Latest Updates
-
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் எடை அதிகரிப்பை குறைப்பது எப்படி?
பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளில் முதன்மையானது மாதவிடாய் என்றால் அதன் பின் ஏற்படும் தொடர் பிரச்சினைகள் பல உள்ளது. அதில் முக்கியமானது மாதவிடாய்க்கு பின் ஏற்படும் எடை அதிகரிப்பு. இந்த பதிவில் மாதவிடாய
பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளில் முதன்மையானது மாதவிடாய் என்றால் அதன் பின் ஏற்படும் தொடர் பிரச்சினைகள் பல உள்ளது. அதில் முக்கியமானது மாதவிடாய்க்கு பின் ஏற்படும் எடை அதிகரிப்பு. கிட்டத்தட்ட அனைத்து பெண்களுமே இந்த பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். இதற்கு என்னதான் தீர்வு?
இந்த எடை அதிகரிப்பு இதனுடன் நின்றுவிடாது. இதயநோய், உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என பல பிரச்சினைகள் ஏற்பட ஆரம்ப புள்ளியாய் இருப்பதே இந்த எடை அதிகரிப்புதான்.

இதனை உடனடியாக கட்டுப்பாட்டிற்குள் வைப்பதே பெண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. இந்த பதிவில் மாதவிடாய்க்கு பிறகு ஏன் எடை அதிகரிக்கிறது என்பதையும், அதனை குறைக்கும் வழிமுறைகளையும் பார்க்கலாம்.

ஈஸ்ட்ரோஜன் குறைவு
மாதவிடாய்க்கு பின் எடை அதிகரிக்க பல காரணங்கள் உள்ளது. அதில் முக்கியமான ஒன்று ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியில் ஏற்படும் பாதிப்பாகும். ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி குறைவாக இருக்கும் போது உடலியல் செயல்பாடுகள் மிகக்குறைவாய் இருக்கும். இதனால் பெண்களின் வளர்ச்சிதை மாற்றம் குறையும். இதுபோன்ற சமயங்களில் ஹார்மோன் தெரபி பெண்களுடைய வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்க உதவும். இதனால் எடை அதிகரிப்பின் வேகம் குறைக்கப்படும்.

உணவு
வளர்ச்சிதை மாற்றம் பாதிக்கப்படுவதால் சாப்பிடுவதில் அதிக கவனம் இருக்காது. அதேபோல உடற்பயிற்சிகள் செய்யவும் இயலாது. மீண்டும் நீங்கள் கொழுப்பை கரைக்க வழியை கண்டறிந்து அதனை தொடங்குவதற்குள் உங்கள் உடலில் உள்ள கொழுப்பின் அளவு இருமடங்காக அதிகரித்திருக்கும். உணவு இதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

மனஅழுத்தம்
மாதவிடாய் காலங்களில் பெண்களின் மனஅழுத்தம் மிக அதிகமாக இருக்கும். இதன் விளைவாக கார்டிசோல் என்னும் ஹார்மோனின் சுரப்பு அதிகரிக்கிறது. இதுதான் நம் உடலில் கொழுப்பை தக்க வைக்கும் ஹார்மோன் ஆகும். அதிகளவு கார்டிசோல் பெண்களின் இடுப்பை சுற்றியுள்ளபகுதிகளில் எடை அதிகரிப்பை ஊக்குவிக்கிறது.

எடை அதிகரிப்பை தடுக்க உடற்பயிற்சி
நீங்கள் ஒரே இடத்தில் முடங்காமல் எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறீர்களோ அவ்வளவு குறைவான எடையை பெறுவீர்கள். தேசிய உடல்ஆரோக்கிய நிறுவனத்தின் தகவலின் படி தினமும் குறைந்தது 10 நிமிடம் உடற்பயிற்சி செய்யும் பெண்களுக்கு மாதவிடாய்க்கு பின் ஏற்படும் எடை அதிகரிப்பு குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடற்பயிற்சியின் பலன்கள்
உடற்பயிற்சிகள் இந்த எடை அதிகரிப்பில் இருந்து பாதுகாப்பதுடன் ஆஸ்டாபோரோசிஸ் ஏற்படுவதை குறைப்பது, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை குறைப்பது, இன்சுலின் சுரப்பை சீராக்குவது, தசைகளை வலுப்படுத்துவது, மனஅழுத்தத்தை குறைப்பது என பல நன்மைகளை வழங்குகிறது.

சர்க்கரை அளவை சீராக்குதல்
நீங்கள் சாப்பிடும் இனிப்புகள், குடிக்கும் கூல்ட்ரிங்க்ஸ், உண்ணும் கார்போஹைட்ரேட் உணவுகள் அனைத்தும் உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் வேலையை செய்கிறது. இதனால் இன்சுலின் அளவில் மாற்றம் ஏற்பட்டு அது கொழுப்பாக மாறிவிடும். சிக்கலான அல்லது வரையறுக்கப்படாத கார்போஹைட்ரேட்டுகள் மெதுவாக கரைக்கப்படுகிறது. எனவே குறைவான கார்போஹைடிரேட் உள்ள உணவுகளை மாதவிடாய் காலத்தில் எடுத்துக்கொள்வது எடை அதிகரிப்பை குறைக்கும்.

பொருத்தமான எடை
உங்கள் உடல் நிறை குறியீட்டை (பிஎம்ஐ) சரியாக கணக்கிட வேண்டும். இதனை உங்கள் மருத்துவரின் துணையுடன் செய்யுங்கள். இதன்மூலம் உங்கள் உயரத்திற்கு ஏற்ற எடை உள்ளதா, இல்லையா என்பதை கணக்கிட்டு அதற்கு ஏற்றவாறு உங்கள் எடையை பராமரிப்பது அவசியம்.

அளவாக சாப்பிடுங்கள்
மாதவிடாய் காலத்திலும், அதற்கு பிறகான நாட்களிலும் எக்காரணத்தை கொண்டும் உணவை தவிர்க்காதீர்கள். அதேநேரம் சத்தான உணவுகளை சரியான அளவில் சாப்பிடுங்கள். சத்தான உணவு என்று அதிகமாக சாப்பிடுவது கூட ஆரோக்கிய கேட்டை உருவாக்கும். அதுமட்டுமின்றி இது தேவையில்லாத எடை அதிகரிப்பையும் ஏற்படுத்தும்.



Click it and Unblock the Notifications