For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களே! அந்தரங்க பகுதியில் அதிகமா வியர்க்குதா? அதை சமாளிக்கும் வழிகள் இதோ!

அந்தரங்க பகுதியில் சந்திக்கும் வியர்வை பிரச்சனையை கண்டு கொள்ளாவிட்டுவிட்டால், பின் அந்த இடத்தில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி பெருகி பல சரும தொற்றுக்களால் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும்.

|

பொதுவாக வியர்த்தாலே எரிச்சலாக இருக்கும். அதிலும் அந்தரங்க பகுதியைச் சுற்றி அதிகமாக வியர்க்கும் போது, அது எரிச்சலுடன், மிகுந்த தர்ம சங்கடத்தையும் உண்டாக்கும். குறிப்பாக இந்த பகுதியில் சந்திக்கும் வியர்வை பிரச்சனையைக் குறித்து மற்றவர்களுடன் பேசுவதற்கு சங்கடப்படுவோம். ஆனால் ஒருவரது அந்தரங்க பகுதியில் வியர்வை அதிகமாக வெளியேறினால், அது துர்நாற்றத்தை உண்டாக்குவதோடு, அரிப்பு மற்றும் சில சமயங்களில் தீவிர அழற்சியை உண்டாக்கும்.

How Men Can Deal With Sweating In Their Privates

அந்தரங்க பகுதியில் வியர்ப்பதற்கு பின் பல காரணங்கள் உள்ளன. அதில் முதன்மையான ஒன்று போதுமான காற்றோட்டம் இல்லாதது. அந்தரங்க பகுதியில் சந்திக்கும் வியர்வை பிரச்சனையை கண்டு கொள்ளாவிட்டுவிட்டால், பின் அந்த இடத்தில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி பெருகி பல சரும தொற்றுக்களால் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும்.

MOST READ: ஆண்களே! 'அந்த இடத்தில்' அரிப்பு ஏற்பட காரணம் என்னவா இருக்கும்ன்னு தெரிஞ்சுக்கணுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அந்தரங்க பகுதியில் சந்திக்கும் வியர்வை பிரச்சனையை கட்டுப்படுத்தும் சில வழிகள்:

அந்தரங்க பகுதியில் சந்திக்கும் வியர்வை பிரச்சனையை கட்டுப்படுத்தும் சில வழிகள்:

டால்கம் பவுடர்

எப்போதும் குளித்த பின் காட்டன் துணியால் அந்தரங்க பகுதியில் உள்ள ஈரத்தை தவறாமல் துடைக்குமாறு ஆரோக்கிய நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அதன் பின் அந்த பகுதியில் வியர்க்காமல் இருப்பதற்கு டால்கம் பவுடரை லேசாக அப்பகுதியில் பயன்படுத்தவும் கூறுகின்றனர்.

MOST READ: அந்தரங்க முடியை ஷேவிங் செய்யும் போது மனதில் கொள்ள வேண்டியவைகள்!!!

பூஞ்சை எதிர்ப்பு பவுடர்

பூஞ்சை எதிர்ப்பு பவுடர்

அந்தரங்க பகுதியில் அதிகமாக வியர்வை வெளியேறினால், அது பூஞ்சை தொற்றுகளுக்கு வழிவகுக்கும். எனவே உங்களுக்கு இப்பிரச்சனை இருந்தால், மருத்துவரை சந்தித்து, அவரிடம் இதுக்குறித்து பேசி, அவர் பரிந்துரைக்கும் பூஞ்சை எதிர்ப்பு பவுடரைப் பயன்படுத்துங்கள். இதனால் அந்தரங்க பகுதியில் ஏற்படும் பூஞ்சை தொற்றுக்களில் இருந்து எளிதில் விடுபடலாம்.

