கண் இமைக்காமல் வேலை செய்வது எவ்வளவு பெரிய தவறு தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

செரிமான கோளாறு, குடலியக்க பிரச்சனை, கண் பார்வை கோளாறு, கண் எரிச்சல் மற்றும் பல இது போன்ற பிரச்சனைகளை நாம் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் காதில் கேட்டதும் இல்லை, நேரில் பார்த்ததும் இல்லை, பெரியளவில்!

Do You Know Blinking Makes Your Brain Work Really Hard

ஆனால் இன்று? காணுமிடமெல்லாம் இந்த பிரச்சனை தான். அதில் முதன்மை வகிப்பது கண் பிரச்சனை. எல்.கே.ஜி படிக்கும் குழந்தையும் கூட கண்ணாடி அணிந்து பள்ளிக்கு செல்வது மனதை ரணமாக்குகிறது.

இதற்கு எல்லாம் காரணம் நாம் செய்யும் ஒரு சிறிய தவறு தான்.... கண்ணிமைக்க மறப்பது. அதற்கு காரணம் அதிகப்படியான கணினி, ஸ்மார்ட் போன் பயன்பாடு....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆராய்ச்சி!

ஆராய்ச்சி!

சமீபத்திய ஆய்வொன்றில் நாம் கண்ணிமைப்பது மூளையை அதிகமாக செயற்படவும், சுறுசுறுப்பாக இயக்க்கி கண்பார்வையை நிலையாக வைத்துக் கொள்ள உதவுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.

கண் பிரச்சனைகள்!

கண் பிரச்சனைகள்!

முக்கியமாக கண்ணிமைப்பது கண் வறட்சி, கண் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் உண்டாகாமல் காக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றனர்.

கருவிழிகள்!

கருவிழிகள்!

ஜர்னல் ஆப் கரன்ட் பயாலாஜி என்ற ஆய்வு பத்திரிக்கையில் வெளியாகிள்ள ஆய்வறிக்கையில், நாம் ஒவ்வொரு முறையும் கண்ணிமைக்கும் போது கருவிழிகள் மீண்டும் ரீபொசிஷன் ஆகி நல்ல ஃபோக்கசுடன் செயல்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூளை செயற்திறன்!

மூளை செயற்திறன்!

இதனால், மூளை கண் தசைகளை ஆக்டிவேட் செய்து, உங்கள் பார்வையை சரி செய்கிறது என சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆய்வாசிரியர் கெர்ரிட் கூறியுள்ளார்.

கண்ணிமைக்காமல் உழைக்க வேண்டாம்!

கண்ணிமைக்காமல் உழைக்க வேண்டாம்!

கண்ணிமைக்காம உழைக்கிறான்பா அவன், செம்ம! என பாராட்ட வேண்டாம். அது முற்றிலும் தவறு. பெரும்பாலும் கணினி முன் அமர்ந்து வேலை செய்பவர்கள் கண் இமைக்க மறந்தே விடுகிறார்கள் என்பது தான் உண்மை. இதுவும் கண் பார்வை கோளாறு ஏற்பட ஒருவகையில் காரணமாக இருக்கிறது. எனவே, கண்ணிமைத்து வேலை செய்யுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Do You Know Blinking Makes Your Brain Work Really Hard

Do You Know Blinking Makes Your Brain Work Really Hard?
Subscribe Newsletter