உங்க உடலில் தட்டுவதால் உண்டாகும் நன்மைகள் பற்றி தெரியுமா?

Posted By: Srinivasan P M
Subscribe to Boldsky

உடம்பின் சில பகுதிகளில் தட்டுவது மூலம் வலி, மன அழுத்தம் மற்றும் உளைச்சலை போக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஆமாங்க.. எங்கும் எப்போது வேண்டுமானாலும் வலி, மன அழுத்தத்தால் ஏற்படும் எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்த இது நமக்கு நாமே செய்துகொள்ளக் கூடிய சிறந்த ஒரு செய்முறை என்றால் நம்ப முடிகிறதா?

வலியைக் குறைக்க தட்டுவது அல்லது அடிப்பது என்பது பல காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு செய்முறை.

tapping to relieve stress and pain

இப்போது நாம் எப்படி மற்றும் ஏன் இதை செய்வது என்பதைப் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ளவிருக்கிறோம். இந்த தட்டும் சிகிச்சை எமோஷனல் ஃப்ரீடம் அல்லது உணர்வு சுதந்திரம் என்றும் அழைக்கப் படுகிறது.

அதாவது தட்டிக் கொண்டே உங்கள் பிரச்சனைகளை உரக்க சொல்லவேண்டும் குழப்பமா இருக்கா? புரிஞ்சிக்க தொடர்ந்து படிங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. உங்கள் கைகளின் வெளிப்புறத்தில் தட்டுங்கள்

1. உங்கள் கைகளின் வெளிப்புறத்தில் தட்டுங்கள்

நீங்கள் முதலில் உங்கள் பிரச்சனையைச் சொல்லி உங்கள் கையின் வெளிப்புறத்தில் தட்ட வேண்டும். உங்கள் பிரச்சனைகளை உரக்கச் சொல்லி உங்கள் சுண்டு விரலின் வெளிப்புற நுனியில் உள்ள சதைப் பற்றான பகுதியை உங்களின் இன்னொரு கையால் பிடிக்கவேண்டும். இவ்வாறு உரக்க மூன்று முறை கூறவேண்டும்.

2. புருவத்தில் தட்டுதல் :

2. புருவத்தில் தட்டுதல் :

உங்கள் கண்ணின் மேல் புருவத்தின் உட்பகுதியில் விரலை வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உணர்வுகளை சொல்லி அந்த இடத்திலளொரு பத்து நொடிகள் தட்டுங்கள்.

3. கண்ஓரத்தின் நுனியின் வெளிப்பகுதியில் தட்டுங்கள்

3. கண்ஓரத்தின் நுனியின் வெளிப்பகுதியில் தட்டுங்கள்

உங்கள் விரலை உங்கள் கண்ணின் ஓரத்தின் வெளிப்பகுதியில் உங்கள் புருவத்தின் ஓரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் உங்கள் உணர்வுகளைக் கூறுங்கள்.

தட்டி உங்கள் மன அழுத்தம் மற்றும் வலிகளை போக்கும் முறை ஒரு சிறந்த உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துதலை உள்ளடக்கிய முறை என்பதுடன் உங்களை உடனடியாக தெம்பாக உணரவைக்கும்.

4. உங்கள் கண்ணிற்குக் கீழுள்ள எலும்பில் தட்டுதல்

4. உங்கள் கண்ணிற்குக் கீழுள்ள எலும்பில் தட்டுதல்

உங்கள் கண்ணின் கீழுள்ள எலும்பை நீங்கள் சொல்ல வந்த வாக்கியத்துடன் கூறித் தட்டுங்கள். இதை ஒரு பத்து முறை தொடர்ந்து செய்யுங்கள்.

நீங்கள் சொல்லும் வாக்கியம் உதாரணமாக " என்னால் முடியும்", "நான் சோர்வாக இருக்கிறேன்" அல்லது "நான் அற்புதமானவன்" ஆகியவையாக இருக்கலாம்.

5. உங்கள் மூக்கிற்குக் கீழ் பகுதி

5. உங்கள் மூக்கிற்குக் கீழ் பகுதி

உங்கள் உளைச்சல் மற்றும் அழுத்தத்தைப் போக்க தட்டும் செய்முறை உங்களுக்கு அழகான உணர்வுகளைத் தருவதுடன் உங்களை நன்கு உணரச்செய்யும்.

இங்கே நீங்கள் உங்கள் மூக்கின் கீழ் பகுதியை அதாவது உதட்டிற்கு மேலே உள்ள பகுதியைத் தட்டுங்கள். மேற்சொன்னது போல் இதைச் செய்யும்போது நீங்கள் கூற வேண்டிய வாக்கியத்தைக் கூற மறவாதீர்கள்.

 6. முகவாயில் தட்டுதல்

6. முகவாயில் தட்டுதல்

உங்கள் முகவாயில் (சின்) பத்து நொடிகள் தட்டி உங்கள் உணர்வுகளை வாய்திறந்து கூற வேண்டும்.

7. தோள்பட்டை எலும்பில் தட்டுதல்

7. தோள்பட்டை எலும்பில் தட்டுதல்

உங்கள் தோள்பட்டை எலும்பில் இருபுறமும் உங்கள் வாக்கியத்தை தொடர்ந்து கூறியவாறு 10 நொடிகள் தட்டுங்கள்.

 8. உங்கள் பின்னங்கைகளைத் தட்டுங்கள்

8. உங்கள் பின்னங்கைகளைத் தட்டுங்கள்

தோள்பட்டையில் இருந்து இரண்டு அங்குலம் கீழே உங்கள் கைகளில் நீங்கள் விரும்பும்போதெல்லாம் தட்டி உங்கள் மன அழுத்தம் மற்றும் படபடப்பைப் போக்கிக் கொள்ளலாம். தட்டும்போது நீங்கள் சொல்ல வந்த வாக்கியத்தை மறக்காமல் தொடர்ந்து சொல்லுங்கள்.

9. உச்சந்தலையில் தட்டுதல்

9. உச்சந்தலையில் தட்டுதல்

உங்கள் கைவிரல்களைக் கொண்டு உங்களின் கவலைக்கான காரணத்தை தெரிவித்தவாறு உச்சந்தலையில் தட்டுங்கள். படபடப்பிற்கும் மன அழுத்தத்திற்கும் ஒரு சிறந்த தட்டும் முறையாக இது அறியப்படுகிறது.

10. ஆழ்ந்து சுவாசித்தல்

10. ஆழ்ந்து சுவாசித்தல்

இந்த தட்டும் செய்முறையை முடிக்கும் விதமாக கடைசியாக நீங்கள் கண்டிப்பாக செய்யவேண்டிய செய்முறை இது. கடைசியாக நீங்கள் ஒரு ஆழ்ந்த சுவாசித்தலை அதாவது நன்றாக மூச்சை இழுத்து நிதானமாக விடவேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

tapping to relieve stress and pain

tapping to relieve stress and pain
Story first published: Monday, December 19, 2016, 15:30 [IST]