உடுத்தும் உடை

உடுத்தும் உடை

அந்தரங்க பகுதியில் அதிகம் வியர்ப்பதற்கு உடுத்தும் உடையும் ஓர் முக்கிய காரணியாகும். எனவே நீங்கள் எப்போதும் அந்தரங்க பகுதியில் காற்றோட்டம் இல்லாதவாறான இறுக்கமான உடையை அணிவதைத் தவிர்த்து, சற்று லூசான உடையை அணியுங்கள். அதிலும் காட்டன் துணிகளை அணிவதால், சருமத்தால் எளிதில் சுவாசிக்க முடியும். மேலும் காட்டன் உடைகள் போதுமான காற்றோட்டத்தையும் கொடுத்து, அதிகம் வியர்ப்பதைத் தடுக்கும்.

MOST READ: ஆண்மை குறைவு ஏற்படுகின்றது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!

பொடுகு எதிர்ப்பு ஷாம்பு

பொடுகு எதிர்ப்பு ஷாம்பு

அந்தரங்க பகுதியில் அதிகமான வியர்வையை சந்திக்கும் ஆண்கள், அந்த பகுதியில் வீசும் துர்நாற்றத்தைத் தவிர்க்க பொடுகு எதிர்ப்பு ஷாம்புக்களைக் கொண்டு, அந்தரங்க பகுதியைக் கழுவலாம். இதனால் அந்தரங்க பகுதியில் ஈஸ்ட் தொற்றுக்கள் தடுக்கப்படும்.

ஆன்டி-பாக்டீரியல் வாஷ்

ஆன்டி-பாக்டீரியல் வாஷ்

வியர்வை என்றால் பாக்டீரியா மற்றும் பாக்டீரியா என்றால் எரிச்சல் மற்றும் துர்நாற்றம். வியர்வை உடலில் துர்நாற்றத்தை உண்டாக்குவதோடு மட்டுமின்றி, அந்த வியர்வையால் சருமத்தில் பாக்டீரியாக்கள் பெருகி சரும பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே அந்தரங்க பகுதியில் அதிகமான வியர்வையை சந்தித்தால், ஆன்டி-பாக்டீரியல் வாஷ் பயன்படுத்தி அப்பகுதியைக் கழுவுங்கள்.

MOST READ: ஆண்களே! இதோ ஆண்மை இழப்பு ஏற்படுவதைத் தடுக்கும் பழங்கள்!!!

தண்ணீர் குடிக்கவும்

தண்ணீர் குடிக்கவும்

துர்நாற்றத்தை உண்டாக்கும் நச்சுக்களை உடலில் இருந்து வெளியேற்ற நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அதிலும் கோடைக்காலத்தில் நீரை அதிகம் குடித்தால், உடல் வறட்சி தடுக்கப்பட்டு, நச்சுக்கள் நீங்கி உடல் துர்நாற்றமும் தடுக்கப்படும்.

மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தவும்

மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தவும்

கவட்டையில் வியர்ப்பதற்கு பொதுவான காரணங்களில் ஒன்று எரிச்சலூட்டும் வறண்ட சருமம். இத்தகையவர்கள் குளிக்கும் போது ஈரப்பதமூட்டும் சோப்பு ஜெல்லைப் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்.

MOST READ: நீங்க 'அதுல' ஸ்ட்ராங்கா இருக்கணுமா? அப்படின்னா இந்த உணவுகளை சாப்பிடுங்க...

இயற்கை வைத்தியம்

இயற்கை வைத்தியம்

அந்தரங்க பகுதியில் அதிக வியர்வை பிரச்சனையை சந்தித்தால், 3 டேபிள் ஸ்பூன் வெள்ளை வினிகரை ஒரு கப் நீரில் கலந்து, சுத்தமான காட்டன் துணியை அந்நீரில் நனைத்து, அந்தரங்க பகுதியைச் சுற்றி ஒத்தி எடுங்கள். இதனால் அந்தரங்க பகுதியில் வியர்வையால் பாக்டீரியாக்கள் பெருகுவது தடுக்கப்பட்டு சுத்தமாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Men Can Deal With Sweating In Their Privates

When not taken care of, sweating below the waist can lead to several skin infections as it a harbinger of bacterial growth. Here is how to get it under control.
Desktop Bottom Promotion