நகத்தில் இதுபோன்ற வெள்ளை புள்ளி தோன்றுவது எதனால் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

நமது நகங்களில் ஏற்படும் மாற்றத்தை வைத்து நமது ஆரோக்கியத்தை அறிய முடியும். என்பார்கள். அது உண்மை தான். ஒருசில தொற்று, இன்பெக்ஷன் ஆகியிருந்தால் அதை நகங்களில் ஏற்படும் மாற்றத்தை வைத்து நாம் கண்டறியலாம். ஆனால், நகங்களில் வெள்ளை புள்ளிகள் / கோடுகள் உண்டாவது ஏன்?

சிலர் இந்த வெள்ளை புள்ளிகள் / கோடுகள் நகங்களில் உண்டாவது கால்சியம் குறைபாடு அல்லது ஜின்க் குறைபாட்டினால் தான் என காரணம் கூறுவார்கள். ஆனால், இவை எல்லாம் வெறும் மூடநம்பிக்கைகள். சிலர் இதை புற்றுநோய் அறிகுறி என்று கூட கூறுவார்கள். இவை எல்லாம் பொய்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தீங்கற்றது?

தீங்கற்றது?

உண்மையில் வெள்ளை புள்ளிகள் நகங்களில் தோன்றுவதை ஆங்கிலத்தில் Punctate Leukonychia (புள்ளி போன்ற வெளிர்நகம்) என்றும் பால் புள்ளிகள் (Milk Spot) என்றும் குறிப்பிடுகின்றனர். இது முற்றிலும் தீங்கற்றது. இதற்காக நீங்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

Image Courtesy

இது ஒரு அதிர்ச்சி!

இது ஒரு அதிர்ச்சி!

இந்த வெள்ளை புள்ளிகள் / கோடுகள் நகத்தில் உண்டாக காரணமாக இருப்பது நகத்தில் உண்டாகும் அதிர்ச்சி. அதாவது, நீங்கள் என்றாவது உங்கள் விரலை டேபிள், நாற்காலி போன்றவற்றில் தவறுதலாக பலமாக அடித்திருப்பீர்கள். இதனால் தான் இந்த வெள்ளை புள்ளிகள் உண்டாகின்றன.

இது தான் காரணம்...

இது தான் காரணம்...

விரல் நகம் வளரும் செயற்முறையில் நகத்தில் உண்டான அந்த அதிர்ச்சி தாக்கத்தை உண்டாக்கும். இதனால், தான் அந்த வெள்ளை புள்ளி உருவாகும். ஆனால், நமது விரல் நகமானது மாதத்திற்கு 3.5 மி.மீ தான் வளரும் என்பதால்.

தற்காலிகமானது!

தற்காலிகமானது!

அடிப்பட்ட ஓரிரு மாதம் கழித்து தான் இந்த வெள்ளை புள்ளி / கோடுகள் தோன்றும். இந்த வெள்ளை புள்ளிகள் தற்காலிகமானது. அடுத்த ஓரிரு மாதங்களில் இது தானாக மறைந்துவிடும்.

Image Courtesy

ஃபங்கஸ்!

ஃபங்கஸ்!

ஒருசில ஃபங்கஸ் தொற்று, அபாயமான காய்ச்சல் தொற்று உண்டாகும் போது கூட, இது போன்ற மாற்றங்கள் நகங்களில் தென்படும். உடலில் ஒருசில மாற்றங்கள் உண்டாகும் போது அதன் முதன்மை அறிகுறிகள் நகங்கள், சிறுநீர், மலம் கழித்தல் போன்றவற்றில்தான் தென்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Those Little White Marks On Your Nails Actually Mean

What Those Little White Marks On Your Nails Actually Mean
Please Wait while comments are loading...
Subscribe Newsletter