Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
உங்கள் விரல்களின் பின்னணியில் இருக்கும் ஆரோக்கிய இரகசியங்கள்!
நமது இந்தியாவில் மட்டுமில்லாது, ஜப்பானிலும் கூட உள்ளங்கை மற்றும் கைவிரல்களுக்கு அழுத்தம் கொடுத்து ஆரோக்கியத்தை மேம்பட வைக்கும் பயிற்சிகள் பண்டையக் காலம் முதல் பின்பற்றப்பட்டு வந்துள்ளது.
ஆனால், காலப்போக்கில் இது மெல்ல மெல்ல மறக்கடிக்கப்பட்டுவிட்டது. இது ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு பழமையான மருத்துவ முறையாகும்.
உங்கள் உடல்நலத்தைப் பற்றி உங்க "கை" என்ன சொல்கிறது என்று தெரியுமா?
வெறும் பண்டையக் காலத்து மருத்துவம் என்று மட்டுமில்லாமல், இப்போது கலிபோர்னியாவில் இருக்கும் கைசர் பெர்மனேட் சுகாதார ஆராய்ச்சி மையத்திலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஜின் சின் ஜியச்டு எனும் பயிற்சியாளர் இதை நோயாளிகளுக்கு பயிற்சி அளித்து முன்னேற்றம் கண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
உங்க உள்ளங்கையில "M" வடிவிலான ரேகை இருந்தா என்ன அர்த்தம்-னு தெரியுமா?
உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம் என இந்த ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்...

கட்டை விரல்
உங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறைய, மனநிலையை கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம். மேலும் இது உடற்சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.

கட்டை விரல்
கட்டை விரலானது, மண்ணீரல் மற்றும் வயிறு பகுதியுடன் இணைப்புள்ளது ஆகும். இது வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த செல்களை ஊக்குவித்து செரிமானத்தை சீராக்குகிறது.

ஆள்காட்டி விரல்
உங்கள் பலவீனம் மற்றும் பயத்தை குறைக்க கூடியது ஆள்காட்டி விரல். மேலும், ஆள்காட்டி விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களிடம் இருக்கும் அடிமைத்தனத்தினை குறைக்கவல்லது.

ஆள்காட்டி விரல்
உங்கள் ஆள்காட்டி விரல் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையுடன் இணைப்புக் கொண்டுள்ளது. சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாமல் இருக்கவும், நீர்வறட்சி ஏற்படாமல் இருக்கவும் பயனளிக்கிறது.

நடுவிரல்
நடுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களது கோபத்தை குறைக்க உதவும். தலை பகுதியில் இரத்த ஓட்டத்தை சீராக்கி தலைவலி ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது.

நடுவிரல்
நடுவிரலானது, கல்லீரல் மற்றும் பித்தப்பையுடன் இணைப்புடையது. இது இந்த பாகங்களின் வலிமையை மேம்படுத்துகிறது மற்றும் உடற்சக்தியை ஊக்குவிக்கிறது.

மோதிரவிரல்
ஏறத்தாழ கட்டைவிரலுடன் ஒத்துப் போவது தான் இந்த மோதிர விரலும். உங்களில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தீய எண்ணத்தை குறைக்க நீங்கள் மோதிர விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்யலாம்.

மோதிரவிரல்
மேலும், மோதிர விரல் நுரையீரலுடன் இணைப்பு கொண்டுள்ளது. இது சுவாசக் கோளாறுகளை போக்கவல்லது. மேலும், நரம்பு மண்டலம், தசைகளுக்கு வலிமை அளிக்கிறது. இதனால், உங்கள் உடற்சக்தி மேம்படும்.

சிறுவிரல்
சிறுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது இதயம் மற்றும் இரத்த ஓட்டத்திற்கு நல்லது. இது இரத்த ஓட்டத்தை சீராக்கி இதர உடல் பாகங்களின் செயற்திறனை ஊக்குவிக்கிறது.

சிறுவிரல்
மேலும் இது மூளையின் செயல்திறனையும் மேம்படுத்துகிறது, இதனால் உங்கள் எண்ணம், சிந்தனை, கவனம் போன்றவையும் மேம்படும்.

உள்ளங்கை
மன அழுத்தம் தான் அனைவருக்கும் ஏற்படும் கொடிய நோய். இது ஒட்டுமொத்தமாக மனதையும், உடலையும் பாதிக்கக் கூடியது. உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க உதவுகிறது.

உள்ளங்கை
மேலும், இது உடல் மற்றும் மனதில் ஏற்படும் சோர்வில் இருந்து விரைவாக விடுபட்டு வெளிவரவும் பயனளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications
