ஆபத்தான மருந்துகள் வேண்டாம்! இயற்கையாக கிடைக்கும் இந்த ஆன்டி பயோடிக்குகள் போதும்!

Written By:
Subscribe to Boldsky

ஆன்டி பயோடிக் மாத்திரைகளை மிக மிக அவசியம் என்றால் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அடிக்கடி ஆன்டிபயோடிக் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது ஆபத்தை ஏற்படுத்தும். நமது உடலில் உள்ள நோய்களை எதிர்த்து, உடலுக்கு வலிமை தரக்கூடிய ஆன்டிபயோடிக் தன்மை இயற்கை பொருட்களிலேயே உள்ளது. இந்த பகுதியில் ஆன்டி பயோடிக் தன்மை உடைய சில உணவு பொருட்களை பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேன் :

தேன் :

தேன் மிக பழங்காலத்தில் இருந்தே ஆன்டி பயோடிக் ஆக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எகிப்து மக்கள் மிகப்பழங்காலமாகவே தேனை ஆன்டிபயோடிக்காக பயன்படுத்தி வருகின்றனர். தேனில் உள்ள ஹைட்ரோஜென் பெராக்ஸைடு ஆனது, ஆன்டி பாக்டிரியல் தன்மையை கொண்டுள்ளது. இதில் சர்க்கரையும் உள்ளது. இது பாக்டிரியாக்களின் வளர்ச்சியை தூண்டுகிறது.

புண்களை ஆற்ற உதவுகிறது :

புண்களை ஆற்ற உதவுகிறது :

கூடுதலாக தேனில் குறைந்த பி.எச் அளவு மட்டுமே உள்ளது. எனவே இது பாக்டீரியாக்களில் இருந்து பாதுகாப்பை தருகிறது. தேனை நேரடியாக புண்களின் மீதும் கூட தடவலாம். இது புண்களில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்து போராடி, புண்களை ஆற்ற உதவுகிறது. உடலின் உள் உள்ள புண்களை ஆற்ற, ஒரு டீஸ்பூன் தேனை நேரடியாக தினமும் பருகி வரலாம்.

பூண்டு :

பூண்டு :

பூண்டில் ஆன்டி மைக்ரோபையல் தன்மை உள்ளது. 2011-ல் நடத்தப்பட்ட ஆய்வானது, பூண்டில் பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை அதிகமாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. பூண்டினை குறிப்பிட்ட அளவு மட்டும் எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது. தினமும் இரண்டு பல் அளவு பூண்டினை எடுத்துக்கொள்ளலாம்.

குறிப்பு

குறிப்பு

நீங்கள் பூண்டின் எக்ஸ்ட்ராக்ட் உள்ள மாத்திரைகளை சாப்பிட்டு வந்தால், மருத்துவரின் ஆலோசனைப்படி குறிப்பிட்ட அளவு டோஸ் எடுத்துக்கொள்ளலாம்.

தைம் அத்தியாவசிய எண்ணெய்

தைம் அத்தியாவசிய எண்ணெய்

தைம் எண்ணெய்யானது வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் தன்மையை அதிகளவில் பெற்றுள்ளது. 2011 ஆம் ஆண்டு நடந்த ஆராய்ச்சி ஒன்றில் லெவண்டர் மற்றும் தைம் ஆகிய இரு எண்ணெய்களுமே மிகச்சிறந்த பாக்டிரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு எண்ணெய்கள் என நிரூபிக்கப்பட்டுள்ளன.

மேலும், மற்றுமொரு ஆய்வில் லெவண்டர் எண்ணெய்யை விட பாக்டீரியா மற்றும் வைரஸை எதிர்த்து போராடும் தன்மை தைம் எண்ணெய்க்கு உள்ளது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

natural antibiotics

natural antibiotics
Story first published: Tuesday, September 12, 2017, 13:48 [IST]
Subscribe Newsletter