For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாகற்காய் சாப்பிடவே பயமா இருக்கா?... இப்படி சாப்பிடுங்க கசக்கவே கசக்காது...

try these tips for bittergourd wont be bitter anymore/ பாகற்காயின் கசப்புத்தன்மையை போக்குவது எப்படி

By manimegalai
|

பாகற்காய் என்ற பெயரைக் கேட்டாலே முகம் சுழிக்க ஆரம்பித்துவிடுவோம். ஆனால் பாகற்காயில் உள்ள வைட்டமின்கள் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நன்மைகள்

நன்மைகள்

நீரிழிவைப் போக்கும். தொடர் இருமல், சளி பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி உணவில் பாகற்காயை சேர்த்துக் கொள்ளலாம். வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும். கோடையில் உண்டாகும் உடல்சூட்டைத் தணிக்கும்.

கசப்புத்தன்மை

கசப்புத்தன்மை

பாகற்காயில் உள்ள கசப்புத்தன்மையை ஒருபோதும் வெளியே நீக்கிவிட முடியாது. ஆனால் இவ்வளவு ஆரோக்கியம் நிறைந்த பாகற்காயை சாப்பிடாமல் இருக்க முடியுமா?...

கசப்பை நீக்கமுடியாவிட்டால் என்ன?கசப்புத்தன்மையே தெரியாமல், முற்றிலும் கசப்பைக் குறைத்து நம்மால் பாகற்காயை சமைக்க முடியும். பாகற்காயின் கசப்பைக் குறைக்க பல வழிகள் உண்டு. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

டிப்ஸ் 1

டிப்ஸ் 1

பாகற்காயை மெல்லிய வட்டமாக நறுக்கிக் கொண்டு அதில் சிறிது உப்பு மற்றும் புளித்தண்ணீர் தெளித்து சிறிது நேரம் ஊறவைக்க வேண்டும். அதன்பின்அதில் சேர்க்கப்பட்ட உப்புநீர் தனியே பிரிந்திருக்கும். அதை மட்டும் வடித்துவிட்டு சமைத்தால் கசப்பு போய்விடும்.

டிப்ஸ் 2

டிப்ஸ் 2

மொறுமொறு பாகற்காய் வறுவல் சிலருக்குப் பிடிக்கும். மிக மெல்லிய வட்ட வடிவ துண்டுகளாக பாகற்காயை நறுக்கி, அதை நன்கு பிழிந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஜூஸை வெளியே எடுத்துவிடுங்கள். அதன்பின் மசாலா சேர்த்து வறுத்தால் இன்னும் கொஞ்சம்அதிகமாக சாப்பிடத் தோன்றும். சாறு பிழிந்தபின் கட்டாயம் மீண்டும் பாகற்காயை கழுவிவிட்டு தான் சமைக்க வேண்டும்.

டிப்ஸ் 3

டிப்ஸ் 3

மெலிதாக நறுக்கிய பாகற்காயை அரை மணிநேரம் புளி தண்ணீரில் ஊறவைத்து பின் சமைத்தால் புளிப்பு இருக்காது.

 டிப்ஸ் 4

டிப்ஸ் 4

பாகற்காயை சமைப்பதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பு, நன்கு கொதிக்கும் தண்ணீரில் சிறிது உப்புடன் சேர்த்து பாகற்காயையும் 2 முதல் 3 நிமிடங்கள் வரை வேகவையுங்கள். ஓரளவு வெந்தபின், வெந்நீரை வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரில் அலசிவிட்டு சமைக்க ஆரம்பிக்கலாம்.

டிப்ஸ் 5

டிப்ஸ் 5

மிக மெல்லிய துண்டுகளாக பாகற்காயை நறுக்கிக் கொண்ட பின், கொட்டைகளை நீக்கிவிட வேண்டும். அதன்பின் 2 ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து சிறிது பிரட்டிவிட்டு சிறிது நேரம் கழித்து சமைக்கலாம். தேவைப்பட்டால் ஆலிவ் ஆயிலுடன் சிறுசிறு துண்டுகளாக பூண்டு அல்லது வெங்காயத்தையும் நறுக்கிப் போடலாம். இது சமைக்கும்போது கசப்புத்தன்மையை நீக்குவதோடு சுவையையும் கூட்டும்.

டிப்ஸ் 6

டிப்ஸ் 6

பாகற்காயை சமைக்கும்போது சிறிது சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்துக் கொண்டால் புளிப்பு குறைவாகத் தெரியும்.

டிப்ஸ் 7

டிப்ஸ் 7

மெலிதாக நறுக்கிய பாகற்காயுடன் உருளைக்கிழங்கு, சீஸ் ஆகியவற்றைச் சேர்த்து சமைத்தால் கசப்பு இருக்காது.

டிப்ஸ் 8

டிப்ஸ் 8

அசைவம் சாப்பிடுபவர்கள் சிறிது வெங்காயம், நல்லெண்ணெய், உப்பு, மஞ்சளுடன் சிறிது நேரம் பாகற்காயை ஊறவிட்டு, பின் கறியுடன் சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.

டிப்ஸ் 9

டிப்ஸ் 9

வினிகரையும் சர்க்கரையையும் சமஅளவு கலந்து நன்கு கொதிக்க விட்டு, பின் அந்த கலவையை பாகற்காய் சமைக்கும்போது ஊற்றலாம்.

டிப்ஸ் 10

டிப்ஸ் 10

புளிக்காத மோரில் சிறிது உப்பு சேர்த்து அதில் பாகற்காயை ஊறவைத்து சிறிதுநேரம் கழித்து சமைத்தால் ஏறக்குறைய காயின் கசப்புத்தன்மை குறைந்துவிடும்.

டிப்ஸ் 11

டிப்ஸ் 11

மேற்கண்ட எல்லா குறிப்புகளிலுமே பாகற்காயின் கொட்டைகளை நீக்கிவிடுவது மிக முக்கியம்.

டிப்ஸ் 12

டிப்ஸ் 12

பாகற்காயின் தோலை நன்கு சீவி விட்டு, பின் உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரில் நன்கு ஊறவிட்டு, ஊறியபின் அலசி, நறுக்கி சமைக்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

tips for bittergourd wont be bitter anymore

he people who have never had bitter gourd, I still know what you all must be thinking. Doesn’t it taste bitter?? How can one eat it?Actually it is very much edible and likable. It just depends how it is prepared. So at times it depends on which ingredients you use and also on individual preferences. which things we should do for reduce the bitterness taste of bitter gourd.
Desktop Bottom Promotion