Latest Updates
-
மாங்காய் Vs. மாம்பழம்: இந்த இரண்டில் எது உண்மையில் ஆரோக்கியமானது தெரியுமா? உங்களுக்கு பிடிச்சது எது? -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும் -
2050-ல் உலகை ஆளப்போகும் டாப் 10 நாடுகள்: இந்தியா 2050-ல் எந்த நிலையில் இருக்கும் இருக்கப்போகுது தெரியுமா? -
சிக்கன் எடுத்தா இப்படி குக்கர்-ல ஒருடைம் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
வார ராசிபலன் (19 April 2026 - 25 April 2026) - இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
மட்டன் வாங்குனா.. ஒருடைம் இந்த செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
அடுத்தடுத்து நட்சத்திரத்தை மாற்றும் 3 கிரகங்கள்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
வெயிலால் முகம் டல்லாகிடுச்சா? அப்ப 1 ஸ்பூன் அரிசி மாவு வெச்சு தினமும் நைட் இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
உங்க எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப மஞ்சளை உங்க உணவில் இப்படி சேர்த்துக்கோங்க...!
இந்தியாவின் அனைத்து சமயலறைகளிலும் இருக்கும் ஒரு அத்தியாவசிய பொருள் என்றால் அது மஞ்சள்தான். மசாலா பொருளான மஞ்சள், உணவிற்கு நிறத்தை தருவதோடு, கிருமிநாசினியாகவும் செயல்படும் தன்மை கொண்டது என்பது நாம் அறிந்ததே. ஆனால் இது உடல் எடையைக் குறைப்பதிலும் சிறப்பான பலன்களை தரவல்லது.
மஞ்சளில் உள்ள சேர்மமான குர்குமின், எடை மேலாண்மைக்கு உதவ கூடிய, அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டிருக்கிறது. மஞ்சள் மட்டுமே எடையைக் குறைக்கும் பொருள் இல்லை என்றாலும், அதை சரியான முறையில் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழங்குவதன் மூலம் உங்கள் ஒட்டுமொத்த இலக்குகளை அடைவதில் பங்களிக்கும். எடை இழப்புக்கு மஞ்சளை உணவில் எப்படி சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று இந்த பதிவில் தெரிந்து கொல்லலாம்.

உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்
மஞ்சளை சாப்பிடுவதற்கான எளிய வழிகளில் ஒன்று, அதை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது தான். நமது அன்றாட உணவான குழம்பு, ரசம், பொரியல் என அனைத்து காய்கறிகளுடனும் மஞ்சள் சேர்த்து சமைக்க வேண்டும். மேலும் நாம் செய்யும் சூப்கள் மற்றும் கார வகை சிற்றுண்டிகளிலும் சேர்க்கலாம்.
அரிசி உணவுகளில் சுவை மற்றும் நிறமூட்டியாகவும் மஞ்சளை சேர்த்து கொள்ளலாம். மற்ற ஆரோக்கியமான பொருட்களுடன் மஞ்சளை சேர்த்து சாப்பிடும் போது உடலால் அதிகம் உறிஞ்சுப்பட்டு, அதன் செயல்திறனை அதிகரிக்கிறது.
எப்போதும் கருப்பு மிளகுடன் சேர்க்கவும்
கருப்பு மிளகில் காணப்படும் பைபரின் என்ற கலவை, மஞ்சளில் உள்ள குர்குமின் உறிஞ்சுதலை 2000% வரை அதிகரிக்கிறது. எனவே, முடிந்தவரை கருப்பு மிளகுடன் மஞ்சளை இணைப்பது நல்ல பலன்களை தரக்கூடியது. மஞ்சள் சேர்த்து சமைக்கும் உணவுகளில் ஒரு சிட்டிகை கருப்பு மிளகு சேர்ப்பது அதன் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும் தன்மையை அதிகரிக்கவும், எடை இழப்புக்கும் சிறப்பான பலன்களை கொடுக்கும்.
தங்க பால்
தங்க பால் என்றும் அழைக்கப்படும் மஞ்சள் பால், ஆயுர்வேத மருத்துவத்தில் பிரபலமான ஒரு பாரம்பரிய பானமாகும். தங்கப் பால் தயாரிக்க, மஞ்சள் தூளை வெதுவெதுப்பான பாலுடன் (அல்லது பாதாம் பால் அல்லது தேங்காய் பால் போன்ற பால் இல்லாத மாற்று பாலுடன்), சிறிது மிளகுத்தூள் மற்றும் தேன் அல்லது மேப்பிள் சிரப் போன்ற உங்களுக்கு விருப்பமான இனிப்பு சுவையை சேர்த்துக் கொள்ளவும். தினமும் உறங்குவதற்கு முன் ஒரு கப் தங்கப் பாலை குடிப்பது உடல் தளர்வை குறைக்க ஊக்குவிக்கும் மற்றும் இரவு நேர பசியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் எடை இழப்பு முயற்சிகளில் சிறிய பங்காற்றுகிறது.
மஞ்சள் தேநீர்
தங்கப் பாலைப் போலவே, மஞ்சள் தேநீர் எடை இழப்புக்கு உதவும் மற்றொரு இனிமையான பானமாகும். மஞ்சள் தேநீர் தயாரிக்க, சுத்தமான மஞ்சள் தூள் அல்லது புதிய மஞ்சள் துண்டுகளை சூடான நீரில், கருப்பு மிளகு, இஞ்சி, மற்றும் இலவங்கப்பட்டை போன்ற பிற மசாலாப் பொருட்களுடன் சேர்த்து கொதிக்கவிடவும்.
பின் வடிகட்டி விரும்பினால் அதனுடன் தேன் சேர்த்து சுவையை அதிகரித்துக் கொள்ளவும். நாள் முழுவதும் டீ அல்லது காபிக்கு பதிலாக மஞ்சள் தேநீர் பருகுவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், மனநிறைவை மேம்படுத்தவும் உதவ கூடியது.
ஆரோக்கியமான கொழுப்புகளுடன் சேர்க்கவும்
குர்குமின் கொழுப்பில் கரையக்கூடியது, அதாவது கொழுப்புகளுடன் சேர்த்து உட்கொள்ளும்போது அது உடலால் நன்றாக உறிஞ்சப்படும். தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் அல்லது வெண்ணெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளை மஞ்சள் கலக்கப்பட்ட உணவில் சேர்க்கும் போது அது உடலால் நன்றாக உறிஞ்சப்படுவதோடு செயல்திறனையும் மேம்படுத்துகிறது.
எடுத்துக்காட்டாக, மஞ்சள் கலந்த காய்கறிகளை தேங்காய் எண்ணெயில் சமைப்பது அல்லது சாலட்களின் மேல் ஆலிவ் எண்ணெயில் செய்யப்பட்ட மஞ்சள் தூளை சேர்த்து சாப்பிடுவது நல்ல பலனை தரக்கூடியது.
மஞ்சள் சப்ளிமெண்ட்ஸ்
உங்கள் உணவில் தொடர்ந்து மஞ்சளை சேர்ப்பது சவாலானதாக இருந்தால், மஞ்சள் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்ளுங்கள். மேம்படுத்தப்பட்ட சத்துக்களை உறிஞ்சுவதற்காக தரப்படுத்தப்பட்ட குர்குமின் சாறு மற்றும் கருப்பு மிளகு சாறு கொண்ட சப்ளிமெண்ட்ஸை முயற்சியுங்கள்.
இருப்பினும், எந்தவொரு புதிய சப்ளிமெண்ட் முறையைத் தொடங்குவதற்கு முன்பும், ஒரு மருத்துவருடன் கலந்தாலோசிப்பது மிகவும் அவசியம், குறிப்பாக நீங்கள் வேறு எதாவது உடல்நல பிரச்னைகளுக்காக மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போதோ அல்லது மருந்து ஒவ்வாமை இருக்கும் போதோ கட்டாயம் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
சீரான உணவு மற்றும் உடற்பயிற்சியை கடைபிடிக்கவும்
மஞ்சள் எடை இழப்புக்கான சாத்தியமான நன்மைகளை வழங்கலாம் என்றாலும், ஒரு சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சியும் அவசியமான ஒன்று. பழங்கள், காய்கறிகள், மெலிந்த புரதங்கள் மற்றும் முழு தானியங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும், அதே நேரத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை குறைக்கவும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன் மஞ்சளை உட்கொள்வது, வழக்கமான உடல் செயல்பாடு உட்பட, நிலையான எடை இழப்பை அடைவதற்கு முக்கியமாகும்.
மஞ்சளை அதிகமாக சாப்பிட வேண்டாம்
மஞ்சளில் கலோரிகள் குறைவாக இருந்தாலும், உபயோகிக்கும் அளவுகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம், குறிப்பாக மஞ்சள் நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, அதிகப்படியான உணவு எடை இழப்பு ஏற்படுவதை தடுக்கலாம், எனவே உபயோகிக்கும் அளவுகளை கட்டுப்படுத்தவும், உங்கள் உடலின் பசி மற்றும் முழுமையான நிலையை சரியாக கவனிக்கவும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications












