ட்விட்டரில் மருத்துவராக மாறி டிப்ஸை அள்ளி தெளிக்கும் ஆர்யா!

Posted By:
Subscribe to Boldsky

உடற்திறனில் மிகவும் அக்கறை கொண்டுள்ள நடிகர்களில் ஆர்யாவும் ஒருவர். முக்கியமாக இளைய தமிழ் நடிகர்களுக்கு இந்த விஷயத்தில் இவர் ஒரு முன்மாதிரியாக மட்டுமின்றி பயிற்சியாளராகவும் திகழ்கிறார் என்பது தான் உண்மை.

எப்போதும் ஃபிட்டாக இருப்பதற்கு அமீர் கான் பின்பற்றும் டயட் இது தாங்க...!

ஒரு தனியார் தொலைக்காட்சி பேட்டியில் இதை பரத், உதயநிதி, விக்ராந்த், விஷால் போன்றவர்கள் ஒப்புக் கொண்டும் உள்ளனர்.

இப்போது புதியதாக ட்விட்டரில் மருத்துவர் அவதாரம் எடுத்துள்ளார் ஆர்யா. ஆனால், உடல் எடை சிறப்பு மருத்துவராக மட்டும். தினமும் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்ய இலவசமாக ஊக்கம் அளித்து வருகிறார் நடிகர் ஆர்யா.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஹ்ரித்திக் ரோஷனின் பாடி பில்டிங் டிப்ஸ்!!

முக்கியமாக இவரது ரசிகர்கள், ரசிகைகள் பலரும் இவரிடம் யோசனை கேட்டு பின்பற்றி வருகிறார்கள்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

அப்துல்

அப்துல் என்ற நபர் தான் தினமும் ஒரு மணிநேரம் நடைபயிற்சியில் ஈடுபடுவதாகவும், உடல் எடை குறைக்க டிப்ஸ் கூறுமாறும் ஆரியாவிடன் கேட்டுக் கொண்டார். ஆர்யா, "டயட்டில் கவனமாக இருங்கள், தொடர்ந்து வர்க்-அவுட் செய்யுங்கள்" என பதிலளித்துள்ளார்.

சிந்து

உடல் எடை குறைவாக இருப்பவர்கள், உடல் எடை அதிகரிக்க ஏதேனும் சொல்லுங்க என சிந்து என்ற பெண் ஆர்யாவிடம் கேட்டார். அதற்கு ஆர்யா, "நன்கு சாப்பிடுங்கள், முக்கியமாக புரதம் நிறைந்த உணவுகள் மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதை வழக்கமாக கொள்ளுங்கள்" என கூறியுள்ளார்.

பிரேம்

பிரேம் என்பவர் தான் நேற்று 600 கலோரிகள் கரைத்ததாவும், நாளை நூறு கலோரிகள் சேர்த்து கரைக்க போவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு ஆர்யா, "கலோரிகள் கணக்கு வைக்க வேண்டாம், தூரம் மற்றும் நேரத்தை கணக்கு வைத்து செல்லுங்கள்" என கூறியிருந்தார்.

மதுசன்

மதுசன் என்பவர், 1 மணி நேரம் ஜாக்கிங், மூன்று மணிநேரம் ஃபுட்பால், இரண்டு மணி நேரம் ஜிம்மிற்கு சென்றதாக ட்வீட் செய்திருந்தார். அதற்கு ஆர்யா, "ஒரு நாளுக்கு இது மிகவும் அதிகம், ஆனாலும், நீங்கள் செய்தது சிறப்பு" என பதிலளித்து இருந்தார்.

விக்ரம் சி

விக்ரம் சி என்பவர், நான் கலோரிகளை கரைக்க முடிவு செய்துள்ளேன். ஒரு நாளுக்கு ஐந்து கிலோமீட்டர் என்பது சரியாக இருக்குமா? என்று கேட்டதற்கு. "சரியாக இருக்கும், உடனே துவங்குங்கள்" என ஆர்யா பதில் அளித்துள்ளார்.

அணிமா ஆர்யா

அணிமா ஆர்யா என்ற ஆர்யாவின் ரசிகை, "நான் தினமும் இரண்டு மணிநேரம் ஜிம்மிற்கு செல்கிறேன், உடற்பயிற்சி செய்கிறேன். என்னை ஊக்கப்படுத்த என்னை ஃபாலோ செய்யுங்கள் ப்ளீஸ்" என கேட்க. "நான் உன்னை ஃபாலோ செய்துக் கொன்று தான் இருக்கிறேன் ஸ்வீட் ஹார்ட்" என ஆர்யா பதிலளித்துள்ளார்.

வினுஷா

வினுஷா என்ற பெண், "சத்தியமாக நான் நான்கு கிலோமீட்டர் நடந்தேன் என்றும், ஜி.பி.எஸ் செயல்படவில்லை, எனவும், கூற நான் உன்னை நம்புகிறேன் என ஆர்யா பதிலளித்துள்ளார்.

மற்றும் பல

மற்றும் பல

#MMDDDDLCT என்ற hashtag-ல் இன்னும் ஏராளமானோர் ஆர்யாவிற்கு ட்வீட் செய்து பதில் பெற்று வருகிறார்கள். விட்டால் ட்விட்டரில் மருத்துவமனை ஆரம்பித்து விடுவார் போல ஆர்யா. ஆர்யாவின் அறிவுரை பேரில் நிறைய பேர் உடலை வலுப்படுத்தி கொள்ள முனைந்துக் கொண்டிருப்பது நல்லது தான்.

#MMDDDDLCT

#MMDDDDLCT

#MMDDDDLCTWorkout அனைத்து பதிவுகளிலும் என்ற Hashtag இருந்தது. ஆனால், இதற்கு பொருள் என்ன என்பது தான் புரியவில்லை. பெயர் தெரியாத ஒருவர் இதற்கு பொருள் Macha Machis Da Di Dear Darling Love Chellame Thangamey (MMDDDDLCT) என கூறியுள்ளார்.

தீராத விளையாட்டு பிள்ளை

தீராத விளையாட்டு பிள்ளை

அட, என்ன ஒரு அற்புதமான பொருள் ஐய்யா இந்த #MMDDDDLCT க்கு. ஆர்யா தான் மெய்யாலுமே தீராத விளையாட்டு பிள்ளை. ட்விட்டரில் ரசிகைகள் அனைவரையும் டார்லிங், டார்லிங் என்று கூறிவரும் ஆர்யா நிரந்தரமான டார்லிங்கை எப்போது தேர்வு செய்வார் என்று தான் தெரியவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Tips From Actor Arya Via Twitter

Health Tips From Actor Arya Via Twitter, read here in tamil.
Story first published: Tuesday, February 23, 2016, 15:22 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter