கண்புரை நோயில் இருந்து எளிதில் விடுபட இத ட்ரை பண்ணுங்க...

Posted By:
Subscribe to Boldsky

கண்புரை என்பது கருவிழியில் ஒளி ஊடுருவும் தன்மையைக் குறைக்கும் ஓர் நிலைமை ஆகும். இதனை சிலர் கண்ணில் பூ விழுதல் என்றும் சொல்வார்கள். பொதுவாக வயது அதிகரிக்கும் போது கண் பார்வை பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். அதில் ஒன்று தான் இந்த கண்புரை நோய்.

இதனை ஆரம்பத்திலேயே சரிசெய்ய முயற்சிக்காவிட்டால், கண் பார்வையையே இழக்க நேரிடும். கண்புரை நோயானது சர்க்கரை நோய், மரபணுக்கள், முதுமை, கண்களில் காயங்கள், அதிகப்படியான சூரிய வெளிச்சத்தைக் காண்பது, மது அதிகம் அருந்துவது மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணிகளால் அதிகம் வரும்.

Home Remedies For Cataract

இக்கட்டுரையில் கண்புரை நோயில் இருந்து விடுவிக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால், நிச்சயம் கண்புரை நோயில் இருந்து விடுபடலாம். முக்கியமாக இந்த வழிகளைப் பின்பற்றும் முன் மருத்துவரை ஆலோசித்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வழி #1

வழி #1

1 கப் ரோஜாப் பூ இதழ்கள் மற்றும் 4 டீஸ்பூன் ராஸ்ப்பெர்ரி இலைகளை, 4 கப் சுடுநீரில் போட்டு நன்கு ஊற வைத்து, நீர் குளிர்ந்த பின், அந்நீரால் கண்களைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கண் பார்வை மேம்படும்.

வழி #2

வழி #2

1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் ரோஸ்வாட்டரை ஒன்றாக கலந்து, கண்களில் 4 துளிகள் விட்டு, உடனே முகம் மற்றும் கண்களை நீரில் கழுவ வேண்டும். இப்படி கண்புரையின் ஆரம்ப காலத்தில் செய்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

வழி #3

வழி #3

தினமும் 2 பூண்டு பற்களை சாப்பிட்டு வந்தால், அதுவும் கண்புரை பிரச்சனையில் இருந்து விடுவிக்குமாம்.

வழி #4

வழி #4

தினமும் 1 டீஸ்பூன் அஸ்வகந்தாவை உட்கொண்டு வர, கண்புரையின் அபாயத்தை 40% வரை குறைக்கலாம்.

வழி #5

வழி #5

ஒரு துளி நல்ல சுத்தமான தேனை கண்களில் விடுவதன் மூலம், கண்புரை நோயை சரிசெய்யலாம். ஆனால் தேன் சுத்தமானதாக, கலப்படம் இல்லாததாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அதுவே பார்வையை இழக்கச் செய்துவிடும்.

வழி #6

வழி #6

தினமும் நீரில் ஊற வைத்த பாதாம் மற்றும் ஒரு டம்ளர் பாலை காலையில் குடித்து வந்தால், கண் சம்பந்தமான பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

வழி #7

வழி #7

முக்கியமாக தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிப்பதோடு, தக்காளி, பசலைக்கீரை போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதன் மூலம், அவற்றில் உள்ள வைட்டமின் ஏ பார்வை பிரச்சனைகளைத் தடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home Remedies For Cataract

Is there a home remedy for cataract? Yes, here are a few remedies that work if cataract is still in the beginning stages.
Subscribe Newsletter