Latest Updates
-
செவ்வாய் பெயர்ச்சியால் ஜூன் 21 முதல் இந்த 5 ராசிக்கு பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது.. -
ஜூன் 22-ல் சூரியன் ராகுவின் நட்சத்திரம் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இதுல ஒரு புறாவை தேர்ந்தெடுங்க.. அடுத்த 3 நாட்களில் உங்களுக்கு என்ன நடக்கும்-ன்னு சொல்றோம்.. -
மாங்காயுடன் வேர்க்கடலை சேர்த்து இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைச்சு பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த 5 ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
உலகின் டாப் 10 பணக்கார குட்டி நாடுகள் என்னென்ன தெரியுமா? இந்த நாடுகளில் சில ஆயிரம் பேரே வாழ்கிறார்களாம் -
இந்த 4 ராசிக்காரங்க எல்லோருக்கும் பிரச்சினைகளை கொடுப்பதற்காகவே பிறந்த ஆபத்தான ஆன்மாக்களாம் -
2 மாம்பழமும் 6 பிரட்டும் இருந்தா.. ஸ்கூல் விட்டு வர பிள்ளைகளுக்கு 10 நிமிஷத்துல இந்த ஸ்வீட் செஞ்சு குடுங்க... -
International Yoga Day 2026: சர்வதேச யோகா தினத்தின் வரலாறு என்ன தெரியுமா? இந்த வருட யோகா தினத்தின் சிறப்பு என் -
சனி பகவான் நிலையால் இனி 2027 வரை இந்த 3 ராசிக்காரங்க நல்ல வளர்ச்சியை காண்பார்களாம்!
ஆயுளுக்கு நோய் நொடியில்லாமல் இருக்க செய்ய வேண்டிய எட்டு விஷயங்கள் இதுதான்...
ஆயுள் முழுவதும் நோய் நொடியில்லாமல் வாழ சில ஆரோக்கியமான வழிமுறைகள் இங்கே கூறப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்தி பயன்பெறலாம்.
வாழ்நாள் முழுக்க எந்த நோய், நொடியும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற ஆசை யாருக்குத் தான் இருக்காது. இப்படி வெறுமனே ஆசைப்பட்டால் மட்டுமே போதுமே. அதற்கான நடவடிக்கைகளும் முயற்சிகளும் செய்ய வேண்டாமா?

சுகாதாரமில்லாத அல்லது ஆரோக்கியமற்ற எதையாவது வாங்கி சாப்பிடுவது, உடற்பயிற்சி இல்லாமல் பகலிலும் தூங்குவது, இரவில் தூங்காமல் இருப்பது இன்னும் இன்னும் நிறைய விஷயங்களைச் செய்து, நம்முடைய உடலை நாமே கெடுத்துக் கொள்கிறோம். பிறகு எப்படி ஆரோக்கியமாக இருப்பது. நாம் தினசரி கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றுங்கள் ஆயுள் முழுக்க ஆரோக்கியமாக இருங்கள்.

சரியான உணவை தேர்ந்தெடுங்கள்
ஊட்டச்சத்து மிக்க உணவு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமாகும். நீங்கள் உண்ணும் உணவில் அதிக நார்ச்சத்தும் குறைந்த கொழுப்பும் இருக்க வேண்டும். பொரித்த உணவுகளை விட ஆவியில் வேக வைத்த பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது. பிரெஷ் சாலட், முளை விட்ட தானியங்கள், பழங்கள் போன்றவற்றை உங்கள் உணவில் இணைத்துக் கொள்ளுங்கள். ஆர்கானிக் பொருட்களை முடிந்த வரையில் பயன்படுத்துங்கள். வெள்ளை அரிசிக்கு மாற்றாக கைக்குத்தல் பழுப்பு அரிசி பயன்படுத்துங்கள். சுத்தீகரிக்கப்பட்ட மாவிற்கு மாற்றாக முழு கோதுமை மாவு , பிரவ்ன் பிரட், ஓட்ஸ் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

தண்ணீர்
அதிகமான அளவு தண்ணீர் பருகுங்கள். இதனால் உங்கள் உடலில் உள்ள நச்சுகள் வெளியாகிறது . சுத்தமான மற்றும் கொதிக்க வைத்த நீரைப் பருகுங்கள்.

உடற்பயிற்சி
ஒரு வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை அரை மணி நேரம் உடற் பயிற்சி செய்யுங்கள். அருகில் இருக்கும் இடங்களுக்கு முடிந்த வரை நடந்து செல்லுங்கள். உடற்பயிற்சி செய்வதால் உடல் மற்றும் மன நலம் அதிகரிக்கிறது.

கற்றல்
புதிதாக எதாவது ஒன்றை கற்றுக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு அதீத புத்துணர்ச்சியைக் கொடுக்கும். புதிய பொழுது போக்கு அல்லது உங்களுக்கு பிடித்த செயல்பாடுகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். இதனால் நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்.

யோகா மற்றும் தியானம்
உங்கள் மன மற்றும் உடல் நலத்தை பேணிக் காப்பதில் யோகா ஒரு சிறந்த வழியாகும். சில வகை யோகாசனங்கள் உங்களை மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும். தியானம் செய்வதால் உங்கள் மனம் அமைதி கொள்ளும்.

சுத்தமான பழக்க வழக்கம்
காபின், புகையிலை மது போன்றவற்றை தவிர்த்து விடுங்கள். மதுப் பழக்கம் மட்டுமே கெட்ட பழக்கம் என்பது கிடையாது. தவறான உணவுப் பழக்கம், புகைப்பிடித்தல் இப்படி எல்லா வகையான முறையற்ற, உடலைக் கெடுக்கும் பழக்கங்களுமே கெட்ட பழக்கங்கள் தான். அவற்றை முதலில் நிறுத்த வேண்டும்.

நேர்மறை எண்ணம்
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நேர்மறை எண்ணம் மிகவும் அவசியம். மற்றவர்களை பற்றி எப்போதும் நேர்மறையாக மட்டுமே எண்ணுவதற்கு கற்றுக் கொள்ளுங்கள். எதிர்மறை எண்ணெங்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு சேதம் உண்டாக்குகிறது. எதிர்மறை எண்ணம் உள்ளவர்களை விட நேர்மறை எண்ணம் உள்ளவர்கள் மிகவும் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

நல்ல தூக்கம்
நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு உணவு எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறிவோம். அதே அளவிற்கு முக்கியமானது நல்ல தூக்கம். ஆழ்ந்த தூக்கம் மனதையும் உடலையும் புதுப்பிக்கிறது.
மேலே கூறிய ஆரோக்கியமான வாழ்க்கை முறைக் குறிப்புகளை பின்பற்றுவதால் கடுமையான உடல் மற்றும் மன நலக் கோளாறுகளை தடுக்க முடியும்.



Click it and Unblock the Notifications