இரவில் தூங்கும் முன் செய்வது நல்லது என நமது சாஸ்திரங்கள் கூறும் சில செயல்கள்!

Posted By:
Subscribe to Boldsky

ஒருவருக்கு தூக்கம் மிகவும் இன்றியமையாதது என்பதை சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. தூங்குவதன் மூலம் உடலுக்கு நல்ல ஓய்வு கிடைக்கும். ஆனால் அப்படி தூங்கம் நேரத்தில், உடலுக்கு ஓய்வு கிடைக்க மட்டுமின்றி, வாழ்வில் அதிர்ஷ்டத்தை வரவழைக்கவும் செய்யலாம். என்ன நம்ப முடியவில்லையா?

ஆம், ஜோதிடத்தின் படி, ஒருவர் இரவில் படுக்கும் முன் ஒரு குறிப்பிட்ட விஷயங்களைச் செய்வதன் மூலம், நம் பக்கம் அதிர்ஷ்டக் காற்றை வீச செய்து, வாழ்வில் முன்னேற்றத்தைக் காணலாம். சரி, இப்போது நமது சாஸ்திரங்கள் கூறும் அந்த விஷயங்கள் என்னவென்று பார்ப்போம். அதைப் படித்து இன்றிலிருந்தே பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செயல் #1

செயல் #1

இரவில் படுக்கும் முன் தலையணைக்கு அடியில் சோம்பு நிரப்பிய ஒரு சிறிய பையை வைத்துக் கொண்டு தூங்குங்கள். இதனால் இரவில் கெட்ட கனவு வந்து தொல்லை செய்வதைத் தடுக்கலாம்.

செயல் #2

செயல் #2

இரவில் படுப்பதற்கு முன், ஒரு வெண்கல சொம்பில் நீரை நிரப்பி, தலைக்கு பக்கவாட்டில் வைத்துக் கொண்டு தூங்குங்கள். மறுநாள் காலையில் அந்நீரை செடிகளுக்கு ஊற்றுங்கள். இதனால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.

செயல் #3

செயல் #3

இரவில் தூங்கும் முன்பு, நல்ல புத்தகத்தைப் படித்துக் கொண்டு தூங்குங்கள். அதுவும் தென் திசையில் தலையை வைத்துக் கொண்டு தூங்குங்கள். இதனால் இரவில் நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.

செயல் #4

செயல் #4

இரவு நேரத்தில் மொபைல் போனை அணைத்து கைக்கு எட்டாத தூரத்தில் வைத்துவிட்டு, 10 நிமிடம் தியானம் செய்யுங்கள். இதனால் மனதை ஒருமுகப்படுத்தும் திறன் மற்றும் மூளையின் ஆற்றல் மேம்படும்.

செயல் #5

செயல் #5

இரவில் படுக்கும் முன்பு, பாதங்களை வெதுவெதுப்பான நீரால் கழுவி விட்டு, கற்பூரத்தை பொடி செய்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து, குதிகாலில் தடவிக் கொண்டு தூங்குங்கள். இதனால் நல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

செயல் #6

செயல் #6

இரவில் தூங்கும் முன் குறைந்தது 15 நிமிடம் நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். முடிந்தால் விஷ்ணு மந்திரத்தை சொல்லுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Do These Things Before Going To Bed Tonight: Sleep Rules As Per Shastra

Here are some sleep rules as per shastra. Read on to know more...
Story first published: Wednesday, April 5, 2017, 17:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter