Latest Updates
-
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம்
மஹா சிவராத்திரி அன்று எப்படி விரதம் இருக்கலாம்? எது சரியான முறையாக இருக்கும்?
சிவனை பிரம்மாண்டமாக வழிபட கூடிய தினங்களில் மஹா சிவராத்தியும் ஒன்று. மற்ற நாட்களை காட்டிலும் இந்த நாளை அதிக பக்தியுடன் கொண்டாட வேண்டும் என்பது புராணங்களின் கருத்து. காரணம், இந்த நாளில் தான் சிவபெருமானின் பூரண அருளும் நமக்கு கிடைக்கும் என்பதால். மேலும், இந்த நாளில் சிவனை மனமார்ந்த பக்தியுடன் வழிபடும் போது பல நன்மைகள் நமக்கு கிடைக்கும்.

அதுவும் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவபெருமான் தனது பக்தர்கள் மீது அதிக அருள் பொழிவார். குறிப்பாக இந்த விரத நாட்களில் நாம் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். இல்லையேல் அது நமது வழிபாட்டு முறையையும், நமது உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்து விடும்.
மஹா சிவராத்திரி அன்று எப்படி விரதம் இருந்தால் சிவனின் அருள் முழுமையாக கிடைக்கும் என்பதையும், ஆரோக்கியமான முறையில் இதை எப்படி கொண்டு செல்வது என்பதையும் இனி அறிந்து கொள்வோம்.

விரதம்!
சிவபெருமானுக்காக மஹா சிவராத்திரி அன்று விரதம் இருப்பது பல புண்ணியங்களை நமக்கு பெற்று தரும். உடல் மற்றும் மனம் சீரான நிலையில் இருக்கும். கவலை, மன கஷ்டம், வீட்டில் சண்டை, சச்சரவு போன்ற பல இடர்பாடுகளை எளிதில் சிவபெருமான் நீக்கி விடுவார்.

முன்னாள்
விரதம் இருக்க போவதற்கு முன்னாளே சத்தான உணவுகளை சாப்பிட்டு இருக்க வேண்டும். அப்போது தான் மறுநாள் ஆரோக்கியமான முறையில் உங்களால் விரதத்தை மேற்கொள்ள முடியும். அசைவ உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இல்லையேல் இவை மறுநாள் விரதத்தை பாழாக்கி விடும்.

நீர்சத்து
விரதம் இருக்க போவோர் எதையுமே சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அவ்வப்போது தண்ணீர் குடித்து வருவது உடல் நலத்தை பாதிக்காமல் பார்த்து கொள்ளும். குறைந்தபட்சம் 8 கிளாஸ் நீராவது விரதம் இருக்கும் போது அருந்த வேண்டும்.

பழங்கள்
மஹா சிவராத்திரியின் போது விரதம் இருந்தால் பழங்களை எடுத்து கொள்ளலாம். ஆனால், அதற்காக அதிக அளவிலும் பழங்களை சாப்பிட கூடாது. ஏனெனில், இவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை உயர்த்தி விடும். இதனால் சில அபாயங்கள் கூட ஏற்படலாம்.

காபி, பால், டீ
விரதத்தின் போது சிலர் பால், டீ, காபி போன்றவற்றை அருந்தவர்கள். இது சிலருக்கு ஒத்து கொள்ளும், சிலரின் உடலுக்கு ஏற்பதாக இருக்காது. ஆகவே இவற்றை தவிர்க்கலாம். மேலும் செரிமான கோளாறுகளை ஏற்படுத்தாத வகையில் உடலை விரத நாட்களில் பார்த்து கொள்ள வேண்டியது அவசியம்.

மனநிலை
உங்களது மனநிலையை விரத நாட்களில் சீராக வைத்து கொள்வது அவசியம். இல்லையேல் அது விரதத்தையும், வழிபாட்டையும் கெடுத்து விடும். ஆதலால், அமைதியான, நிம்மதியான மனநிலையில் சிவபெருமானை வழிபடுவது சிறந்தது.

விரதத்திற்கு பின்
விரதம் முடிந்து விட்டதே என்பதற்காக கண்ட உணவுகளை சாப்பிட கூடாது. குறிப்பாக அதிக கொழுப்பு சத்து கொண்ட உணவுகளை சாப்பிட கூடாது. இவை நேரடியாக உடலில் பல்வேறு கோளாறுகளை உண்டாக்கும். மேலும், செரிமான பிரச்சினைகளையும் தரும்.

மாத்திரைகள்
சில நோயாளிகள் விரத நாட்களில் மாத்திரைகளை போட்டு கொள்ள மாட்டார்கள். இது போன்று இருப்பது உங்களின் ஆரோக்கியத்தை கெடுத்து மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.
ஆதலால், நோயாளிகள் விரதம் இருப்பதை சிவபெருமானே விரும்ப மாட்டார். எனவே, நீங்கள் சத்தான உணவை உண்டு, மாத்திரைகளை தவறாது போட்டு கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications