Latest Updates
-
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க..
சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு உங்கள 'கூல்'லாகவும் 'ஃபிரஷா'கவும் வைக்க இத குடிச்சா போதுமாம்!
Summer Drinks In Tamil: சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தில் உங்களை நீரேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். ஏனெனில், அதிகரிக்கும் சூரிய வெப்பம் உங்களை விரைவில் நீரிழப்பு செய்யும். இது உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
கொளுத்தும் கோடை வெப்பமும் அனல் காற்றும் மக்களை மிகவும் பாதிக்கிறது. இந்த நாட்களில் தண்ணீர் அதிகம் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது. அதிக வெப்பத்திலிருந்து உங்களை பாதுகாத்து கொள்ளவும், உங்களை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் நீரேற்றமாக இருக்க வேண்டியது அவசியம். நீரேற்றமாகவும் குளிர்ச்சியாகவும் இருப்பதற்கு சில குளிர்பானங்கள் அல்லது பழச்சாறுகளைக் குடிக்கலாம்.

இந்த சாறுகளை சர்க்கரை சேர்க்காமல் செய்ய வேண்டும். அப்போதுதான் நீங்கள் முழு பலனையும் பெற முடியும். வெப்பத்தைத் தணிக்க வழக்கமாக ஒரு கிளாஸ் குளிரூட்டப்பட்ட தண்ணீர் குடிப்பது போதுமானதாக இருந்தாலும், மற்ற நீரேற்றம் செய்யும் பானங்களையும் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். கோடையில் உடலை குளிர்ச்சியாகவும் உற்சாகமாகவும் வைத்திருக்க உதவும் பானங்கள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
எலுமிச்சை பானம்
கோடைகாலத்தில் அனைவரும் விரும்பி குடிக்கும் ஒரு பானம் எலுமிச்சை பானம். மலிவான விலையில் கிடைக்கும் எலுமிச்சை பானம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. கோடை காலத்தில் உங்களை குளிர்விப்பது மட்டுமல்லாமல், நீரிழப்பு ஏற்படுவதைத் தடுக்கவும் உதவுகிறது. மேலும், எலுமிச்சைப்பழம் செரிமானத்திற்கு உதவுகிறது, இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது மற்றும் எடையை குறைக்கவும் உதவுகிறது.
இந்த பானத்தில் கூடுதல் புத்துணர்ச்சியூட்டும் சுவைக்காக சில புதினா இலைகளையும் சேர்க்கலாம். புதினா இலைகளோடு, சிறிது துருவிய இஞ்சி மற்றும் எலுமிச்சைத் தோலையும் பானத்தில் சேர்த்து அருந்துவது கோடையில் குளிர்ச்சியாகவும் நீரேற்றமாகவும் இருக்க உதவும்.
ஐஸ் டீ
உங்களை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள பல வழிகள் இருந்தாலும், ஐஸ் டீ மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கலாம். கோடையில் குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்க ஐஸ் டீ ஒரு சிறந்த வழி. இது உடல் வெப்பநிலையைக் குறைக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும், இது உள் சமநிலையை மீட்டெடுக்க உதவுகிறது. செம்பருத்தி, தர்பூசணி மற்றும் துளசி, புதினா, எலுமிச்சை மற்றும் மாதுளை போன்ற பல சுவைகளில் ஐஸ் டீ நமக்கு கிடைக்கிறது.
கரும்பு சாறு
இந்தியாவில், கரும்புச் சாறு பரவலாக உட்கொள்ளப்படும் ஒரு பானமாகும். கரும்பு சாற்றில், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இரும்பு, மெக்னீசியம், கால்சியம் மற்றும் பிற தாதுக்கள் ஏராளமாக உள்ளது. உங்கள் உடலுக்கு புத்துணர்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுக்கும் கரும்பு ஜூஸ், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இருப்பினும், உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் பழச்சாறுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
பப்பாளி சாறு
இந்த பட்டியலில் அடுத்த இடம் பிடிப்பது பப்பாளி சாறு. அதிக நார்ச்சத்து மற்றும் பப்பேன்-உற்பத்தி செய்யும் என்சைம் காரணமாக, பப்பாளி செரிமானம் மற்றும் எடை இழப்புக்கு சிறந்தது. இது கோடை வெப்பத்தை தனித்து உங்களை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. கோடை வெப்பத்தை வெல்ல ஒரு அருமையான பானமாக இருக்கும் பப்பாளி, இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
துளசி விதை பானம்
உடல் சூட்டைக் குறைக்கும் சப்ஜா விதைகள் என்றும் அழைக்கப்படும் துளசி விதைகளைக் கொண்ட பானத்தை குடிப்பது வெப்பத்தை வெல்ல உதவும் மற்றொரு வழி. இந்த பானங்களைத் தயாரிக்க, 2 டீஸ்பூன் துளசி விதைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கு அரை கப் தண்ணீர் என்ற விகிதத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து துளசி விதையை அதில் சேர்த்து குடிக்கலாம். குளிர்சாதன பெட்டியில் வைத்தும் குடிக்கலாம்.
பருவகால பழச்சாறுகள்
கோடை வெப்பத்தை சமாளிக்க வீட்டில் பருவகால பழ பானங்களை செய்ய முயற்சிக்க வேண்டும். நீங்கள் கருப்பு திராட்சை சாறு, வைட்டமின் சி நிறைந்த அம்லா சாறு, மாதுளை சாறு மற்றும் ஆரஞ்சு சாறு ஆகியவற்றை வீட்டிலேயே தயார் செய்யலாம்.
இந்த பழச்சாறுகள் அனைத்தும் உங்களை புத்துணர்ச்சியூட்டுவதற்கும் வெப்பத்தை வெல்வதற்கும் சிறந்தது. மேலும், அவை அனைத்தும் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பல முக்கிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை கொண்டுள்ளன. கோடை வெப்பம் அதிகரிக்கும் இந்த நாட்களில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள பானங்களை குடித்து, உங்கள நீரேற்றமாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்துக்கொள்ளுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

