சூடா டீ/காபி குடிச்சு, நாக்கு புண்ணாயிடுச்சா? அதை சரிசெய்ய இதோ சில வழிகள்!

Posted By:
Subscribe to Boldsky

பெரும்பாலானோருக்கு காபி, டீ அல்லது உணவை சூடாக சாப்பிடும் பழக்கம் இருக்கும். பொதுவாக நம் நாக்கினால் குறிப்பிட்ட அளவு வெப்பநிலையைத் தான் தாங்கும் சக்தி உள்ளது. மிகவும் சூடாக எதையேனும் சாப்பிட்டால், நாக்கு வெந்து போய்விடும். இப்படி ஒருமுறை நாக்கு வெந்து போனால், பின் எந்த ஒரு உணவையும் சரியாக சாப்பிட முடியாமல், நாக்கு ஒருவித எரிச்சலுடனேயே இருக்கும்.

Remedies to Heal a Burnt Tongue

மேலும் ஒருவரது நாக்கு வெந்து போய்விட்டால், சுவைமொட்டுக்கள் பாதிக்கப்பட்டு, உணவின் சுவை தெரியாமல் போகும். ஒருவர் அளவுக்கு அதிகமான சூட்டில் இருக்கும் உணவுப் பொருளை உட்கொண்டால், அதனால் நாக்கில் வலி, நாக்கு சிவந்து போதல், வீக்கம் மற்றும் சில சமயங்களில் நாக்கில் வெடிப்புக்கள் கூட ஏற்படும் வாய்ப்புள்ளது. அதுவே லேசாக நாக்கு வெந்து போயிருநதால், அதனால் மிகுந்த அசௌகரியத்திற்கு உள்ளாகக்கூடி, எதையுமே நிம்மதியாக ருசித்து சாப்பிட முடியாமல் போகும்.

இக்கட்டுரையில் மிகவும் சூடான உணவுப் பொருளால் வெந்து போன நாக்கை விரைவில் சரிசெய்ய உதவும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி, உங்கள் நாக்கில் உள்ள புண்ணை சரிசெய்யுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாயின் வழியே சுவாசியுங்கள்

வாயின் வழியே சுவாசியுங்கள்

சூடான உணவை உட்கொண்டு நாக்கு வெந்து போய் விட்டால், வாயின் வழியே சுவாசியுங்கள். இப்படி வாயின் வழி சுவாசிக்கும் போது, வாயில் குளிர்ச்சியான காற்று செல்லும் போது, அது வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

குளிர்ச்சியானதை சாப்பிடுங்கள்

குளிர்ச்சியானதை சாப்பிடுங்கள்

நாக்கு வெந்து இருந்தால், குளிர்ச்சியான பானங்கள் அல்லது உணவுப் பொருளை உட்கொள்ளுங்கள். இது நாக்கில் ஏற்படும் எரிச்சலைக் குறைக்க உதவும். அதற்கு ஐஸ் கட்டிகளை வாயில் போட்டுக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் ஐஸ் க்ரீம் அல்லது குளிர்ச்சியான ஜூஸ் குடியுங்கள். இன்னும் எளிய வழி என்றால் குளிர்ச்சியான நீரைக் குடியுங்கள்.

வெதுவெதுப்பான உப்பு நீர்

வெதுவெதுப்பான உப்பு நீர்

இன்னும் எளிய வழியில் நாக்கில் உள்ள காயத்தை சரிசெய்ய வேண்டுமானால், வெதுவெதுப்பான உப்பு நீரை வாயில் ஊற்றி 30 நொடிகள் கொப்பளித்து, பின் துப்புங்கள். இப்படி ஒரு நாளைக்கு பல முறை செய்து வந்தால், நாக்கில் உள்ள புண் குணமாகிவிடும்.

