மாதவிடாய் நாட்களில் தவிர்க்க வேண்டிய 7 தவறுகள்!

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு அந்த மூன்று நாட்கள் மிகவும் கொடுமையனாதாக தான் இருக்கும். அதிலும் உடல் சூடு அதிகமாக இருக்கும் பெண்களுக்கு வலி சற்று அதிகமாகவே இருக்கும். இவற்றை தடுக்க ஆரோக்கியமான, குளுமையான உணவுகளை மாதவிடாய் காலத்தில் பெண்கள் கட்டாயம் உட்கொள்ள வேண்டும்.

மாதவிடாய் காலங்களில் சுறுசுறுப்பாக இருப்பதற்கு என்ன சாப்பிடலாம்...?

ஆரோக்கியமான உணவுகளை மட்டும் உட்கொண்டால் போதாது. ஒருசில வேலைகளை சரியாக செய்ய வேண்டும், ஒருசில வேலைகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு முக்கியமாக தேவைபடுவது உறக்கமும், ஓய்வும் தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாதுகாப்பற்ற உடலுறவு

பாதுகாப்பற்ற உடலுறவு

மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடுவது தவறல்ல என மருத்துவர்கள் கூறினும். ஆணுறை போன்ற பாதுகாப்பு உபகரணத்தை பயன்படுத்த மறந்துவிட கூடாது. ஏனெனில், இதனால் பாலியல் உறுப்புகளில் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது.

உணவு

உணவு

மிகவும் சோர்வாக இருக்கிறது என காரணம் காட்டி பெண்கள் மாதவிடாய் நேரத்தில் உணவு உட்கொள்ள மறுப்பது அல்லது தவிர்ப்பது தவறு. மேலும், மாதவிடாய் நாட்களில் தான் நீங்கள் நல்ல ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

துரித உணவுகள்

துரித உணவுகள்

மாதவிடாய் நாட்கள் மட்டுமின்றி, மாதவிடாய் ஏற்படும் ஒரு வாரக் காலத்திற்கு முன்பே கூட பெண்கள் துரித உணவுகள் உட்கொள்வதை நிறுத்திக் கொள்வது சிறப்பு. ஏனெனில், துரித உணவுகள் உட்கொள்வதால், மாதவிடாய் நாட்களில் வயிறு உப்பசம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. இது, மேலும் அசௌகரியத்தை உண்டாகும்.

நாப்கின் பதிலாக துணி

நாப்கின் பதிலாக துணி

பெரும்பாலும் இல்லையெனிலும், அவசரத்திற்கு கூட இந்த தவறை பெண்கள் செய்துவிடக் கூடாது. துணியில் இரத்தப்போக்கு உறிஞ்சப்படாமல் போகலாம். இதனால் பிறப்புறுப்பு பகுதியில் தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

நாப்கின்

நாப்கின்

நாப்கின் உபயோகிக்கும் போதும், அவ்வப்போது சரிபார்த்து மாற்றிக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். வேலை காரணமாக பல பெண்கள் சகித்துக் கொள்வது கிருமி தொற்று ஏற்பட காரணமாகிவிடுகிறது எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

வேலை

வேலை

முடிந்த வரை மாதவிடாய் நாட்களில் பெண்கள் அதிக வேலைகளை குறைத்துக் கொள்வது நல்லது. ஓய்வெடுக்காமல் வேலை செய்வது மிகுந்த அசௌகரியத்தை அளிக்கும்.

உறக்கம்

உறக்கம்

மாதவிடாய் நாட்களில் பெண்கள் நன்கு உறங்கி ஓய்வெடுக்க வேண்டும். இல்லையேல் மறுநாள் காலை உடல் சோர்வு அதிகமாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Deadly Mistakes Girls Make During Their Periods

Deadly Mistakes Girls Make During Their Periods, read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter