For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மது அருந்தியதால் வீசும் துர்நாற்றத்தைப் போக்கும் சில வழிகள்!

மதுப்பழக்கம் இருப்பவர்களுக்கு, மதுவின் நாற்றம் எப்போதும் வாயில் இருந்து வீசும். அந்த நாற்றத்தை ஒருசில வழிகள் மூலம் தடுக்கலாம்.

|

மது அருந்துவது ஒரு கெட்ட பழக்கம் என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் இன்று மது அருந்துவது ஃபேஷனாகிவிட்டது. பார்ட்டி என்ற வார இறுதி நாட்களில் பலர் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துகின்றனர். ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் தற்போது மது அருந்துகின்றனர். மதுவை அளவாக அருந்தினால் பிரச்சனை இல்லை என ஆய்வுகள் கூறுகின்றன. அதுவே அளவுக்கு அதிகமானால், பல தீவிர பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

Brilliant Home Remedies to Get Rid of Alcohol Breath Fast

தற்போது பல வீடுகளில் கணவன் மனைவிகளுக்கு இடையே பிரச்சனை வருவதற்கு மதுப் பழக்கமும் ஓர் காரணமாகும். ஒருவர் இப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டால், அப்பழக்கத்தைக் கைவிடுவது கடினம். ஆனால் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. எனவே அதிகமாக மது அருந்தும் பழக்கம் இருப்பின், அதை உடனே குறைத்துக் கொள்ளுங்கள்.

இக்கட்டுரையில் மது அருந்தியதால் வீசும் துர்நாற்றத்தைப் போக்கும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மௌத் வாஷ்

மௌத் வாஷ்

வாயில் இருந்து வீசும் மதுவின் நாற்றத்தை நீக்கப் பயன்படுத்தும் ஒரு பொதுவான வழி தான் மௌத் வாஷ். அதிலும் புதினா அல்லது பழங்களின் மணம் கொண்ட மௌத் வாஷ் திரவத்தை வாயில் விட்டு, 30 நொடிகள் கொப்பளித்து, பின் நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். அதோடு நாக்கை சுத்தப்படுத்த உதவும் க்ரீனர் கொண்டு நாக்கை சுத்தம் செய்ய வேண்டும்.

MOST READ: நீங்கள் சர்க்கரை நோயாளியா? அப்ப மீந்து போன பழைய சப்பாத்தியை சாப்பிடுங்க...

சூயிங் கம்

சூயிங் கம்

பொதுவாக மது அருந்துபவர்கள், அதை மறைப்பதற்காக பயன்படுத்தும் ஓர் பொருள் தான் சூயிங் கம். இனிப்பான சூயிங் கம்மை பயன்படுத்துவதற்கு பதிலாக, புளிப்புச் சுவையுடைய சூயிங் கம்மை பயன்படுத்தினால், வாயில் எச்சில் அதிகம் சுரக்கப்பட்டு, மது நாற்றத்தைப் போக்கும்.

பூண்டு

பூண்டு

பூண்டு வலுவான மணம் கொண்ட ஒரு மூலப்பொருள். இது வாயில் இருந்து வீசும் மது நாற்றத்தைப் போக்க உதவும். ஆகவே மது அருந்தும் போது, பூண்டு ப்ளேவர் கொண்ட உணவுப் பொருட்களை சாப்பிடுங்கள். இல்லாவிட்டால், மது அருந்திய பின் ஒரு பூண்டு பல்லை வாயில் போட்டு மெல்லுங்கள்.

MOST READ: உள்ளுறுப்பு கொழுப்புக்களைக் கரைக்க உதவும் ஓர் எளிய வழி!

வெங்காயம்

வெங்காயம்

பொதுவாக டின்னருக்கு ஹோட்டல் சென்றால், சிவப்பு வெங்காயத்தை வினிகரில் போட்டு கொடுப்பார்கள். அது ஆல்கஹால் நாற்றத்தைப் மறைக்க உதவும் என்பது தெரியுமா? சிவப்பு வெங்காயத்தில் உள்ள வலுவான வாசனை, பல மணிநேரம் வாயில் இருக்கும். எனவே மது அருந்திய பின், அந்த நாற்றம் தெரியாமல் இருக்க சிவப்பு வெங்காயத்தை சிறிது சாப்பிடுங்கள்.

காபி

காபி

காபி வலுவான மணத்தைக் கொண்டது மற்றும் இது ஸ்காட்ச் மற்றும் விஸ்கியின் நாற்றத்தையே மறைக்கக்கூடிய அளவில் மணத்தைக் கொண்டது. ஆகவே மது அருந்திய வாசனையை மறைக்க நினைத்தால், பூண்டு, வெங்காயத்திற்கு பதிலாக, ஒரு கப் ஸ்டாங்கான காபியைக் குடியுங்கள்.

MOST READ: தினமும் நெய்யுடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் மிளகுத் தூள் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

வேர்க்கடலை வெண்ணெய்

வேர்க்கடலை வெண்ணெய்

வேர்க்கடலை வெண்ணெய் நல்ல வலுவான வேர்க்கடலை வாசனையைக் கொண்டிருக்கும். மேலும் இது நல்ல சுவையுடனும் இருக்கும். எனவே நீங்கள் உங்கள் வீட்டிற்கு தெரியாமல் மது அருந்தினால், அதை வீட்டில் உள்ளவர்கள் கண்டுபிடிக்காமல் இருக்க, வேர்க்கடலை வெண்ணெயை வாயில் போட்டுக் கொள்ளுங்கள்.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சையில் உள்ள அமிலம், வாயில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் மற்றும் இதில் உள்ள சிட்ரஸ் வாசனை வாய் துர்நாற்றம் அல்லது மது நாற்றத்தைப் போக்க உதவும். அதற்கு எலுமிச்சை சாற்றினை நீரில் சேர்த்து, அத்துடன் சிறிது உப்பு கலந்து வாயில் ஊற்றி, 30 நொடிகள் வைத்து கொப்பளித்து, பின் துப்பவும். இப்படி ஒரு இரண்டு, மூன்று முறை செய்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

MOST READ: பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்!

கொய்யா

கொய்யா

பொதுவாக மது அருந்தினால், அதன் நாற்றத்தை மறைப்பதற்கு கொய்யா சாப்பிட வேண்டும் என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். ஆனால் பலருக்கு கொய்யா பழம் சாப்பிடுவதா, கொய்யா காய் சாப்பிடுவதா என்ற ஒரு சந்தேகம் இருக்கும். ஆனால் எதை சாப்பிட்டாலும், அதன் வலுவான மணம் மதுவின் நாற்றத்தை மறைக்கும்.

தக்காளி ஜூஸ்

தக்காளி ஜூஸ்

தக்காளி ஜூஸிற்கு மதுவினால் வீசும் நாற்றத்தை மறைக்கும் திறன் உள்ளது. எனவே தக்காளியை சாப்பிடுங்கள் அல்லது ஒரு டம்ளர் தக்காளி ஜூஸை காலை உணவின் போது குடியுங்கள். இதனால் முந்தைய நாள் குடிந்த மதுவின் நாற்றம் மறுநாள் வீசாமல் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Brilliant Home Remedies to Get Rid of Alcohol Breath Fast

Here are some simple and natural home remedies that can effectively get rid of alcohol breath fast, either by eliminating or by camouflaging the smell of alcohol on breath.
Desktop Bottom Promotion