For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆணுறுப்பில் ஏற்படும் ஈஸ்ட் தொற்றுநோய்க்கான வீட்டு மருத்துவம்

ஈஸ்ட் தொற்று ஆண்களுக்கும் ஏற்படக்கூடும். ஈஸ்ட் தொற்றை குணப்படுத்தும் வீட்டு மருத்துவங்கள் என்னவென்பதை பார்க்கலாம்.

|

ஈஸ்ட் தொற்று என்பது பொதுவாக பெண்களுக்கு மட்டும்தான் ஏற்படும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் உண்மையில் ஈஸ்ட் தொற்று ஆண்களுக்கும் ஏற்படக்கூடும். இது பலன்டிஸிஸ் எனப்படும். ஆண்குறியின் தலைப்பகுதியில் ஏற்படும் வீக்கமே பலன்டிஸிஸ் ஆகும். பெண்களிடையே ஈஸ்ட் தொற்றானது வேறுவிதமான விளைவுகளை ஏற்படுத்தும்.

home remedies for penile yeast infections

இது பொதுவாக ஈஸ்ட் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் பாதுகாப்பின்றி உடலுறவு கொள்ளும்போது ஆண்களுக்கும் இந்த நோய் ஏற்படும் வாய்ப்புள்ளது. இதனை சரியான நேரத்தில் குணப்படுத்தாவிட்டால் இது இரத்த ஓட்டத்திலும் பரவக்கூடும். இந்த பதிவில் ஆணுறுப்பில் ஏற்படும் ஈஸ்ட் தொற்றை குணப்படுத்தும் வீட்டு மருத்துவங்கள் என்னவென்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேயிலை மர எண்ணெய்

தேயிலை மர எண்ணெய்

தேயிலை மர எண்ணெயில் ஆன்டிவைரல், ஆன்டி பாக்ட்ரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளது. ஆய்வுகளின் படி இந்த எண்ணெயில் ஈஸ்ட் மற்றும் பூஞ்சைகளை அழிக்கக்கூடிய பல சத்துக்கள் உள்ளது. ஈஸ்ட் நோயின் முக்கிய வகையான கேண்டிடா என்னும் தொற்றை இது எளிதில் குணப்படுத்தும். இதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பண்பு ஈஸ்ட் நோயை எளிதில் விரட்டக்கூடியது.

உபயோகிக்கும் முறை

உபயோகிக்கும் முறை

3 அல்லது 5 துளிகள் தேயிலை மர எண்ணெயை எடுத்துக்கொண்டு அதில் சில துளிகள் ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை கலந்து கொள்ளவும். ஒரு சிறிய பஞ்சை எடுத்து இந்த கலவையில் நனைத்து ஆணுறுப்பின் தலைப்பகுதியில் மென்மையாக மசாஜ் செய்யவும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆணுறுப்பில் ஏற்படும் ஈஸ்ட் தொற்றை குணப்படுத்தும் மற்றொரு சிறந்த வீட்டு மருத்துவ பொருள் ஆப்பிள் சீடர் வினிகர் ஆகும். இதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் கேண்டிடா ஈஸ்ட்டை எளிதில் குணப்படுத்தக்கூடியது. சில ஆய்வுகளின் படி ஆப்பிள் சீடர் வினிகர் உடலில் அதிகமாக உள்ள ஈஸ்ட்டை வெளியேற்றுகிறதாக கூறப்படுகிறது.

MOST READ: இந்த ராசிக்காரர்களிடம் எச்சரிக்கையாய் இருங்கள்.. கூட இருந்தே குழிபறிக்க கூடியவர்கள் இவர்கள்

உபயோகிக்கும் முறை

உபயோகிக்கும் முறை

இதனை உபயோகிப்பது மிகவும் எளிமையானது. ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து அதனை ஆணுறுப்பின் தலைப்பகுதியில் தடவவும்.

தயிர்

தயிர்

செயற்கையூட்டப்படாத தயிரில் ப்ரோபயாட்டிக்ஸ் என்னும் பாக்டீரியா உள்ளது. இது உடலுக்கு நன்மை வழங்கக்கூடிய பாக்டீரியா ஆகும் இது உடலில் ஈஸ்ட்டின் அளவை சமநிலையில் வைக்க உதவுகிறது. மேலும் சில ஆய்வுகளின் படி தயிர் தொற்றுகளை ஏற்படுத்தும் சில ஈஸ்ட் கிருமிகளை அழிக்கவும் வல்லது.

உபயோகிக்கும் முறை

உபயோகிக்கும் முறை

உங்கள் உணவில் தொடர்ச்சியாக தயிரை சேர்க்கும் போது அது கேண்டிடா ஈஸ்ட் தொற்றை குணப்படுத்தக்கூடும். அல்லது நேரடியாக ஆணுறுப்பின் மீதும் தடவலாம். இதில் லாக்டோபாகிலஸ் என்னும் பாக்டீரியா உள்ளது.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

2007 ல் நடத்திய ஆய்வில் தேங்காய் எண்ணெயில் கேண்டிடா ஈஸ்ட் தொற்றுநோயை குணப்படுத்தக்கூடியது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மற்ற பொருட்களை காட்டிலும் ஈஸ்ட் தொற்றை குணப்படுத்த தேவைப்படும் அளவை காட்டிலும் தேங்காய் எண்ணெய் தேவைப்படும் அளவு குறைவுதான். அதற்கு காரணம் அதிலுள்ள வலிமையான பூஞ்சை எதிர்ப்பு ஆகும்.

MOST READ: நம் சமூகத்தத்தில் நடக்கும் அவலங்களை துகிலுரித்து காட்டும் புகைப்படங்கள் - # 2 மினிட்ஸ் ப்ளீஸ்

உபயோகிக்கும் முறை

உபயோகிக்கும் முறை

இயற்கையாக தயாரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் இதன் அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்த பயன்படுகிறது. தேங்காய் எண்ணெயை சிறிது சூடாக்கி அதனுடன் வலிமையான பூஞ்சை எதிர்ப்பு பண்பு கொண்ட ஆலிவ் எண்ணெயை கலந்தும் பயன்படுத்தலாம்.

பூண்டு

பூண்டு

பூண்டில் இயற்கையாகவே பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு குணம் உள்ளது. இது ஈஸ்ட் தொற்றை எளிதில் குணப்படுத்தக்கூடியது. தைம், பூண்டு மற்றும் கழற்றிமொஸல் கலந்த க்ரீமானது ஈஸ்ட் தொற்றுக்கு எதிராக சிறப்பாக செயல்படக்கூடியது. தைம் மற்றும் பூண்டு இரண்டுமே சமமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. மேலும் பக்க விளைவுகள் ஏற்படுவதை குறைக்கிறது.

உபயோகிக்கும் முறை

உபயோகிக்கும் முறை

முதலில் உலர்ந்த ஒரு பஞ்சை பயன்படுத்தி உங்கள் பிறப்புறுப்பை சுத்தம் செய்யுங்கள். அதன் பின் சில பூண்டுகளை எடுத்து அரைத்து அதனை பிறப்புறுப்பின் தலைப்பகுதியில் தடவி இரவு முழுவதும் அப்படியே இருக்க விடுங்கள். காலை எழுந்ததும் கழுவி விடுங்கள்.

MOST READ: முருங்கைக்காய் சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சினைகள் ஏற்படுகிறது தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

home remedies for penile yeast infections

Yeast infections are more common in women, but even men do get a yeast infection which is characterised by the inflammation on the head of the penis known as balanitis.
Desktop Bottom Promotion