For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அக்னி நட்சத்திர நாட்களில் கட்டாயம் தவிர்க்க வேண்டியவைகள்!!!

இங்கு உடல் வறட்சி இருப்பவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டியவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

|

கோடைக்காலத்தில் வெயில் கொளுத்துவதால், உடலில் நீர்ச்சத்தின் அளவு குறைவாகவே இருக்கும். அதிலும் அக்னி நட்சத்திர நாட்களில், வெயில் நம்மை சுட்டெரித்துவிடும். இந்நாட்களில் மிகவும் கவனமாகவே இருக்க வேண்டும்.

Things You Should Not Do When Suffering From Dehydration

பொதுவாக உடலில் நீரின் அளவு குறைவாக இருந்தால், அது நம் அன்றாட செயல்பாடுகளைப் பாதிக்கும். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டதும், பலரும் குடிக்கும் நீரின் அளவை அதிகரித்தால் போதும் என நினைப்போம்.

ஆனால் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், ஒருசிலவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும். குறிப்பாக அக்னி நட்சத்திர நாட்களில் இவற்றைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. இல்லாவிட்டால், அதுவே நிலைமையை மோசமாக்கும். இப்போது உடல் வறட்சி இருப்பவர்கள் எதையெல்லாம் தவிர்க்க வேண்டுமென காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரமான உணவுகள்

காரமான உணவுகள்

காரசாரமான உணவுகளை உண்ணும் போது உடலின் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும். இதனால் உடலின் நீர்ச்சத்து குறைந்து வறட்சி ஏற்படும். எனவே, நமது உடலில் வறட்சி ஏற்பட்டிருக்கும் சமயங்களில் காரமான உணவுகளைத் தவிர்த்து, நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

ஏசி அறைகள்

ஏசி அறைகள்

உடல் வறட்சி ஏற்பட்டிருக்கும் நேரங்களில் ஏசி அறைகளில் நீண்ட நேரம் இருந்தால், நம் உடலில் இருக்கும் நீர்ச்சத்து மேலும் குறைய வாய்ப்புகள் அதிகம். எனவே, அந்த மாதிரியான நேரங்களில் அதிக அளவில் தண்ணீரைக் குடியுங்கள். இதனால் வறட்சி மேலும் அதிகரிக்காமல் தடுக்கலாம்.

காபி, டீ அதிகம் கூடாது

காபி, டீ அதிகம் கூடாது

நீங்கள் அடிக்கடி காபி, டீ குடிப்பவராக இருந்தால் அதை தவிர்த்தே ஆக வேண்டும். ஏனென்றால், உங்கள் உடலில் உள்ள நீர்ச்சத்து மேலும் குறைந்து உடலின் வறட்சி அதிகரித்துவிடும். எனவே, காபி அல்லது டீ குடிப்பதற்கு பதிலாக மோர் மற்றும் பழச்சாறுகள் குடித்து உடல் வறட்சியைக் குறைத்துக் கொள்ளலாம்.

அதிகமாக உடற்பயிற்சி கூடாது

அதிகமாக உடற்பயிற்சி கூடாது

உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நல்லது தான். ஆனால், உடலில் வறட்சி ஏற்பட்டிருக்கும் சமயங்களில் அதிகமாக உடற்பயிற்சி செய்தால், உடலின் நீர்ச்சத்துக் குறைந்து உடல் வறட்சியை மேலும் அதிகரித்துவிடும். எனவே, உடற்பயிற்சி செய்வதற்கு பதிலாக யோகாசனம் செய்வது மனதிற்கும், உடலுக்கும் மிக நல்லது.

மது கூடாது

மது கூடாது

ஆல்கஹால் குடித்தால் அதிகமாக சிறுநீர் கழிக்க நேரிடுவதோடு, உடலில் நீரின் அளவும் குறைந்து உடல் வறட்சி அதிகரிக்கும். எனவே, ஆல்கஹால் குடிப்பதைக் குறைத்துவிட்டு தண்ணீர் அதிகமாக குடித்தால் உடல் வறட்சியைத் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things You Should Not Do When Suffering From Dehydration

Here are some things you should not do when suffering from dehydration. Read on to know more...
Story first published: Thursday, May 4, 2017, 14:13 [IST]
Desktop Bottom Promotion