பலருக்கும் தெரியாத கற்பூரத்தின் வியக்க வைக்கும் சில நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

அனைத்து இந்துக்களின் வீடுகளிலும் கட்டாயம் இருக்கும் ஓர் பொருள் தான் கற்பூரம். இந்த கற்பூரம் நல்ல வாசனையையும் கொண்டது. இந்த வாசனையைப் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இந்த கற்பூரம் தான் இன்று பலரும் சளி பிடித்திருக்கும் போது பயன்படுத்தும் விக்ஸில் முக்கிய பொருளாக சேர்க்கப்படுகிறது. கற்பூரம் இந்த விக்ஸில் சேர்க்கப்படுவதற்கு அதன் நறுமணம் மட்டுமின்றி, மருத்துவ பண்புகளும் தான் காரணம்.

கற்பூரம் மெழுகு போன்றது, எரியக்கூடியது மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடியது. பழங்காலத்தில் நாட்டு மருத்துவத்தில் கற்பூரம் பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த கற்பூரம் சிறிய கட்டிகளாகவும், எண்ணெய் வடிவிலும் கடைகளில் கிடைக்கும்.

Surprising Benefits of Camphor You Probably Didn’t Know

கற்பூரத்தில் ஆன்டி-செப்டிக், மயக்கமூட்டும் பண்புகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டிராயீமிக், ஆன்டினெரஜிக், ஆன்டிஸ்பாஸ்மோடிக் போன்ற பண்புகள் அடங்கியுள்ளன. மேலும் கற்பூரம் இரத்தச் சேர்க்கை நீக்கும் மருந்து போன்று செயல்படுவதால், மருத்துவத்தில் முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

இந்த மருத்துவ பண்புகளாலேயே கற்பூரம் பல்வேறு ஆரோக்கிய பொருட்களில் முக்கியமான பொருளாக பயன்படுத்தப்பட்டும் வருகிறது. இப்போது இந்த கற்பூரத்தினால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சளியைப் போக்கும்

சளியைப் போக்கும்

கற்பூரம் சளியில் இருந்து நல்ல நிவாரணம் அளிக்கும். இது நெஞ்சு சளியை இளகச் செய்து, சளியை வெளியேற்ற உதவியாக இருக்கும். அதற்கு 4-5 துளிகள் கற்பூர எண்ணெயுடன் 1 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, நெஞ்சுப் பகுதியில் நன்கு சில நிமிடங்கள் தேய்க்க வேண்டும். நாள்பட்ட இருமலை சரிசெய்வதற்கு, ஆவி பிடிப்பதன் மூலம் நிவாரணம் கிடைக்கும். அதுவும் நல்ல சூடான நீரில் சில துளிகள் கற்பூர எண்ணெய் சேர்த்து கலந்து, அந்நீரால் ஆவி பிடியுங்கள். இதனால் நெஞ்சு வலி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

பருக்களைப் போக்கும்

பருக்களைப் போக்கும்

கற்பூரம் பருக்களைப் போக்க உதவும். குறிப்பாக இது சருமத்தில் உள்ள பருக்களைப் போக்குவதோடு, கருமையான தழும்புகள் ஏற்படாமலும் தடுக்கும். அதற்கு 1 கப் சுத்தமாக தேங்காய் எண்ணெயை காற்றுப் புகாத ஒரு ஜாரில் ஊற்றி, அதில் 1 டீஸ்பூன் கற்பூர எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் இரவில் படுக்கும் முன் முகத்தை கிளின்சரால் கழுவிய பின், முகத்தைத் துடைத்து, இந்த எண்ணெய் கலவையை முகத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பின்பு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் முகத்தை கிளின்சர் பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

மூக்கு அடைப்பு

மூக்கு அடைப்பு

கற்பூரம் மூக்கு அடைப்பில் இருந்து உடனடி நிவாரணம் அளித்து, தடையின்றி சௌகரியமாக சுவாசிக்க உதவியாக இருக்கும். அதற்கு சிறிது கற்பூர எண்ணெயை 1 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான கடுகு எண்ணெயுடன் சேர்த்து கலந்து, நெஞ்சுப் பகுதி, முதுகுப் பகுதி மற்றும் தொண்டையில் இரவு படுக்கும் முன் தடவிக் கொண்டால், இரவில் சுவாச பிரச்சனையின்றி, நிம்மதியாக தூங்கலாம்.

உதட்டுப் புண்

உதட்டுப் புண்

உதடுகளில் புண் வந்தால், அது கடுமையான வலி மற்றும் எரிச்சலை உண்டாக்கும். இந்த பிரச்சனையில் இருந்து கற்பூரம் உடனடி நிவாரணம் அளிக்கும். அதற்கு 2-3 துளிகள் கற்பூர எண்ணெயை 1 டேபிள் ஸ்பூன் சுத்தமான தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி உதடு புண்களின் மீது தடவுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 3-4 முறை செய்து வர ஒரு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

பேன் தொல்லை நீங்கும்

பேன் தொல்லை நீங்கும்

கற்பூரத்தை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, தலைக்கு பயன்படுத்தினால், பேன் தொல்லையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். அதுவும் தேங்காய் எண்ணெய் பேன்களை நகர விடாமல் தடுக்கும், கற்பூரமோ பேன்களை அழித்துவிடும். ஒரு டேபிள் ஸ்பூன் கற்பூரத்தை பொடி செய்து, 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, தலையில் ஸ்கால்ப்பில் படும்படி தடவி, ஷவர் கேப் அணிந்து, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் ஷாம்பு பயன்படுத்தி, தலையை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை என ஒரு மாதம் தொடர்ந்து பின்பற்றினால், பேன் தொல்லையில் இருந்து ஒரே மாதத்தில் விடுபடலாம்.

