Just In
- 9 hrs ago
இன்றைய ராசிப்பலன் (26.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- 19 hrs ago
மைதா போண்டா
- 19 hrs ago
உங்க வாயை சுத்தி அசிங்கமா கருப்பா இருக்கா? இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க...
- 20 hrs ago
திருமண வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் செய்யும் முக்கியமான பாவங்கள் இவைதான்... இனியாவது திருந்துங்க...!
Don't Miss
- News
ரூட் மாற்றி.. மத்திய டெல்லி வரை முன்னேறிய விவசாயிகள்.. தடுப்பை தாண்டி ஓடிய போலீசார்.. பரபரப்பு
- Movies
சைக்கிள் திருடர்கள்.. மகளுடன் சைக்கிளில் டபுள்ஸ் போகும் அரவிந்த் சுவாமி.. வைரலாகும் போட்டோ!
- Finance
வரலாறு காணாத ஆர்டர்.. தூள் கிளப்பிய எல்&டி.. ரூ.2,467 கோடி லாபம்..!
- Sports
107 ஆண்டுகள்ல இல்லாத சாதனை... ஜோ ரூட் தலைமையில் சாதித்த இங்கிலாந்து.. மிகச்சிறப்பு
- Automobiles
2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்!! இந்தியாவில் மார்ச்சில் அறிமுகம்
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நீண்ட நாள் நோயின்றி ஆரோக்கியமா வாழ ஆசையா? அப்ப இத காலையில செய்யுங்க போதும்...
பெரும்பாலானோரின் காலை வழக்கம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத் தான் இருக்கும். ஆனால் ஒருசிலர் மட்டுமே உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க மிகவும் பயனுள்ள செயல்பாடுகளை மேற்கொள்வார்கள். அவ்வாறு மேற்கொள்ளும் செயல்கள் அவர்களின் அன்றைய தினத்தை சிறப்பாக வைத்திருப்பதோடு, உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட நாட்கள் சிறப்பாக வைத்திருக்கும்.
பொதுவாக உடலில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ அல்லது உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றாலோ தான் காலை வழக்கத்தில் மாற்றங்களை கொண்டு வருவார்கள். இப்படி ஒரு பிரச்சனை வந்த பின் காலை வழக்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு பதிலாக, நோய் வருவதற்கு முன்பாகவே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காலை வழக்கங்களை மேற்கொண்டால் அவஸ்தைப்பட வேண்டிய அவசியம் இருக்காது அல்லவா?
எனவே தமிழ் போல்ட் ஸ்கை நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருக்க மேற்கொள்ள வேண்டிய சில ஆரோக்கியமான காலை வழக்கங்களை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

காது மசாஜ்
காலையில் எழுந்ததும் காதுகளுக்கு மசாஜ் செய்வது தூக்க கலக்கத்தை முற்றிலும் நீக்க உதவும். இதை நீங்கள் படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கும் போதே செய்யலாம். இப்படி செய்வதால் காதுகளின் உணர்திறன் பகுதிகள் தூண்டப்பட்டு, உடலின் ஆற்றல் அதிகரிப்பது போன்ற சாதகமான விளைவை ஏற்படுத்துகின்றன.

எலுமிச்சை நீர்
காலை எழுந்ததும் காபிக்கு பதிலாக குடிப்பதற்கு ஏராளமான பானங்கள் உள்ளன. அதிலும் ஒரு டம்ளர் எலுமிச்சை நீரைக் குடித்தால், சிறுநீரகம், குடல் மற்றும் செரிமான மண்டலத்தின் செயல்பாடு மேம்படுத்தப்படும். இது உடலில் இருந்து நச்சுக்களை நீக்க உதவும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். அதுவும் காலை உணவிற்கு 30 நிமிடத்திற்கு முன் குடிப்பது மிகவும் நல்லது.

நாக்கை சுத்தம் செய்யவும்
தினமும் இரண்டு முறை பற்களைத் துலக்க வேண்டும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதே சமயம் நாக்கையும் சுத்தம் செய்ய மறக்கக்கூடாது. ஏனெனில் நாக்கில் தான் ஏராளமான பாக்டீரியாக்கள் தேங்கியிருக்கும். இது தான் வாய் துர்நாற்றத்தை உண்டாக்குவதோடு, சொத்தை பல் மற்றும் ஈறு பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கின்றன. அதற்காக நாக்கை சுத்தம் செய்ய தனியாக கருவியைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறவில்லை. நீங்கள் பற்களைத் துலக்கும் பிரஷ் கொண்டு தேய்த்தாலே போதும். முக்கியமாக மிகவும் அழுத்தி தேய்க்காதீர்கள். இல்லாவிட்டால், நாக்கின் மேற்புறம் சேதமடைந்துவிடும்.

ஒரு ஸ்பூன் தேன்
தேன் ஆற்றால் நிரம்பியது. தேனை சாப்பிட்டால், நினைவாற்றல் மற்றும் உற்பத்தி திநறன் தூண்டப்படுவதோடு, இருமல் குணமாகும் மற்றும் அழற்சிக்கான அறிகுறிகள் நீங்கும். எனவே தான் காலையில் எழுந்ததும் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிடுவது நல்லது. அதுவும் நல்ல சுத்தமான தேனை சாப்பிட வேண்டும் மற்றும் காலை உணவிற்கு 10-15 நிமிடத்திற்கு முன் சாப்பிடுவது நல்லது. ஒருவேளை உங்களுக்கு மிகவும் இனிப்பாக இருப்பது போன்று தோன்றினால், ஒரு டம்ளர் நீரில் கலந்து குடியுங்கள்.

ஹைட்ரஜன் பெராக்ஸைடு மௌத் வாஷ்
காலையில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாயைக் கொப்பளியுங்கள். அதுவும் சரியான விகிதமான 5-7 துளிகள் 3% ஹைட்ரஜன் பெராக்ஸைடு உடன் 50 மிலி நீர் சேர்த்து கலந்து வாயை தினமும் கொப்பளித்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இவ்வாறு தினமும் செய்வதன் மூலம், பற்கள் வெண்மையாக இருக்கும், வாய் துர்நாற்றம் நீங்கும் மற்றும் ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் குணமாகி பாதுகாப்பாக இருக்கும்.

ஸ்ட்ரெட்சிங்/யோகா பயிற்சி
தினமும் காலையில் தூங்கி எழுந்ததும் சிறிது நேரம் ஸ்ட்ரெட்சிங் பயிற்சியை செய்வதன் மூலம், தசைகள் தளர்வடைந்து, தசைகளில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இப்படி தினமும் காலை 10 நிமிடம் சில யோகா பயிற்சியை செய்தால், உடல், மனம் மற்றும் சுவாசம் ஆகிய மூன்றும் இணைந்து, அன்றைய தினம் சிறப்பாக இருக்க தயாராகும்.

தியானம்
தினமும் காலையில் சிறிது நேரம் தியானம் செய்தால், மன அழுத்தம் குறையும், மனதை ஒருமுகப்படுத்தும் திறன் மேம்படும், உணர்ச்சி ஸ்திரத்தன்மை மேம்படும் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளை தடுக்கப்படும். எனவே காலையில் தினமும் குறைந்தது மூன்று நிமிடங்கள் உங்கள் கண்களை மூடிக் கொண்டு சுவாசிப்பதில் மட்டும் கவனத்தை செலுத்தி தியானத்தை மேற்கொள்ளுங்கள்.