Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
ரம்ஜான் நோன்பின் போது உடல் வறட்சி அடையாமல் இருக்க வேண்டுமா? அப்ப இத சாப்பிடுங்க...
இங்கு ரம்ஜான் நோன்பின் போது உடல் வறட்சி அடையாமல் இருக்க உதவும் பானங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
ரமலான் நோன்பு ஆரம்பமாகிவிட்டது. இஸ்லாமியர்கள் 12 மணிநேரத்திற்கும் மேலாக நோன்பை மேற்கொள்வது வழக்கம். நாள் முழுவதும் தண்ணீர் சிறிதும் குடிக்காமல் இருப்பது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. அதிலும் கோடையில் தண்ணீர் குடிக்காமல் இருந்தால், அதனால் உடல் வறட்சி ஏற்பட்டு, கடுமையான விளைவை சந்திக்க நேரிடும்.

இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் இந்த கடுமையான நோன்பு அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன் ஆரம்பித்து, மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின் தான் எதுவும் சாப்பிடுவார்கள். அப்படி நீண்ட இடைவெளிக்கு பின் சாப்பிடும் உணவை இஃப்தார் என்று அழைப்பார்கள்.
நீண்ட நேரத்திற்கு பின் இஃப்தார் வேளையில் சாப்பிடும் போது, உடலை புத்துணர்ச்சியூட்டும் மற்றும் நீர்ச்சத்தை அதிகரிக்கும் பானத்தை தேர்ந்தெடுத்து குடிக்க வேண்டும். இங்கு அந்த பானங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

மேங்கோ மிண்ட் கூலர்
குளிர்ந்த நீரில் மாம்பழத் துண்டுகள், ஒரு கையளவு புதினா இலைகள், சிறிது ஐஸ் கட்டிகள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து, ஜில்லென்று குடித்தால், உடல் வறட்சி தடுக்கப்படுவதோடு, உடல் புத்துணர்ச்சியும் அடையும்.

லெமன் மிண்ட் மோஜிடோ
இது மிகச்சிறந்த ஓர் இஃப்தார் பானம். அதற்கு குளிர்ந்த நீரில் ஐஸ் கட்டிகளுடன், சிறிது தேன், ஒரு கையளவு புதினா இலைகள் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து குடிக்க வேண்டும்.

தர்பூசணி ஜூஸ்
தர்பூசணித் துண்டுகளை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து, அத்துடன் சிறிது நீர் மற்றும் ஐஸ் கட்டிகளை சேர்த்து கலந்து, அதோடு ஒரு சிட்டிகை கல் உப்பும் சேர்த்து கலந்து குடிக்க, உடல் புத்துணர்ச்சி அடைவதோடு, வறட்சி அடையாமலும் இருக்கும்.

சப்ஜா லெமன் ஜூஸ்
1 ஸ்பூன் சப்ஜா விதைகளை நீரில் போட்டு ஊற வைத்து, அத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து நோன்பை முடிக்கும் போது குடிப்பது மிகவும் நல்லது.

வெல்ல சர்பத்
காலையிலேயே நீரில் சிறிது வெல்லத்தைப் போட்டு கரைய வைக்க வேண்டும். மாலைக்குள் இது கரைந்துவிடும். பின் அந்நீரை வடிகட்டி, அத்துடன் எலுமிச்சை சாறு, சிறிது ஊற வைத்த சப்ஜா விதைகள் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications