உங்கள் உடலில் விட்டமின் பி12 குறைந்தால் இந்த பிரச்சனைகள் எல்லாம் வரும்!!

Written By:
Subscribe to Boldsky

விட்டமின் பி12 நீரில் கரையும் விட்டமின். எளிதில் அழிந்துவிடக் கூடியது. ஆனால் மிக முக்கியமான பி காம்ப்ளக்ஸ் விட்டமின். இது வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகுக்கின்றது.

Deficiencies of Vitamin B12

விட்டமின் பி12 உள்ள உணவுகள் :

முட்டை, இறைச்சி, மீன், பால் ஆகிய்வற்றில் அதிகம் விட்டமின் பி12 உள்ளது. சோயா பால் மற்றும் ஈஸ்ட் ஆகியவற்றிலும் உள்ளது.

விட்டமின் பி12 குறைப்பாட்டினால் பல விதப்பட்ட வியாதிகள் உருவாகும். அவற்றை இங்கு காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 நினைவுத்திறன் குறைவு :

நினைவுத்திறன் குறைவு :

உங்களுக்கு அடிக்கடி மறந்து போவது, அல்லது படிக்க முடியாமல் திணறுகிறீர்களென்றால் அது இந்த விட்டமின் குறைப்பாட்டினால் இருக்கக் கூடும். கவனமின்மையும் உண்டாகும்.

மெகோபிலாஸ்டிக் அனீமியா :

மெகோபிலாஸ்டிக் அனீமியா :

இது ஒரு வகை ரத்த சோகையாகும். சிவப்பணுக்கள் வழக்கத்திற்கு மாறாக அளவில் பெரியதாகும். இதனால் போதிய அளவில் ஆக்ஸிஜன் கடத்தப்படாமல் ரத்த ஓட்டம் குறைந்து ரத்த சோகை உண்டாகும்.

நரம்பு மண்டல பாதிப்பு :

நரம்பு மண்டல பாதிப்பு :

நரம்பு சம்பந்தமான நோய்களான நடுக்கம், டெமென்டியா என்ற மூளை திறன் குறையும் நோய், நடக்க முடியாமல் தளர்வு, கைகாள்களில் எப்போதும் படபடப்பு என பலவித பிரச்சனைகள் நரம்பு மண்டலத்தில் உருவாகும்.

பசியின்மை :

பசியின்மை :

வளர்சிதை மாற்றத்தில் இந்த விட்டமின் மடங்கு வகிப்பதால், இதன் குறைபாட்டினால் ஜீரண சக்தி குறைந்து பசியின்மை உண்டாகும்.

ஹைபோ டென்ஷன் :

ஹைபோ டென்ஷன் :

அதாவது ரத்த அழுத்தம் மிகவும் குறைந்து காணப்படும். அதுதான் ஹைபோ டென்ஷன் என்று சொல்லப்படுகிறது. இதனால் உடல் அதிக சோர்வுடன் இருக்கும். மனத்தளர்ச்சியும் உண்டாகும்.

 ஆஸ்டியோபோரோஸிஸ் :

ஆஸ்டியோபோரோஸிஸ் :

ஆஸ்டியோஃபோரோஸிஸ் என்று எலும்பு பலவீனமாகும் நோய் உண்டாகும். விரைவில் எலும்பு முறிவு, நடக்க முடியாதபடி மூட்டு தேய்மானம் உண்டாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Deficiencies of Vitamin B12

Different type of Deficiencies when Vitamin B12 falls,
Story first published: Tuesday, December 13, 2016, 14:46 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter