிக்கப்பட்டிருப்பாரேயானால், வீட்டில் உள்ளவர்களுக்கு இயல்பாகவே மன அழுத்தம் ஏற்பட்டு விடுவதும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனன.

English summary

Obesity, Depression Linked to Daytime Sleepiness | பகலில் தூங்காதீங்க மன அழுத்தம் வரும் - ஆய்வில் தகவல்

Being obese or depressed may make you more likely to be sleepy during the day, new research shows. About 20% of American adults have excessive daytime sleepiness, according to the National Sleep Foundation.
Story first published: Saturday, July 28, 2012, 11:51 [IST]
Desktop Bottom Promotion