தேன்

தேன்

உங்கள் நாக்கு சூடான உணவுகளை உட்கொண்டு வெந்து போயிருந்தால், தேனைக் கொண்டு விரைவில் தீர்வு காணலாம். இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புள், பாதிக்கப்பட்ட நாக்கில் உள்ள பாக்டீரியாக்களைத் தடுக்க உதவும். இதில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், வீக்கத்தையும், வலியையும் குறைக்கும். அதற்கு தேனை நாக்கில் தடவி சிறிது நேரம் உட்காருங்கள். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை செய்யுங்கள்.

கற்றாழை

கற்றாழை

கற்றாழை வெந்து போன நாக்கை விரைவில் சரிசெய்ய உதவும். இது நாக்கில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் சரிசெய்வதோடு, வலி மற்றும் அழற்சியைக் குறைக்க உதவும். அதற்கு கற்றாழை ஜெல்லை வெந்து போன நாக்கில் ஒரு நாளைக்கு பலமுறைத் தடவுங்கள். இல்லாவிட்டால் கற்றாழை ஜெல்லை ஐஸ் ட்ரேயில் ஊற்றி உறைய வைத்து, பின் அதை வாயில் போட்டுக் கொள்ளுங்கள்.

தயிர்

தயிர்

தயிர் கூட வெந்து போன நாக்கு பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் அளித்து, அசௌரியத்தைக் குறைக்கும். அதற்கு 1/2 கப் தயிரை குளிர வைத்து, அதனை மெதுவாக சில நொடிகள் வாயில் வைத்தவாறு சாப்பிடுங்கள். இப்படி ஒரு கப் தயிரை சாப்பிடுங்கள். இதனால் நாக்கில் உள்ள புண் விரைவில் குணமாகும்.

சர்க்கரை

சர்க்கரை

சர்க்கரை மற்றொரு அற்புதமான நிவாரணப் பொருள். சர்க்கரை இனிப்பான பொருளாக இருந்தாலும், நாக்கில் சூடான உணவுப் பொருளால் ஏற்பட்ட காயங்களை சரிசெய்யும். அதற்கு 1 டீஸ்பூன் சர்க்கரையை நாக்கில் உருகும் வரை வைத்திருக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு பல முறை செய்ய நாக்கு புண் சரியாகும்.

புதினா

புதினா

புதினாவும் எரிச்சல் கொண்ட மற்றும் வெந்துப் போன நாக்கு பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கும். புதினாவில் உள்ள மென்தால், நரம்புகளை குளிரச் செய்து, அவ்விடத்தை மரத்துப் போகச் செய்து, காயத்தைக் குறைக்கும். அதற்கு புதினாவை அரைத்து நாக்கில் தடவி சில நிமிடங்கள் உலர வைத்து, பின் குளிர்ந்த நீரால் வாயைக் கழுவுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை செய்யுங்கள்.

வெஜிடேபிள் கிளிசரின்

வெஜிடேபிள் கிளிசரின்

வெஜிடேபிள் கிளிசரின் வெந்து போன நாக்கில் இருந்து நிவாரணம் அளிக்கும். இந்த வகை கிளிசரின் பாதிக்கப்பட்ட திசுக்களை சரிசெய்ய உதவி, விரைவில் நாக்குப் புண்ணை குணமாக்கும். அதற்கு வெஜிடேபிள் கிளிசரினை நாக்கில் தடவி, சிறிது நேரம் அப்படியே உட்காருங்கள். பின் குளிர்ந்த நீரால் வாயைக் கழுவுங்கள். இப்படி ஒரு நாளைக்கு பலமுறை செய்யுங்கள். இல்லாவிட்டால் கிளிசரின் வகை மௌத் வாஷைக் கொண்டு ஒரு நாளைக்கு பலமுறை வாயைக் கொப்பளியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Remedies to Heal a Burnt Tongue

Here are some ways to heal a burnt tongue. Read on to know more...
Story first published: Saturday, April 7, 2018, 16:06 [IST]