Latest Updates
-
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
அசைவ உணவுகளை அதிகம் சாப்பிடுபவரா நீங்க? அப்ப இது உங்களுக்கான செய்தி...
அசைவ உணவுகளை சமைக்கும் போது நிச்சயம் கவனமாக இருந்தே ஆக வேண்டும். ஏனென்றால், அசைவ உணவுகள் சரியாக சமைக்கப்படாத நிலையில் அதன் வாயிலாக நோய் கிருமிகள் நம் உடலை சென்றடையலாம்.
கொரோனா வைரஸ் தொற்று அபாயம் தொடங்கிய நாள் முதல் சுத்தத்தின் முக்கியத்துவம் பற்றி பல்வேறு தரப்பினரால் தொடர்ந்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், உலக சுகாதார அமைப்பானது குறிப்பிட்ட இடைவெளிகளில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி வெளியிட்டு வருகிறது. அதன் ஒரு முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து இப்போது தெரிந்து கொள்ள போகிறோம்.

சுய சுகாதாரம் பற்றி இப்போது அனைவருக்கும் ஓரளவு நன்கு புரிந்திருக்கும். அதை நல்ல முறையில் பின்பற்றவும் தொடங்கிவிட்டனர். ஆனால், சுய சுகாதாரத்தை தவிர சமையல் சுகாதாரமும் முக்கியம். அதிலும் அசைவ உணவுகளை சமைக்கும் போது நிச்சயம் கவனமாக இருந்தே ஆக வேண்டும்.
ஏனென்றால், அசைவ உணவுகள் சரியாக சமைக்கப்படாத நிலையில் அதன் வாயிலாக நோய் கிருமிகள் நம் உடலை சென்றடையலாம். பொதுவாக, நன்கு சமைக்கப்படாத கோழிக்கறி போன்றவை விஷத்திற்கு நிகரானது என்று கூறுவர். அப்படி இருக்கையில், இது போன்ற வைரஸ் தொற்று அபாயம் நிலவும் தருணத்தில் சமைக்கும் எதுவாக இருந்தாலும், அது 100% சமைத்திருக்க வேண்டும்.

அசைவ உணவால் கொரோனா பரவுமா?
அசைவம் சாப்பிட்டால் கொரோனா வரும் என்ற ஒரு கட்டுக்கதைகள் நிலவும் இந்த சமூகத்தில், அது பொய் என்றே மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும் விளக்கி வருகின்றனர். நன்கு சமைத்து சாப்பிடப்படும் எந்தவொரு அசைவ உணவிலும் நோய் தொற்று இருக்காது என்பதே உண்மை. இருப்பினும், அசைவ உணவுகளை சமைப்பவர்களுக்கெனவே உலக சுகாதார அமைப்பு சில வழிக்காட்டுதல்களை வெளியிட்டுள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து பலரது ஆர்வம் சமையலின் பக்கம் திரும்பியுள்ளது. அதிலும், வித்தியாசமான அசைவ உணவுகளை சமைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்றே கூற வேண்டும். அவர்களுக்காகவே உலக சுகாதார அமைப்பு இதனை வெளியிட்டுள்ளது. இதனை படித்து நினைவில் கொண்டு, அதன்படி சமைத்து சாப்பிட்டால் எந்தவொரு பிரச்சனையும் ஏற்படாது.

அசைவ பிரியர்களுக்காக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள்:
இறைச்சியை சரியான வெப்பநிலையில் சேமிக்கவும்
உணவுப் பொருட்கள் மற்றும் இறைச்சியை சரியான வெப்பநிலையில் சேமிக்க வேண்டியது அவசியம். இது முக்கிய மூலப்பொருள்கள் பழையதாக மாறிவிடாமல் பாதுகாப்பதோடு, எந்த நுண்ணுயிரிகளும் இறைச்சியைத் தாக்கிடாமல் பாதுகாத்திடும். மேலும், சமைத்த உணவை இரண்டு மணி நேரத்திற்கு மேல் திறந்த நிலையில் வைத்திருக்கக் கூடாது. அதை குளிர்சாதன பெட்டியில் வைப்பதனால், அது பாதுகாப்பாக இருக்கும். விரைவில் கெடக்கூடிய உணவுப் பொருட்களை 5 டிகிரி வெப்பநிலையில் குளிர்சாதன பெட்டியில் சேமிக்கவும். மேலும், சமைத்த எந்த இறைச்சி உணவையும் குளிர்சாதன பெட்டியில் நீண்ட நேரம் சேமித்து வைக்கக்கூடாது. இது குளிர்சாதன பெட்டியிலும் ஒரு வித வாசனையை ஏற்படுத்திவிடுவதோடு, சாப்பிட முடியாமலும் போய்விடும்.

வழிகாட்டுதல்களின்படி அசைவ உணவை சேமிக்கவும்
சமைக்காத இறைச்சி மற்றும் சமைத்த இறைச்சி உணவை எப்போதும் வெவ்வேறு இடங்களில் வைப்பதே சிறந்தது. இரண்டு பாத்திரங்களுக்கும் இடையே குறிப்பிட்ட தூர இடைவெளி விட்டே வைக்கவும். நீங்கள் சமைத்த மற்றும் சமைக்காத இறைச்சியை ஒன்றாக சேமித்து வைக்க முடியாது. ஏனென்றால், சமைக்கப்படாத முட்டை, இறைச்சி, கோழி, கடல் உணவு மற்றும் மீன் போன்றவற்றில் பல தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்கள் அல்லது வைரஸ்கள் இருக்கலாம். எனவே, அவற்றை சமைத்த இறைச்சியுடன் ஒன்றாக வைத்திருந்தால் தொற்று ஏற்படக்கூடும். இந்த உணவுகளில் சில நுண்ணுயிரிகள் உள்ளன. அவை புதிதாக சமைக்கப்பட்ட உணவையும் கூட கெடுத்துவிடும்.

நன்றாக சமைக்கப்படாத இறைச்சியை சாப்பிட வேண்டாம்
அசைவ உணவை ஒருவர் நன்றாக சமைத்த பின்னரே சாப்பிட வேண்டும். குறிப்பாக முட்டை, கோழி, கடல் உணவு போன்றவற்றை நன்கு சமைக்கவும். இறைச்சி மற்றும் கோழி உணவுகளை தயாரிக்கும் போது, குழம்பு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடாது என்பதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இது மிகவும் அவசியம். ஏனென்றால் இவை சரியாக சமைக்கப்படும் போது, அதிலுள்ள அனைத்து நுண்ணிய தீங்கு விளைவிக்கும் உயிரிகளும் அழிந்துவிடும். நிபுணர்களின் கூற்றுப்படி, குறைந்தது 70 டிகிரி வெப்பநிலையில் அசைவ உணவுகள் சமைக்கப்படுவதை உறுதி செய்திடவும்.

சுய சுகாதாரம் முக்கியம்
சமைக்கும் போது, உங்கள் சுய சுகாதாரம் மற்றும் தூய்மை குறித்து நீங்கள் எவ்வளவு அக்கறையுடன் இருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்வது அவசியம். சமையலறை மேற்பரப்பை சுத்தமாக வைத்திருக்கவும். உடைகள், லைட்டர்கள், அடுப்பு, பாத்திரங்கள் மற்றும் கூடைகள் போன்ற சமையலறையில் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் சுத்தமாக இருக்க வேண்டும். சமைப்பதற்கு முன்பு கைகளை நன்கு கழுவவும். கரப்பான் பூச்சிகள் மற்றும் பிற பூச்சிகளிலிருந்து உங்கள் சமையலறையைப் பாதுகாப்பது மிக அவசியம், ஏனெனில் இந்த உயிரினங்கள் பல தீங்கு விளைவிக்கும் தொற்றுநோய்களை பரப்பக்கூடும்.

சமையலுக்கு சுத்தமான நீரை மட்டுமே பயன்படுத்தவும்
உணவு தயாரிக்கும் போது எப்போதும் சுத்தமான நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏனெனில், அழுக்கு நீரானது, நீரினால் பரவக்கூடிய நோய் தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும். இது உங்கள் உணவை மாசுபடுத்துவதோடு, பிற நோய்களையும் ஏற்படுத்திவிடலாம். எனவே, உணவுப் பொருட்களை கழுவவும், சமைக்கவும் எப்போதும் வடிகட்டிய நீரைப் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்.
கொரோனா தொற்று காலத்திற்காக மட்டுமே இவை கூறப்படவில்லை. எப்போது அசைவ உணவுகளை சமைத்தாலும் இவற்றை மனதில் கொண்டு சமைத்தால் நீங்கள் உங்கள் குடும்பத்தை, அசைவ உணவுகளால் ஏற்படக்கூடிய நோய் தொற்றுகளில் இருந்து சுலபமாக காத்திடலாம்.



Click it and Unblock the Notifications