Latest Updates
-
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்!
முகத்துலயும், கண்ணுலயும் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்களுக்கு மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு..
Brain Tumour Signs In Tamil: மூளைக் கட்டி என்பது மூளை அல்லது அதற்கு அருகில் உள்ள செல்களின் அசாதாரண வளர்ச்சியால் ஏற்படும் கட்டிகளாகும். இதில் இரண்டு வகையான புற்றுநோய்கள் உள்ளன. அவை ஒன்று வீரியமிக்க மூளை புற்றுநோய், மற்றொன்று தீங்கற்ற புற்றுநோயல்லாத கட்டி.
மூளையில் வளரும் கட்டிகள் வீரியமிக்கவையாக இருந்தாலும் சரி, தீங்கற்றவையாக இருந்தாலும் சரி, மூளையில் உள்ள கட்டிகள் மூளையின் செயல்பாட்டில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் இந்த கட்டிகள் வளர வளர அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகப்படியான அழுத்தத்தைக் கொடுக்கும்.

ஆய்வுகளின் படி, சுமார் 150 வகையான மூளைக் கட்டிகள் உள்ளன. அதில் சில மூளைக்குள் உருவாகலாம் என்றாலும், சில கட்டிகள் முதுகுத் தண்டு பகுதிகளில் உருவாகலாம். இதனால் மூளைக் கட்டிகள் இருந்தால், அது வெளிப்படுத்தும் அறிகுறிகளைக் கொண்டு புரிந்து கொள்வது சற்று சிரமமாக இருக்கும். ஆனால் மூளைக் கட்டிகள் இருந்தால், அது ஒருசில அசாதாரண அறிகுறிகளை வெளிக்காட்டும். இப்போது அந்த அறிகுறிகள் குறித்து தான் காணப் போகிறோம்.
மூளைக் கட்டியால் யார் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது?
மூளைக் கட்டியின் அறிகுறிகளை தெரிந்து கொள்வதன் முன், மூளைக் கட்டி யாருக்கெலலாம் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மூளைக் கட்டியானது ஒருவருக்கு எந்த வயதிலும் வரலாம். ஆனால் வயது அதிகரிக்கும் போது மூளைக் கட்டி போன்ற பல புற்றுநோய்களின் அபாயம் அதிகம் உள்ளன. அதுவும் மூளைக் கட்டியின் அபாயமானது 85 முதல் 89 வயதிற்குட்பட்டவர்களுக்கு வருதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளன.
ஆய்வாளர்களின் கூற்றுப்படி, உடலில் உள்ள குரோமோசோம்களில் உள்ள சில மரபணுக்கள் சேதமடையும் போது மூளைக் கட்டிகள் உருவாகின்றன. இதனால் ஒருவரது செயல்திறன் மெதுவாக குறையக்கூடும். குரோமோசோம்களில் உள்ள டிஎன்ஏ தான் உடலில் உள்ள ஒவ்வொரு செல்களின் வளர்ச்சிக்கும், பெருக்கத்திற்கும் வழிகாட்டுகிறது.
மூளைச் செல்களின் டிஎன்ஏவில் மாற்றம் ஏற்படும் போது, அது மூளை செல்களுக்கு புதிய வழிமுறைகளை வழங்குகிறது. இதனால் உடலானது அசாதாரண செல்களின் வளர்ச்சியைத் தொடங்குகின்றன மற்றும் இயல்பை விட வேகமாக வளர்ச்சி அடைந்து, சில சமயங்களில வாழ்நாளைக் குறைக்கின்றன. எப்படியெனில் மூளையில் கட்டிகள் வளர்ச்சி அடையும் போது, அது மூளையின் இடத்தையும் சேர்த்து எடுத்துக் கொள்கிறது. இதனால் மூளையால் சிறப்பாக செயல்பட முடியாமல் போகிறது.
மூளைக் கட்டியை வரவழைக்கும் பிற காரணிகள்
* அதிகப்படியாக மொபைலை பயன்படுத்துவது
* கெமிக்கல் வெளிப்பாட்டில் இருப்பது
* டயட் மற்றும் வாழ்க்கை முறை காரணிகள். அதாவது பழங்கள் மற்றும் காய்கறிகளை குறைவாக உட்கொண்டு, கொழுப்புள்ள உணவுகளை அதிகம் உண்பது.
* ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள்
* வயது மற்றும் பாலினம்
முகத்தில் தெரியும் மூளைக் கட்டியின் அறிகுறிகள்
உங்களுக்கு மூளைக் கட்டி இருக்கிறதா என்பது சரியாக தெரியவில்லையா? அப்படியானால் கடுமையான தலைவலியுடன், முகத்தில் பின்வரும் அறிகுறிகள் தென்படும். அந்த அறிகுறிகளை அனுபவித்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். அவை:
* விழுங்குவதில் சிரமம்
* முகம் மிகவும் சோர்ந்து காணப்படுவது
* முகத்தில் உணர்வின்மை
* அனைத்தும் இரண்டாக தெரிய ஆரம்பிப்பது.
கண்களில் தெரியும் மூளைக் கட்டியின் அறிகுறிகள்
மூளைக் கட்டிகள் இருப்பின், கண்களில் அதன் அறிகுறிகள் தென்படத் தொடங்கும். அந்த அறிகுறிகள் பின்வருமாறு:
* வேகமாக கண் சிமிட்டுவது
* பார்வை மோசமாக தெரிவது
* புறப் பார்வை இழப்பு மற்றும் குருட்டுப் புள்ளிகள்
* மேலே பார்ப்பது அல்லது கண் அசைவுகளைக் கட்டுப்படுத்துவதில் சிரமத்தை சந்திப்பது
* அசாதாரண கண் அசைவுகள் அல்லது கண்கள் பளபளவென்று மின்னுவது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் அனைத்தும் மூளையில் கட்டிகள் இருப்பதற்கான அறிகுறிகள். உங்களிடம் இந்த அறிகுறிகள் தென்பட்டால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து, உடனே சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
