For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடம்பில் தேங்கியுள்ள கெட்ட நீரை வெளியேற்றணுமா? இதோ சில எளிய வழிகள்!

|

எப்போது உடலில் உள்ள இரத்த அணுக்கள் மற்றும் சுற்றோட்ட அமைப்பில் திரவம் அதிகம் தேங்குகிறதோ, அப்போது அது உடலில் நீர் எடைக்கு வழிவகுக்கும். அதோடு இது ஒருவரேத தோற்றத்தைமே மாற்றுவதோடு மட்டுமின்றி, சோர்வையும் உண்டாக்கும். உங்கள் முகம், கால்கள் மற்றும் கைகள் வீங்கி காணப்பட்டால், உங்கள் உடலில் கெட்ட நீர் தேங்கி, நீர் எடையைப் பெற்றுள்ளீர்கள் என்று அர்த்தம்.

ஒருவருக்கு நீர் எடையானது உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, தவறான மருந்துகள், மாதவிடாய் மற்றும் கர்ப்ப காலங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், அதிகளவிலான சோடியம் அல்லது சர்க்கரை, பூச்சிக்கடி அல்லது உணவால் ஏற்படும் அழற்சி போன்றவற்றால் ஏற்படலாம். ஆனால் ஒருசில உணவு மாற்றங்களால் உடலில் தேங்கியுள்ள நீரின் எடையைக் குறைக்க முடியும்.

MOST READ: சமீப காலமாக கொரோனாவால் நிறைய பேர் இறப்பதற்கு இதுதான் காரணமாம்! - உஷாரா இருங்க...

அதிலும் கண்டிப்பான ஒரு டயட்டை மேற்கொள்வதன் மூலம் ஒரு நாளில் மூன்று பவுண்ட் வரை எடையைக் குறைக்கலாம். உங்களுக்கு உடலில் உள்ள கெட்ட நீரை எப்படி இயற்கையாக வெளியேற்றுவது என்பதை தெரிந்து கொள்ள விரும்பினால், இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே நீர் எடையைக் குறைப்பதற்கான சில இயற்கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாக்லேட்

சாக்லேட்

டார்க் சாக்லேட்டில் நல்ல கொழுப்புக்கள் உள்ளன. இது ஆவலைக் குறைத்து, இரத்த நாளங்களில் சர்க்கரை உறிஞ்சுவதை மெதுவாக்கும். அதிலும் உணவு உண்ட பின் ஒரு துண்டு டார்க் சாக்லேட் சாப்பிடுவது நல்லது. ஏனெனில் டார்க் சாக்லேட்டில் உள்ள கொக்கோ உள்ளது. கொக்கோவில் காப்ஃபைன் என்னும் டையூரிக் உள்ளது. இது உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான நீரை வெளியேற்ற உதவுகிறது.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர் ஒரு நேச்சுரல் டையூரிக் போன்று செயல்படும் மற்றும் உடலில் பொட்டாசியத்தின் அளவைப் பராமரிக்க உதவி புரியும். ஆனால் ஆப்பிள் சீடர் வினிகரை அப்படியே குடிக்கக்கூடாது. ஏனெனில் இதில் அசிட்டிக் அமிலம் அதிகம் உள்ளதால், இது உணவுக்குழாய் மற்றும் பற்களின் எனாமலைப் பாதிக்கும். எனவே ஒரு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் நீரில் கலந்து, மதிய உணவு உண்ட பின் குடியுங்கள். இதனால் உடலில் உள்ள அதிகப்படியான கெட்ட நீர் வெளியேற்றப்பட்டு, உடல் எடை குறையும்.

அஸ்பாரகஸ்

அஸ்பாரகஸ்

அஸ்பாரகஸில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோய் மற்றும் கண் புரையை எதிர்த்துப் போராட உதவிபுரியும். மேலும் இதில் ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. அஸ்பாரகஸில் உள்ள அஸ்பாரகைன்கள் சிறுநீரகங்களை சுத்தம் செய்ய உதவுவதுடன், நீர் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.

முட்டைக்கோஸ் ஜூஸ்

முட்டைக்கோஸ் ஜூஸ்

முட்டைக்கோஸ் உடலில் உள்ள கொழுப்புக்களின் தேக்கத்தை உடைத்தெறிய உதவுகிறது. இதில் டயட்டரி நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. முட்டைக்கோஸை அரைத்து சாறு எடுத்து, அதில் சுவைக்காக சிறிது உப்பு மற்றும் மிளகு சேர்த்து, மதிய உணவுக்கு முன் குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள கொழுப்புக்கள் மற்றும் உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான நீர் வெளியேறும்.

கேரட்

கேரட்

கேரட் கண்களுக்கு மட்டுமின்றி, எடையைக் குறைக்கவும் நல்லது. இதில் வைட்டமின்களான வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், டயட்டரி நார்ச்சத்து மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து போன்றவை அதிகம் நிறைந்துள்ளது. இதனால் இது நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும். மேலும் இது உடலின் மெட்டபாலிச செயல்முறையை வேகப்படுத்தவும், அதிகப்படியான கொழுப்பு மற்றும் நீரை நீக்கவும் உதவுகிறது. ஆகவே உடலில் உள்ள கெட்ட நீர் சீக்கிரம்

பட்டை டீ

பட்டை டீ

பட்டை இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிப்பதோடு, உடலில் சேரும் கொழுப்பை சேமிப்பதை விட ஆற்றலாக மாற்ற உதவுகிறது.

ஒரு டம்ளர் நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ஒரு துண்டு பட்டை அல்லது 1 டீஸ்பூன் பட்டை பொடி சேர்த்து 15 நிமிடம் மூடி வைக்க வேண்டும். பின் அந்த டீயைக் குடிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 1 அல்லது 2 முறை குடித்தால், ஒன்று அல்லது இரண்டு வாரத்தில் எடையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

சுரைக்காய்

சுரைக்காய்

சுரைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது பசியுணர்வைக் குறைப்பதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும் மற்றும் உடலை வறட்சியடையாமல் நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ளும். அதற்கு ஒரு கப் சுரைக்காய் ஜூஸில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, காபி, டீ குடிக்கும் நேரத்தில் குடியுங்கள்.

எலுமிச்சை ஜூஸ் மற்றும் மிளகு

எலுமிச்சை ஜூஸ் மற்றும் மிளகு

நீர் உடம்பு உள்ளவர்கள் தினமும் ஒரு டம்ளர் நீரில், பாதி எலுமிச்சையைப் பிழிந்து, அத்துடன் சிறிது மிளகுத் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த ஜூஸை மதிய உணவு உண்ட பின் குடிக்க வேண்டும்.

சோம்பு

சோம்பு

சோம்பு விதைகள் கொழுப்பைக் கரைக்கவும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும் இது பசியைக் கட்டுப்படுத்தும் பொருளும் கூட. இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், நாள் முழுவதும் சோம்பு போட்டு கொதிக்க வைத்த நீரை குடித்து வந்தால், உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். இருப்பினும், ஒரு நாளைக்கு 1 லிட்டருக்கும் அதிகமாக சோம்பு நீரைக் குடிக்காதீர்கள்.

ரோஜா நீர்

ரோஜா நீர்

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் சிறிது ரோஜாப்பூ இதழ்களைப் போட்டு 15 நிமிடம் குறைவான தீயில், ரோஜா இதழ்கள் நிறத்தை இழக்கும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின் அந்த நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் 100 மிலி குடிக்க வேண்டும். இதனாலும் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Proven Home Remedies to Get Rid of Water Weight in Tamil

Here are some proven home remedies to get rid of water weight. Read on...