சீரற்ற இரத்த ஓட்டத்தை 20 நிமிடத்தில் சரி செய்வது எப்படி?

Posted By:
Subscribe to Boldsky

இரத்த ஓட்டம் என்பது உங்கள் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த மட்டுமின்றி, இல்லற ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும் ஒன்றாகும். முக்கியமாக ஆண்களுக்கு இரத்த ஓட்டம் சிறப்பாக இருந்தால் தான், விந்து உற்பத்தி மற்றும் வேகம் சீராக இருக்கும்.

உடலில் இரத்த ஓட்டம் சீரில்லாமல் இருந்தால், இதர உடல் உறுப்புகளின் செயற்திறனும் பாதிக்கப்படும். சரி, இரத்த ஓட்டம் சீராக இல்லை என்பதை எதை வைத்து அறிந்துக் கொள்வது? உணர்வின்மை, மூட்டு வலி, தசைப்பிடிப்பு, உடல் சோர்வு போன்றவற்றை வைத்து உங்கள் உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லை என்பதை அறிந்துக் கொள்ளலாம்.

இனி, இரத்த ஓட்டத்தை 20 நிமிடத்தில் சீராக்குவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வழிமுறை # 1

வழிமுறை # 1

ஸ்ட்ரெச்சிங்! காலை எழுந்தவுடன், உங்கள் உடலை நன்கு ஸ்ட்ரெச் செய்து பயிற்சி செய்யுங்கள். கை, கால், விரல் மூட்டுகள் அனைத்து பகுதிகளும் நன்கு ஸ்ட்ரெச் செய்து பயிற்சி செய்வதால் இரத்த ஓட்டம் சீராகும்.

வழிமுறை # 2

வழிமுறை # 2

புஷ்-அப்ஸ்! காலை குளித்து முடித்தவுடன் 10 புஷ்-அப்ஸ் எடுக்க தவற வேண்டாம். இது உங்கள் தோள்பட்டை பகுதிகளின் இயக்கத்தை இலகுவாக இருக்க உதவும்.

வழிமுறை # 3

வழிமுறை # 3

கழுத்து பயிற்சிகள்! உங்கள் கழுத்தை மெதுவாக இடதுபுறமாகவும், வலது புறமாகவும் திருப்புங்கள். இருபுறமும் திருப்பும் போது, 10 நொடி கழுத்தை அதே நிலையில் பிடித்து வைக்கவும்.

வழிமுறை # 4

வழிமுறை # 4

பிறகு, கழுத்தை மேலும், கீழுமாக அசைக்கும் பயிற்சியில் ஈடுபடுங்கள். கழுத்தை மேலே தூக்கி 10 நொடிகள் ஹோல்ட் செய்தும், கீழே இறக்கி பத்து நொடிகள் ஹோல்ட் செய்தும் தினமும் 10 முறை பயிற்சி செய்து வாருங்கள்.

வழிமுறை # 5

வழிமுறை # 5

கைகள் பயிற்சி! கைகளை நேராக நீட்டி, உங்கள் உள்ளங்கையை பின்புறமாக இழுத்து பயிற்சி செய்யுங்கள். பத்து முறை இவ்வாறு செய்து வந்தால் பிடிப்புகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

வழிமுறை # 6

வழிமுறை # 6

நடைப்பயிற்சி! வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களாவது நடைப்பயிற்சியில் ஈடுபடுவதால், கால்களில் இரத்த ஓட்டம் சீராகும்.

வழிமுறை # 7

வழிமுறை # 7

நடனம்! நடனம் ஆடுவதால் உங்களது மன அழுத்தம் குறையும். மேலும், இது உடல் முழுதும் இருக்கும் தசைகளுக்கு சிறந்த பயிற்சி ஆகும். இது இரத்த ஓட்டத்தை உடல் முழுக்க சீராக செல்ல பயனளிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How To Solve Poor Circulation In Only 20 Minutes

Do You Suffer From Poor Circulation? Here It Is How To Solve The Problem In Only 20 Minutes, read here in tamil,
Please Wait while comments are loading...
Subscribe Newsletter