தசை வலிகள் குணமாகும்

தசை வலிகள் குணமாகும்

சில வகையான தசை வலிகளுக்கு கற்பூரம் சிகிச்சை அளிக்கும். இதற்கு கற்பூரத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் தான் காரணம். அதற்கு கற்பூரத்தை அத்தியாவசிய எண்ணெய்களுடன் சேர்த்து கலந்து வலியுள்ள இடத்தில் மசாஜ் செய்தால், இரத்த ஓட்டம் மேம்பட்டு, தசைகளில் ஏற்பட்ட பிடிப்புகள் நீங்கி, விரைவில் குணமாகலாம். 5-6 துளிகள் கற்பூர எண்ணெயுடன் 1-2 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, அந்த எண்ணெயை வலியுள்ள பகுதியில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் 1-2 முறை செய்ய வேண்டும்.

ஒருவேளை வலி மிகவும் கடுமையாக இருந்தால், சற்றும் தாமதிக்காமல், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

குதிகால் வெடிப்பு நீங்கும்

குதிகால் வெடிப்பு நீங்கும்

உங்களுக்கு அசிங்கமாக குதிகால் வெடிப்பு உள்ளதா? அதிலிருந்து கற்பூரம் உடனடி நிவாரணம் அளிக்கும். அதுவும் இது வெடிப்புக்களால் ஏற்படும் வலியைக் குறைத்து, வெடிப்புக்களை விரைவில் சரிசெய்யும். அதற்கு வெதுவெதுப்பான நீரில் கற்பூரத்தைப் போட்டு 10 நிமிடம் அந்நீரில் பாதங்களை ஊற வைத்து, பின் மெருகேற்றும் கல்லைக் கொண்டு குதிகாலைத் தேய்க்க வேண்டும். அதன்பின் சுத்தமான நீரால் கால்களைக் கழுவ வேண்டும். இறுதியில் குதிகால்களில் கற்பூர எண்ணெயைத் தடவி, இரவு முழுவதும் கால்களில் சாக்ஸ் அணிந்து உறங்கவும். இப்படி தினமும் செய்து வந்தால், குதிகால் வெடிப்பு காணாமல் போகும்.

கால்களில் உள்ள ஆணியைப் போக்கும்

கால்களில் உள்ள ஆணியைப் போக்கும்

கால்களில் ஆணி இருந்தால், நடக்கவோ, நிற்கவோ முடியாது. மிகுந்த அசௌகரியத்தை சந்திக்க நேரிடும். இந்த அசௌகரியத்தைக் குறைக்க, கற்பூர எண்ணெய் உதவும். அதற்கு 1/4 கப் தேங்காய் எண்ணெயை சூடேற்றி, அதில் 1 டேபிள் ஸ்பூன் டர்பென்டைன் எண்ணெய் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் கற்பூர எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து, குளிர வைக்க வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரில் கால்களை 5 நிமிடம் ஊற வைத்து, உலர்த்த வேண்டும். பின் தயாரித்து வைத்துள்ள கலவையை கால்களில் ஆணி உள்ள இடத்தில் தடவ வேண்டும். இப்படி தினமும் 2-3 முறை செய்ய விரைவில் ஆணி போய்விடும்.

பூச்சிகள் மற்றும் கொசுக்களை அழிக்கும்

பூச்சிகள் மற்றும் கொசுக்களை அழிக்கும்

கற்பூர எண்ணெய் ஒரு நேச்சுரல் பூச்சிக்கொல்லியாக செயல்படும். அதற்கு 1/2 கப் சுடுநீரை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, அத்துடன் 20 துளிகள் கற்பூர எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் பூச்சி அல்லது கொசுக்கள் வரும் பகுதிகளில் தெளித்துவிடுங்கள். இதனால் பூச்சிகள் அகலும். இல்லாவிட்டால், ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் 4-5 கற்பூரத்தைப் போட்டு அறையில் வையுங்கள். இதனால் கொசுக்கள் வராது.

கணுக்கால் வலி

கணுக்கால் வலி

கணுக்கால் வலி தாங்க முடியவில்லையா? அப்படியானால் வீட்டில் கற்பூரம் இருந்தால், அதைக் கொண்டு வலியைப் போக்குங்கள். அதற்கு ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதில் சில துளிகள் கற்பூர எண்ணெய் அல்லது கற்பூரத்தைப் போட்டு நன்கு கரைந்த பின், கணுக்கால்களில் தடவி 5-10 நிமிடம் மசாஜ் செய்யுங்கள். இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் தடவுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Surprising Benefits of Camphor You Probably Didn’t Know

Camphor has antiseptic, anesthetic, anti-inflammatory, stimulant, antirheumatic, antineuralgic, antispasmodic and sedative properties. Due to its medicinal properties, camphor is used as one of the main ingredients in many health care products. Here are some benefits of camphor.