Latest Updates
-
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாகவும், மேதைகளாகவும் இருப்பார்களாம் - சாணக்கிய தந்திரம் -
மணமணக்கும் பன்னீர் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.!
பெண்களே! மழைக்காலங்களில் உங்களுக்கு உண்டாகும் பூஞ்சை தொற்றை எவ்வாறு தடுக்கலாம் தெரியுமா?
மழை காலங்களில் பல உடல் உபாதைகள் தோன்றும். ஈரப்பதமான வெப்ப நிலை, மழை நீர் போன்றவற்றின் காரணமாக பூஞ்சை தொற்று ஏற்படும் வாய்ப்புகளும் இருக்கும். இந்த காலத்தில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால், சருமம் எளிதில் காய்வதில்லை.
ஈரமான சருமத்தில் பூஞ்சை தொற்று அபாயம் தவிர்க்க முடியாததாக இருக்கும். ஆகவே இவற்றைப் போக்க பல எளிய வீட்டுத் தீர்வுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தகைய குறிப்புகளை பயன்படுத்தி பூஞ்சை தொற்றுகளை தடுக்கலாம். பூஞ்சை தொற்றைத் தடுப்பதற்கான வழிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

சருமத்தை வறட்சியாக வைத்துக் கொள்ளுங்கள்
எப்போதும் சருமத்தில் ஈரம் இல்லாமல் காய்ந்த படி வைத்துக் கொள்ளுங்கள். பொதுவாக உங்களின் கால் பாதங்கள் மழைக்காலங்களில் ஈரமாகவே இருக்கும். இதனால் கிருமி தாக்கி, சரும தொற்று ஏற்படும் வாய்ப்புகள் மழைக் காலத்தில் ஏராளமாக இருக்கும். ஆகவே மழை காலங்களில் பாதங்களில் ஈரம் பட்டால், உடனே நல்ல நீரில் சுத்தமாக கால்களைக் கழுவி, காய்ந்த டவலால் துடைத்து விடுங்கள்.
இதேயே உங்கள் கைகளுக்கும் செய்யுங்கள். ஒவ்வொரு முறையும் வீட்டு வேலைகளை முடித்தவுடன் பருத்தி துண்டால் கைகளை துடைத்துக் கொள்ளுங்கள். கைகளை ஈரமாக வைத்துக் கொள்ள வேண்டாம்.
கால்களுக்கு டால்க்கம் பவுடர் பயன்படுத்துங்கள்
மழைக் காலங்களில் மழை நீரால் மட்டும் கால்கள் ஈரமாக இருப்பதில்லை. முழுவதும் மூடிய ஷூக்களை அணிவதால் கால்களில் வியர்வை காரணமாகவும் ஈரம் ஏற்படுகிறது. இதனால் கிருமிகள் உற்பத்தி அதிகமாகி, சரும தொற்றை உண்டாக்குகின்றன.
ஆகவே எப்போதும் ஷூ அணிவதற்கு முன், பாதங்களில் சிறிதளவு டால்கம் பவுடர் தடவி பின்னர் ஷூ அணியலாம். டால்கம் பவுடர், வியர்வையை உறிஞ்சி, தொற்றில் இருந்து உங்கள் பாதங்களை பாதுகாக்கின்றன.
தண்ணீர் புகாத ஷூ
மழைக் காலங்களில் மழை நீர் உள்ளே புகாத ஷூவை பயன்படுத்தலாம். இந்த வகை ஷூ, உங்கள் சருமத்தை கிருமி தொற்றிலிருந்து பாதுகாக்கும். PVC யால் தயாரிக்கப்பட்ட ஷூவை பயன்படுத்துவதால், எளிய முறையில் அதனை துவைக்கவும் முடியும்.
தண்ணீரில் இருந்து கால்களை பாதுகாக்கவும் முடியும். திறந்த நிலையில் இருக்கும் ஷூவை பயன்படுத்துவதால் வியர்வை மற்றும் சரும தொடரில் இருந்து உங்கள் கால்களை பாதுகாக்கலாம் .
சரும தொற்றைத் தவிர்க்க டீ ட்ரீ எண்ணெய்
சரும தொற்றுகளைப் போக்க ஒரு சிறந்த மருந்து டீ ட்ரீ எண்ணெய். சருமத்தில் தொற்று ஏற்பட்ட இடங்களில் டீ ட்ரீ எண்ணெய் சில முறை தடவினால், அந்த தொற்று விரைவில் குணமடைகிறது. ஆனால் அதனை பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
பேக்கிங் பவுடர் பயன்படுத்தி சரும தொற்றைப் போக்கலாம்
சரும தொற்றைப் போக்க மற்றொரு சிறந்த தீர்வு, பேக்கிங் பவுடர். பேக்கிங் சோடா மற்றும் தண்ணீர் ஆகியவற்றைக் கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்டை சருமத்தில் தொற்று ஏற்பட்டிருக்கும் இடத்தில் தடவி. காய விடுங்கள். நன்றாக காய்ந்தவுடன் தண்ணீரால் கழுவி விடவும். சில முறை தொடர்ந்து இதனை செய்வதால், சரும தொற்று தடுக்கப்படும்.
மழைக் காலத்தில் ஆரோக்கியமான சருமத்திற்கு வினிகர்
சருமத்தில் பூஞ்சை தொற்று பாதிக்கப்பட்ட இடத்தில் வினிகர் தடவுவதால், நல்ல பலன் கிடைக்கும். வினிகர் சருமத்தின் ஈரப்பதத்தை உறிஞ்சி, சருமத்தை காய வைக்கிறது. இதனால் சருமத்தில் ஏற்பட காயம் ஆறி இயற்கையான முறையில் சருமத்தொற்று தடுக்கப்படுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
