Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம்
மீந்துபோன உணவை சாப்பிடலாமா? கூடாதா? அப்படி சாப்பிட்டால் என்ன நடக்கும்? ஆயுர்வேதம் என்ன சொல்கிறது தெரியுமா?
வீட்டில் உள்ள பெண்கள் அல்லது ஆண்கள் எப்போதும் சரியான அளவில்தான் உணவை சமைப்பார்கள். வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உணவை சமைப்பதை நாமே பார்த்திருப்போம். ஏனெனில், உணவை அதிகமாக சமைக்கும்போது, அதை வீணாக்குவோம் அல்லது வைத்திருந்து மறுநாள் அந்த உணவை சாப்பிடுவோம். ஆனால், இவ்வாறு சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதா?
எஞ்சிய அதாவது மீந்த உணவுகளைச் சாப்பிடுவதா அல்லது தவிர்ப்பதா என்பது பற்றிய விவாதங்கள் காலங்காலமாக நடந்து வருகிறது. இன்றும் உங்களுக்கு அந்த குழப்பம் இருக்கலாம். சில வல்லுநர்கள் உணவை சரியான முறையில் மீண்டும் சூடாக்குவது உணவின் புத்துணர்ச்சியையும் சுவையையும் தக்கவைக்க உதவும் என்று கூறுகிறார்கள்.

மறுபுறம், பழமையான உணவு நோய் தொற்றுக்கு வழிவகுக்கும் மற்றும் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. மீந்த உணவை உண்ணும்போது உண்மையில் உடலில் என்ன நடக்கும்? என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
அறிவியலின்படி, உணவை 165 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் 15 விநாடிகளுக்கு மீண்டும் சூடாக்குவது, மீதமுள்ளவற்றில் உள்ள நோய்க்கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களைக் கொல்லும். அறிவியலின்படி, உணவை உள்ளே மீண்டும் சூடாக்குவது பாக்டீரியாவைக் கொல்ல உதவுவது மட்டுமல்லாமல், அதே நேரத்தில் புத்துணர்ச்சியைத் தக்கவைக்க உதவும். ஆனால் ஆயுர்வேதத்தின்படி மூன்று மணி நேரம் கழித்து சமைத்த உணவை சாப்பிடுவது உணவின் ஊட்டச்சத்து மதிப்பை பாதிக்கும் என்று நம்பப்படுகிறது.
மீதமுள்ள உணவை நீங்கள் உட்கொள்ள வேண்டுமா?
புதிதாக சமைத்த உணவைப் போல எஞ்சிய உணவை உண்பது சத்தானது அல்ல என்பதை மறுப்பதற்கில்லை. ஆயுர்வேதத்தின்படி, புதிதாக சமைத்த உணவை சமைத்த 3 மணி நேரத்திற்குள் உட்கொள்ள வேண்டும். இருப்பினும், எஞ்சிய உணவை உண்பது வழக்கமான விஷயம் என்றால், 24 மணி நேரத்திற்கும் மேலாக சேமிக்கப்பட்ட பழைய உணவை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
உண்மையில், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தவிர்ப்பதற்காக உணவைச் சேமித்து மீண்டும் சூடாக்குவதற்கான சரியான வழிகளை தேர்ந்தெடுப்பதும் நல்லது. ஆனால், இன்று சமைத்த உணவை நாளை சாப்பிடுவது உங்கள் உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
மீதமுள்ள உணவை உண்ணும்போது என்ன நடக்கும்?
எஞ்சிய உணவை உண்பது உங்கள் வயிற்று ஆரோக்கியத்தை பாதிக்கும். அஜீரணத்தை தூண்டும், வீக்கம் மற்றும் உடலில் தோஷத்தை அதிகரிக்கும். நீண்ட காலத்திற்கு மீதமுள்ள உணவை உட்கொள்வது குடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். ஆதலால், சமைத்து நீண்ட நேரமான உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.
எஞ்சிய உணவுக்கு சரியான வழி
ஆயுர்வேதத்தின்படி, உணவை குளிர்சாதனப் படுத்துவதும், மீண்டும் சூடுபடுத்துவதும் உணவின் ஊட்டச்சத்து மதிப்பைக் குறைக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே, புதிதாக தயாரிக்கப்பட்ட உணவை 3 மணி நேரத்திற்குள் உட்கொள்வது சிறந்தது. புதிதாக சமைக்கப்பட்ட உணவு உங்களை நீண்ட காலம் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது என்று நம்பப்படுகிறது.
புதிதாக சமைத்த உணவை சேமித்து, அதிக வெப்பநிலையில் மீண்டும் சூடாக்கினால், அது சாப்பிடுவதற்கு ஏற்றதாக இருக்கும். ஆனால் முடிந்த வரை பழைய உணவை சாப்பிடுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், சில உணவுகளை சமைத்த பின்பு மீண்டும் சூட பண்ணக்கூடாது என்று ஆயுர்வேதம் கூறுகிறது. ஏனெனில், அவை சூடு செய்யும்போது, ஊட்டச்சத்துகள் குறைந்து உணவு விஷமாக மாறலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

